search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா"

    • முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
    • கடந்த 5 ஆண்டுகளில் இவர் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

    அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

    வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    இன்று காலையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் இவர் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார். 2019ல் காங்கிரசில் இருந்து விலகி, 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்பு அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு அங்கிருந்து பாஜகவுக்கு சென்ற அவர், 2024 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசுக்கே திரும்பியுள்ளார். 

    • அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன்.
    • அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். இவர் தோஷம் (Tosham) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அரியான மாநில முதல்வர் பான்சி லால் பேரன் அனிருத் சவுத்ரிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீரேந்திர சேவாக் கூறுகையில் "அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன். அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார். அவருக்கு இது மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்று. அவருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். தோஷம் தொகுதியில் உள்ளவர்கள் அனிருத் சவுத்ரி வெற்றிக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன்" என வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    தோஷம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அனிருத் சவுத்திரி (48) முன்னாள் பிசிசிஐ தலைவர் ரன்பீர் மஹேந்திராவின் மகன் ஆவார். இவர் அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்து பான்சி லால் பேரன் ஆவார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பான்சி லாலின் இளைய மகன் சுரேந்தர் சிங்கின் மகள் ஸ்ருதி சவுத்ரி (48) போட்டியிடுகிறார். இதனால் தோஷம் தொகுதி குடும்ப விவகாரமாகியுள்ளது.

    "விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது. இதனால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை சரி செய்வதில் அரசு தோற்றுவிட்டது. இந்த பகுதியில் முன்னேற்றம் இல்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

    பான்சி லால் குடும்பத்தின் கோட்டையாக தோஷம் தொகுதி விளங்குகிறது. பான்சி லால் இந்த தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். சுரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி கிரண் சவுத்ரி பலமுறை வெற்றி பெற்றுள்ளனர். 2019-ல் கிரண் சவுத்ரி 18059 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்திருந்தார். 

    • தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீம் மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பு கோரி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளூர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா தேர்தல் நடக்க உள்ள நிலையில் ராம் ரஹீமின் பரோல் நீட்டிப்பு கோரிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

     

    ராம் ரஹீமின் தற்போதைய பரோல் நீட்டிப்பு கோரிக்கை மனுவை ஹரியானா அரசு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராம் ரஹீமிற்கு அரசியல் உள்நோக்கத்துடன் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் கடும் நிபந்தனைகளுடனேயே பரோல் வழங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    அவரின் 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தனது தண்டனைக்கிடையில் 255 நாட்கள் பரோல் விடுப்பில் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார் சாமியார் ராம் ரஹீம். 

    • ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.

    அரியானாவில் வருகிற 5-ந்தேதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் பா.ஜ.க.-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் பகதூர்கர் நகரில் ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.

    பிரசாரத்திற்கு நடுவே ராகுல்காந்திக்கு தொண்டர்கள் பஜ்ஜி கொடுத்தனர். அப்போது அருகில் இருந்து காவலர் ஒருவருக்கும் ராகுல்காந்தி பஜ்ஜி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது.
    • நாட்டின் வேலைவாய்ப்பு அமைப்பை பிரதமர் மோடி முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

    பா.ஜனதா ஆளும் அரியானாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானாவின் கர்னால் மாவட்டத்துக்கு உட்பட்ட அசாந்தில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பிரசாரம் செய்தார்.

    அப்போது மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரியானாவை ஆளும் பா.ஜனதா அரசு, மாநிலத்தை முற்றிலும் சீரழித்து விட்டது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது. நாட்டின் வேலைவாய்ப்பு அமைப்பை பிரதமர் மோடி முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

    சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது அரியானாவில் இருந்து அங்கே சென்ற சிலரை சந்தித்தேன். தங்கள் சொந்த மாநிலத்தில் தங்களுக்கான வேலை கிடைக்காததால், சிறந்த எதிர்காலத்துக்காக அமெரிக்கா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், 2 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்துள்ளோம். இதைத்தவிர பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 மற்றும் ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    இந்த நாட்களில் பிரதமர் மோடியின் முகத்தை பார்த்தீர்களா? முன்பெல்லாம் தனக்கு 56 அங்குல மார்பு இருப்பதாக கூறி வந்த அவர், தற்போது கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.

    அவர் பீதியடைந்தார். அவர் நேரடியாக கடவுளிடம் பேசுவார் என்று நாட்டு மக்களிடம் கூறுகிறார். ஆனால் (லோக்சபா) தேர்தலில் கடவுள் அவருக்கு பாடம் கற்பித்தார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாஜக வேட்பாளரை சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தோற்கடித்தார்.

    மோடி என்ன செய்கிறார்? உங்களிடம் உள்ள விவசாய நிலத்தை அதானிக்கு கொடுத்தார். ஹரியானா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது ஆனால் அவர் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார்

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய்பான், காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி, பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது
    • இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன்.

    அயோத்தியில் பாபர் மசூதி  சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர்.

    நான் சொல்வதெல்லாம் இதுதான், பிரிந்து கிடந்தால் தனித்தனியாக இருப்பீர்கள், ஒற்றுமையாக இருந்தால் எந்த தாய்க்கு பிறந்தவனாலும் உங்களின் தலை முடியைக் கூட அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்து விஷ்வ பரிஷத் உள்ளிட்ட தீவிர வலதுசாரி இந்துத்துவ இயக்கத்தினரால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.1800 கோடி செலவில் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • லாடோ லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும்.
    • குறைந்தபட்ச ஆதாய விலை உத்தரவாதம், அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பு இடம் பிடித்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    மத்திய உள்துறை மந்திரியும், பாஜக-வின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அம்மாநில முதல்வர் சைனி, மாநில தலைவர் மோகன் லால் படோனி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    தேர்தல் அறிக்கையில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஆதாய விலை உத்தரவாதம், பெண்களுக்கு நிதியுதவி ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளது.

    லாடோ லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும். 10 தொழில் நகரங்கள் கட்டப்படும் என்றும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியிலும் ஓபிசி, எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஹரியானா மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிரீமி லேயரின் வருமான வரம்பு ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்
    • வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

    அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி அரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அரியானாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும் நாற்காலியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும் தனியாக களமிறங்கியுள்ள நிலையில் கடுமையான போட்டியாக மாறி உள்ளது.

    இந்தநிலையில் மக்களைக் கவரும் அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ.2000, விவசாயிகளின் கோரிக்கை விடுத்திருந்தபடி, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இந்த முக்கிய உத்தரவாதங்களைத் தவிர, கட்சியின் 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து சண்டிகரில் விரிவாக விளக்கப்படும் என்று கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
    • போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.

    இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
    • அதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது என்றார்.

    சண்டிகர்:

    அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

    மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களைப் பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.

    அரியானாவின் முதல் மந்திரி நயாப் சிங் சயினி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதேபோல் அரியானாவிலும் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது.
    • காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்- மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.

    அரசமைப்புச் சட்டத்தின் கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

    அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ந் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ந் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மாநிலத்தில் அக்டோபா் 5-ந் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.

    இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை கவர்னர் நேற்று (வியாழக்கிழமை) கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். அரியானா பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்.

    சண்டிகர்:

    இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால்.

    ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவின் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

    நேற்று பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. ஹிசார் தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.

    பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

    ×