search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
    • பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து வங்காளேதச நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய மந்திரிகளுடன் ஆலோசித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன் படி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

    மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா-வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்காளதேச அரசியல் சூழல், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கூட்டத்தில் விரிவான விளக்கத்தை அளித்தார்.

    பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவினையும், புரிதலையும் பாராட்டுவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.


    • போராட்டங்கள், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்காளதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்காளதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    • வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
    • ராணுவம் இடைக்கால அரசு அமைக்கும் என தளபதி அறிவிப்பு.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காளதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கும் அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப்படை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார்.

    அவர் பேஸ்புக் இணையதளத்தில் "உள்துறை மந்திரி அமித் ஷா உடன் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருகின்றன. இதன்காரணமாக வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள திரிபுரா, மேற்கு வங்காளம், மேகாலயா, அசாம் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. திரிபுரா 856 கிலோ மீட்டர் எல்லையை வங்காளதேச நாட்டு எல்லையுடன் பகிர்ந்துள்ளன.

    • எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்.
    • இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

    இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதனால் இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லண்டன் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி "வங்காள மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

    இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும். மேலும் மேற்கு வங்காள மாநிலத்திலேயே அல்லது நாட்டிலோ அமைதியை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். சில பாஜக தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். அதை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

     இதையடுத்து வங்காளதேசத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால் வன்முறை ஓய்ந்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் இணைய தள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இணைய தளம் மற்றும் மொபைல் இணைய இணைப்பு தற்போது முழு செயல்பாட்டுடன் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    • வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
    • இந்தப் போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதன்பின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது.

    மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டி.வி. நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு என பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

    வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து, அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டே இருந்தது.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
    • நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன்

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று  பீகார்  ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், வங்காளதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் மற்றும் பிகார்  பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

    வங்காளதேசத்தில் இருந்து வந்து பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் குடியேறிய இஸ்லாமியர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொள்வதால் , இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்.

    நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன். எனவே வங்க தேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பிகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும்   பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    • முதலில் விளையாடிய வங்காளதேசம் 191 ரன்கள் குவித்தது.
    • அதனை தொடர்ந்து விளையாடிய மலேசியா 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80 ரன்னும் சுல்தானா 62 ரன்களும் விளாசினர். மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மலேசியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஐன்னா ஹமிசா ஹாஷிம்- வான் ஜூலியா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஐன்னா ஹமிசா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்னிலும் வான் ஜூலியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பி பிரிவில் முதல் அணியாக மலேசியா வெளியேறியது. 

    • கடந்த 15-ந்தேதி தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது.
    • தற்போது சில இடங்களில் பிராட்பேண்ட் இன்டநெட் வழங்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது. டி.வி. நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு என பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர்.

    இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. வன்முறை கட்டுக்குள் வராததால் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது.

    இதற்கிடையே உச்சநீதிமன்றம் வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்தது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அதிகாரிகள் டாக்கா மற்றும் வங்காளதேசத்தின் 2-வது மிகப்பெரிய நகரமான சட்டோகிராமில் சில பகுதிகளில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் சில மணி நேரங்கள் திறந்து இருந்தன.

    இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இன்டர்நெட் முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. அதிகாரிகள் ஊரடங்கை ஏழு மணி நேரம் குறைத்ததால் சாலைகள் கார்கள் அதிக அளவில் இயங்கின.

    கடந்த 15-ந்தேதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    • தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
    • சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.

    • நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
    • நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவர்களால் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட பலர் பலியாகினர்.

    இதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வங்காளதேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது.

    அதே போல் திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமான 30 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில், "அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • இலங்கையின் பிரபோதானி, பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணியின் துவக்க வீராங்கனை திலாரா அக்தர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீராங்கனை இஷ்மா, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருபாயா ஹைடர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவரும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டமே சேர்த்தது.

     


    இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபோதானி மற்றும் பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி மற்றும் சமாரி அட்டப்பட்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    112 எனும் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீராங்கனையான விஷ்மி குனரத்ன 51 ரன்களை குவித்தார்.

    இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களையும் அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி 12 ரன்களையும் சேர்த்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களை குவிக்க, இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ×