search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது.
    • இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்,தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான பிரீத்தா தலைமை தாங்கினார்.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சரவணகுமார்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி,குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சிதி ரம்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் இலவச சட்ட உதவி குறித்தும் அரசு நலத்திட்டங்கள் இலவச சட்ட உதவி மையம் மூலம் எவ்வாறு பெறலாம்,குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், என்பது குறித்தும்,குழந்தை திருமணம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார்,வார்டு உறுப்பினர்கள் பாரதி ராஜா,ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சேர்ந்த நம்பிராஜன் பால் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நேற்று இரவு தொழிலாளி மகே தனது வீட்டு முன்பு நின்ற போது வந்த 3 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.
    • முகேஷ் தலைமறைவாகி விட்டதால் அவரது நண்பரான மகேசை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தவராஜ். இவரது மகன் மகேஷ்(வயது 19). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 3 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாடசாமி(19), முத்துகுமார், தடிக்காரன்(20) ஆகியோர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடந்த 5-ந்தேதி மாடசாமியின் தந்தை முத்துக்குமார்(39) என்பவரை மகேசின் நண்பர் முகேஷ் தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் முகேஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் தனது தந்தையை தாக்கியவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். ஆனால் முகேஷ் தலைமறைவாகி விட்டதால் அவரது நண்பரான மகேசை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் பாரதிநகர், கரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் புண்மை யாக வாசனம், மகாகணபதி ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை பிரவேசபலி ஜைன வாசம், பூர்ணாகுதி,யந்திர ஸ்தாபனம்,விக்கிரக பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது.

    இன்று காலை4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சிக்குப் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் கருமாரியம்மன், பத்ரகாளி யம்மன், முத்தா ரம்மன், துர்க்கையம்மன், முக்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ நாகராஜா, நாககன்னி ஆகிய தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர 56-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுயம்பு, ஓட்டப்பிடாரம் தொகுதி சண்முகையா எம்.எல்.ஏ.மற்றும் சுற்று வட்டார பிரமுகர்கள், பாரதிநகர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சந்திரகுமாருக்கு அவருடன் வேலை பார்த்து வரும் சில தொழிலாளர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
    • போலீசார் படுகாயமடைந்த சந்திரகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது22). கட்டிட தொழிலாளி.

    அரிவாள் வெட்டு

    இவருக்கும் அவருடன் வேலை பார்த்து வரும் சில தொழிலாளர்களுக்ம் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை சந்திரகுமார் தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள யார்டு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் சந்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    6 பேருக்கு வலைவீச்சு

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த சந்திரகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் முன்விரோதம் காரணமாக சக தொழிலாளிகள் சந்திர குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அதன்பேரில் வேல்ராஜ், ருக்மன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அவர்களை தேடி வருகின்றனர்.

    • பஸ் நிலைய வளாகத்தில் வைத்து சரவணக்குமாரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது.
    • சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரைண்ட்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது28). பெயிண்டர்.

    கொலை

    நேற்று இரவு இவர் தனது உறவினரை வழியனுப்புவதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது பஸ் நிலைய வளாகத்தில் வைத்து அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது. பஸ் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    எஸ்.பி.விசாரணை

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை தொடர்பாக வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபிசுஷின்ஜோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 பேரை பிடித்து விசாரணை

    சரவணக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது. இவர் தாளமுத்துநகரில் வசித்து வந்துள்ளார். அப்போது சரவணக்குமாருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பிரைண்ட்நகருக்கு வந்துள்ளார்.

    இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் வந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 250 கிலோ காப்பர் ஒயர்களை போலீசார் மீட்டனர்.

    தூத்துக்குடி:-

    தூத்துக்குடி மாவட்டம் புதூர்பாண்டியாபுரம் அருகே காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.

    ஒயர் திருட்டு

    கடந்த மாதம் இங்குள்ள ரூ. 2 லட்சம் காப்பர் ஓயர்கள் திருட்டு போனது. இது தொடர்பாக காற்றாலை மேலாளர் கணேசன் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குலசேகரன்பட்டினத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்தக் கும்பலில் இருந்த மடத்தூரை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது34) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புதூர்பாண்டியாபுரம் காற்றாலையில் திருடியது தெரியவந்தது. மேலும் அவருடன் சிவா, செல்வக்குமார் , தனகுருசிங், அருணாச்சலம், மற்றொரு செல்வக்குமார் ஆகியோர் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 250 கிலோ காப்பர் ஒயர்களை மீட்டனர். மாரிச்செல்வம் மீது தூத்துக்குடியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளது.

    • ஓட்டல் தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த கும்பல் பொன் செந்தில்முருகனை வெட்டி கொலை செய்தது.
    • தடுக்க வந்த வியாபாரி பழனிமுருகன் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ்நகரில் கருப்பசாமி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    ஓட்டல் தொழிலாளி

    இவரது கடையில் முடிவைத்தானேந்தலை சேர்ந்த பொன்செந்தில் முருகன், மடத்தூரை சேர்ந்த தேவராஜ், சாயர்புரத்தை சேர்ந்த சாமுவேல் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த ஓட்டலுக்கு 3-வது மைல் பகுதியை சேர்ந்த சிலர் அடிக்கடி சாப்பிட வருவது வழக்கம். அப்போது அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில் தகராறு செய்துள்ளனர்.

    வெட்டிக் கொலை

    அதனை கருப்பசாமியும், ஓட்டல் தொழிலாளர்களும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கும்பல் பொன் செந்தில்முருகனை வெட்டி கொலை செய்தது.

    மேலும் 3 பேருக்கு வெட்டு

    மேலும் தொழிலாளர்கள் வேதராஜ், சாமுவேல் மற்றும் தடுக்க வந்த வியாபாரி பழனிமுருகன் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்தினர்.

    8 பேர் சிக்கினர்

    இதில் தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த தினேஷ் (23), அவரது தம்பி கற்குவேல் (19), முத்தம்மாள் காலனியை சேர்ந்த ராபர்ட் ரகு (23), ராஜூவ்நகரை சேர்ந்த மிக்கேல் அந்தோணி அரவிந்த் (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் (21), முருகேசநகரை சேர்ந்த சக்திவேல் (19), விஷ்ணு (18) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 8 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட அலுவலகத்தில் கருணா நிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா சுரேஷ் காந்தி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாப்பிள்ளையூரனி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், மற்றும் டி.டி.சி. ராஜேந்திரன், அந்தோணி ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் அவரை கீழே தள்ளி நகையை பறித்து சென்றுள்ளனர்.
    • இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சால்ட் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது54).

    இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவன்-மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் கோரம்பள்ளம் அடுத்த மறவன்மடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து சென்றனர். இதனால் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாாக அவர் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் மர்மகும்பலை தேடி வருகின்றனர். 

    • அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது.
    • 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சியானது மக்களுக்கான மாநகராட்சி யாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

    தற்போது மாநகரின் எதிர்கால நலன் மற்றும் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சியை குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றிட அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலான பணிகள் நாள்தோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகராட்சியின் 15-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநகரிலுள்ள முக்கிய இடங்களிலும், அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது. இந்த நவீன கழிவறைகள் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது. நமது இந்திய திருநாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தூத்துக்குடி மாநகரில் நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. வார்டு வாரியாக பணியாளர்கள் வீடுவீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலெக்சை மது குடிக்க அழைத்து அதிக அளவு மதுகுடிக்க வைத்து வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
    • இந்த கொலையில் தூத்துக்குடி கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கிமணி என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற சில்லி (வயது 28). உப்பள தொழிலாளி.

    இவரை கடந்த 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர். விசாரணையில் மகேசின் சகோதரரான ரமேஷ் என்பவரை கடந்த ஆண்டு அலெக்ஸ் கத்தியால் குத்தியதாகவும், அந்த முன்விரோதத்தில் அலெக்சை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதும், அதன்படி தனது வீட்டுக்கு மது குடிக்க அழைத்து அதிக அளவு மதுகுடிக்க வைத்து வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    கைது

    மேலும் கொலையில் தூத்துக்குடி கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கிமணி (22) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    • முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.இதனால் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து போடும் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் அப்போது அவர் கூறுகையில்,

    நமது மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார், ஏற்கனவே மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகளை மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்துமாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.கே.நகர் மெயின் ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்லும் தென்பகுதி முழுவதும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து கிடந்தன,முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.

    இதனால் முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் செடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    முதல் கட்டமாக கே.வி.கே. சாமி நகர் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.

    இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்,மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

    அதன்படி தூத்துக்குடியில் பணிகள் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் உள்ள முட்செடிகள் அனைத்தையும் அகற்றி முட்செடிகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார், நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ரங்கசாமி முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் சுகாதார அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×