search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    பெரும்பாலான கட்சிகள் தங்களின் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில், பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், அதிமுக வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மார்ச் 24ம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

    மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    மார்ச் 26ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், அன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மார்ச் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியிலும், இரவு 7 மணிக்கு தென்காசி (தனி), 28ம் தேதி விருதுநகர், ராமநாதபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து, 29ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
    • நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.

    நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.
    • பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    புதுச்சேரி:

    60 ஆண்டுகளுக்கு முன்பு புதிய படங்கள் திரையங்குகளுக்கு வரும்போது பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஆட்டோ, ரிக்ஷா, மற்றும் மாட்டு வண்டிகளில் போஸ்டர்களை ஒட்டி, துண்டு பிரசுரங்களை கொடுத்து விளம்பரம் செய்வார்கள்.

    அதேபோன்று அந்த கால சினிமா விளம்பரங்களை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இன்று கழு மரம் பட குழுவினர் மாட்டு வண்டியில் போஸ்டர்களை ஒட்டி கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் மைக் செட் போட்டு அனைவரையும் படம் பார்க்க கூவி கூவி அழைத்தனர்.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் கழு மரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.


    புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டு பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    சினிமா போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டி வீதி வீதியாக செல்லும்போது அதைப் பார்த்த பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    • எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.
    • விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களின்போது குழந்தைகளை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் பிரசார மேடைகளில் குழந்தைகளை பேசவைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது.

    எந்த வடிவத்திலும் குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டாம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது, எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

    கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் தேர்தலின் போது குழந்தைகளை எந்த விதத்திலும் பயன்படுத்துவதில் பூஜ்ஜிய தன்மையை உறுதிபடுத்த வேண்டும்.

    குழந்தைகளை தங்கள் கைகளில் வைத்திருப்பது, சுமப்பது உட்பட எந்த வகையிலும் ஈடுபடுத்தக்கூடாது. வாகனத்தில் அல்லது பேரணியில், கவிதை, பாடல், பேச்சுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.

    வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இதை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.
    • மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார்.

    அப்போது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு பாடல் பாடினார். அதில் வருவது போல் தெலுங்கானாவில் ரகசிய தொடர்பு உள்ளது என கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க, சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் ஒவைசி கட்சிகள் ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.

    நாட்டு நாட்டு பாடலைப் போல் அவர்களுக்குள் ரகசிய தொடர்பு உள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரசியுங்கள். ஆனால் பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.

    பாராளுமன்றத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக சந்திரசேகர ராவ் கட்சி செயல்பட்டுள்ளது. அந்த கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    சந்திரசேகர ராவ் கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களை எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்க பிரதமர் அனுமதிக்க மாட்டார். மேலும் தெலுங்கானாவில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசமாட்டார்.

    அதே நேரத்தில் தவறுகள் எதுவும் செய்யாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை பிரதமர் ஏவி விடுவார், ரகசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசி வட மாநிலங்கள் வரை வந்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார்.

    ஆனால் தெலுங்கானாவில் 19 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடமாட்டார் .

    ஏனென்றால் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை ஆதரிக்கிறார் .நீங்கள் அந்த 3 கட்சிகளில் எதற்கு வாக்களித்தாலும் அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.

    எனவே மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

    அவரால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை.

    அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக அரசியல் அதிகாரத்தை பெறுவது பகிர்ந்து அளிப்பதில் தான் அவரது கவனம் உள்ளது.

    இனி அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் மாநிலத்திற்கு நன்மை வேண்டுமென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    மேலும் தெலுங்கானா போராட்டத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்குவோம். மக்களுக்காக அளித்த வாக்குகளை நிறைவேற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை.
    • தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மூலம் செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். மேலும் தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார். குறிப்பாக மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத பெண்களிடம் பேசி அவர்களது ஆதரவை பா.ஜனதா பக்கம் திருப்ப வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த 80லட்சம் பெண்களிடமும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதவிர வரும் நாட்களில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக அதிக அளவு குற்றச்சாட்டுக்களை வெளியிடவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாக அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

    • டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார்.
    • சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநில தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முயற்சி செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி போபாலில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபாலில் இன்று பா.ஜ.க. சார்பில் கார்யகா மஹா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போபாலின் ஜம்போரி மைதானத்தை அடைந்தார்.

    பின்பு அவர் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்றார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா ஆகியோரும் வந்தனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். முன்னதாக கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றியமைக்காக பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மத்தியபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி
    • எங்களை நாடி வருபவர்களை மதிப்போம்

    குழித்துறை :

    அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நாங்கள் தான் தொடங்கி உள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் மழை வடிவில் எங்களை வாழ்த்தினர். 38 மாவட்டங்களிலும் எங்கள் பொது செயலாளர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார். எங்களை நாடி வருகிறவர்களை நாங்கள் மதிப்போம். பலர் எங்களை தேடி வருகின்றனர். எங்கள் கூட்டணி பலமாக அமையும். விரைவில் நல்ல முடிவு வரும். அதை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.

    எங்கள் கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தான் போட்டி நடைபெறும். நடிகர் ரஜினிகாந்தை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்ததை ஜெயக்குமார் தவறாக கூறியுள்ளார். கோடநாட்டில் நடந்த கொலை கொள்ளைகளுக்கு எடப்பாடி பழனிசாமிடம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சிறை சென்று விட்டால் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாகி விடும்.

    சசிகலா வந்தால் நல்லது சின்னம்மாவுடன் நீண்ட நாள் நான் பயணம் செய்துள்ளேன். மணிப்பூர் கலவரம் குறித்து கண்டனம் தெரிவித்து ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. ஏனென்றால் மணிப்பூர் எங்கே இருக்கும் என்று அவருக்கு தெரியாது. பாரதிய ஜனதா லஞ்சத்தை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குபவர்களை கூடவே வைத்துள்ளனர். அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக நடக்காமல் 3 நாள் நடந்து விட்டு மறுநாள் கோயம்புத்தூர் போய் நிற்கிறார். மீண்டும் நடைபயணம் செல்கிறார். இது நடைபயணமா என்றே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ராஜா டைட்டஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரெத்தினசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

    • வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    அரவேணு,

    கோத்தகிரி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 மையங்களில் வாகன பிரசாரம் நடத்தப்பட்து.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடத்தப்பட்டது.

    இடைக்குழு செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், ரஞ்சித், சிவகுமார், ஜெயகாந்தன், டி.ஒய்.எப்.ஐ. இடைக்குழு செயலாளர் பகத்சிங், எஸ்.எப்.ஐ. தாலுகா தலைர் சுகுந்தன், டி.ஒய்.எப்.ஐ. நகர கிளை அமைப்பாளர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
    • விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வும் கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.

    பிரசார வாகனங்கள்

    இந்த நிகழ்ச்சிக்கு கபி லர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமை வகித்தார். பிர சார வாகனங்கள் கபிலர் மலை வட்டார வேளாண் மைத்துறை அட்மா திட்ட தலைவர் சண்முகம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் சார்பு துறைகளின் அனைத்து நிலை அலுவ லர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் மற்றும் ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தியும், சிறுதானியங்களில் உள்ள ஊட்டமிகு சத்துக்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் வாகனங்களில் பதாகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானிய சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

    ×