search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174792"

    • தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களும் 100 ஆண்டு களுக்கு முன்பே உள்ளது.

    ஆங்கிலேயர்கள் இலங்கை செல்ல தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமைத்து ரெயில் போக்குவரத்து நடைபெற்ற போது காரைக்குடி, மானா மதுரை ரெயில் நிலை யங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து வந்தது. ஆனால் அகல ரெயில் பாதைபணி முடிந்த பின் குறைந்த அளவு ரெயில் வசதியே உள்ளது.

    தற்போது ராமேசுவரம்- சென்னை மார்க்கத்தில் தினசரி 2 ரெயில்கள் மட்டுமே உள்ளது. வாரந்திர ரெயில்களும் தற்போது ராமேசுவரம் வரை செல்லா ததால் அடிக்கடி ரத்து செய்யபடுகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தற்போது பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களை புறக்கணித்து ரெயில் நேர அட்டவணை தயார் செய்யபட்டு அந்த சிறப்பு ரெயில் நிற்காமல் காரைக்குடியை அடுத்த அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

    மிகப்பெரிய ரெயில் நிலையமாக உள்ள மானா மதுரையிலும், மாவட்ட தலைநகரமாக உள்ள சிவகங்கையிலும் நிற்காமல் செல்வதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர்.

    செங்கோட்டை அதி விரைவு ரெயிலை நிறுத்தா மல் தென்னக ரெயில்வே புறக்கணிப்பதாக பயணி கள் கூறுகின்றனர். தற்போது வரும் ஜுன் முதல் தேதியில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் செல்ல உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அதிவிரைவு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. 2 டயர் ஏசி 2, 3 டயர் ஏசி 5, படுக்கை வசதி கொண்ட பெட்டி 5. பொதுப்பெட்டிகள் 3,2 சுமைகள் ஏற்றும் வசதி கொண்ட பெட்டி என மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக் கப்பட உள்ளது.

    வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமை இயக்கப்பட உள்ள இந்த ரெயில் ஜுன் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங் கோட்டையை சென்ற டையும். மறுமார்க்கமாக வண்டி எண்.20684 செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

    விழுப்புரம், மயிலா டுதுறை உள்ளிட்ட 16 இடங்களில் நின்று செல் லும் என்றும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக் குடியில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் இல்லாத கமுதி, பார்த்திபனூர், அபிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தென் னக ரெயில்வே நிர்வாகம் இந்த அதிவிரைவு ரெயிலை தலைநகரான சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தாமல் புறக்க ணித்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சிவகங்கை, மானாமதுரை யை இந்த ரெயில் புறக்கணிப்பதால் சிவகங்கை எம்.பி., சிவகங்கை, மானாமதுரை எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து சிறப்பு ரெயிலை சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தி செல்ல வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் தஞ்சை ரெயில் நிலையம் வந்தது.
    • இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    மும்பை- தூத்துக்குடி- மும்பை இடையே தஞ்சை, கும்பகோ ணம் வழியாக நேரடி சிறப்பு ரெயில் புதிதாக இயக்கப்பட்டது.

    இரு மார்க்கங்களிலும் இரண்டு தடவை ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி மும்பையில் இருந்து கடந்த 26-ந் தேதி கும்பகோணம், தஞ்சை வழியாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்பட்டது.

    அடுத்து ஜூன் 2-ம் தேதி இயக்கப்படுகிறது.

    இதேபோல் தூத்துக்குடி யில் இருந்து நேற்று தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயில் இன்று மாலை மும்பைக்கு சென்றடையும்.

    அடுத்ததாக ஜூன் 4-ஆம் தேதி ரெயில் சேவை இயங்கும்.

    இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் மாலையில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது .

    அப்போது இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் ரெயிலை இயக்கிய ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ரெயிலில் வந்து தஞ்சையில் இறங்கிய பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    அப்போது தூத்துக்குடி -மும்பை இடையே இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவையை நிரந்தரப்படு த்த வேண்டும்.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்று காவிரி டெல்டா ரெயில்வே உபயோ கிப்பா ளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சி யில் சங்க பொருளாளர் வக்கீல் உமர்முக்தர், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, கண்ணன், ரெங்கராஜ், பைசல் , வேதப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    தஞ்சாவூர்:

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரெயில் சேவைைய ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06035), ஜூன் மாத சனிக்கிழமைகளான 3, 10, 17 மற்றும் 24-ம் தேதிகளில் பிற்பகல் 1.10 மணிக்கு எர்ணாகுளம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    அதேப்போல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036), ஜூன் மாத ஞாயிற்றுக்கிழமைகளான 4,11,18 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தி இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
    • பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    கோவை,

    தூத்துக்குடி-கோவை இடையே ெரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.

    ெகாரோனாவுக்கு முன்பு வரை தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ெரயில், வாஞ்சி மணியாச்சி ெரயில்நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ெரயிலுடன் இணைத்து இயக்கப்பட்டு வந்தது.ெகாரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ல் நாடு முழுவதும் பல்வேறு ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதில், இந்த ெரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    ஆனால், நிலைமை சீரானபிறகு இந்த ெரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, இந்த ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போத்தனூர் ெரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாரம் மும்முறை ெரயில் இயக்க ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது: துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து நிறைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கோவை, திருப்பூர், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் பல பொருட்கள் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, சரக்குகளை ஏற்றிச்செல்ல இந்த ெரயில் பயனுள்ளதாக இருக்கும், கடல் மீனுக்கான சந்தை வாய்ப்பு இங்கு உள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து இரவில் மீன்களை ெரயிலில் ஏற்றி அனுப்பினால், காலையில் அவை இங்கு வந்து சேர்ந்து விடும். இதனால் வியாபாரிகள் பயன்பெறுவர். நீலகிரியில் விளையும் பல்வேறு காய்கறிகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லவும் இந்த ெரயில் பயன்படும். பயணிகளைப் பொருத்தவரை, திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வரமுடியும்.

    தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பஸ்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கும் இந்த ெரயில் பயன்தரும். மேட்டுப்பாளையத்துக்கு நேரடியாக இந்த ெரயிலை இயக்கும்போது, தென் மாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரி வந்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் 2 முறை மட்டும் இயங்கும்.
    • காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்தநிலையில் மும்பை-தூத்துக்குடிக்கு இடையே தஞ்சை, கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கோடைகால நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் இரண்டு முறை மட்டும் இயங்கும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 2-ந் தேதியும் மும்பையில் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி (9.03 மணி), காஞ்சீபுரம் (10.08 மணி), கும்பகோணம் (மாலை 3.45 மணி), பாபநாசம் (3.59 மணி), தஞ்சை (4.23 மணி), மதுரை (இரவு 7.55 மணி), வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.

    தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மற்றும் ஜூன் மாதம் 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மதுரை காலை 6.30 மணி, தஞ்சை 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சீபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு 29-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.

    பயணிகள் பயன்பாட்டை பொருத்து, இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த ஒரே ரெயில் இயக்கத்தின் மூலம் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரெயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெயில்வே நிர்வாகத்துக்கு தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

    • வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன.
    • ‘பின்வாங்கிய’ இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

    திருவனந்தபுரம் :

    வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் கேரள மாநிலத்தில் நடந்திருக்கிறது.

    அங்கு சோரனூரை நோக்கி வேனாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் சென்றது.

    காலை 7.45 மணியளவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செரியநாடு என்ற சிறிய ரெயில் நிலையத்தை நோக்கி வந்த அந்த ரெயில், வழக்கமான நிறுத்தமான அந்நிலையத்தில் நிற்காமல் கடந்துவிட்டது. அங்கு அந்த ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் திகைத்தனர்.

    டிரைவர் தனது தவறை உணர்ந்தபோது சுமார் 1 கி.மீ. தூரம் தாண்டிவிட்டது. அதன்பிறகு நிறுத்திய அவர், ரெயிலை 'ரிவர்சில்' கொண்டுவந்து பயணிகளை ஏற்றிச்சென்றார்.

    இந்தக் குழப்பத்தால் ஏற்பட்ட நேர இழப்பை, ரெயிலை விரைவாக இயக்கி சரிக்கட்டிவிட்டார் என்ஜின் டிரைவர். சோரனூர் ரெயில் நிலையத்தை சரியான நேரத்தில் சென்றடைந்துவிட்டது அந்த ரெயில். அதனால், 'பின்வாங்கிய' இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இதுகுறித்து என்ஜின் டிரைவரிடம் ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

    'பெரிய ரெயில் நிலையங்களில்தான் சிக்னல்கள் இருக்கும். செரியநாடு ஒரு சிறிய ரெயில் நிலையம் என்பதால் அங்கு சிக்னல் இல்லை. அதனால் என்ஜின் டிரைவர் கவனக்குறைவாக அந்த நிலையத்தை தவறவிட்டு சென்றிருக்கலாம். சுமார் 700 மீட்டர் வரை அந்த ரெயிலை பின்னோக்கி இயக்க வேண்டி வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட 8 நிமிட நேர இழப்பை அந்த என்ஜின் டிரைவர் பின்னர் சரிசெய்துவிட்டார்' என்று ஒரு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

    இதே போன்றதொரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. அப்போது 'பிரேக்' செயலிழந்ததால் ஒரு ஜன சதாப்தி ரெயிலை நிறுத்த முடியவில்லை. பயணிகள் பீதி அடைந்த நிலையில் ஒருவாறு ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர், பின்னர் சுமார் 20 கி.மீ. தூரம் ரெயிலை பின்னால் இயக்கி குறிப்பிட்ட நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்.

    • ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.
    • சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைய உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

    இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `சுரங்கப் பாதை துளையிடும் எந்திரம் விரைவில் தயார் செய்யும் பணி தொடங்கப்படும். இது அடுத்த மாதத்தில் முடிவடையும். எனவே ஜூலை மாதம் முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது என்றார்.

    • இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது.
    • மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும்.

    கோடைகால விடுமுறையில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோடைகாலத்தை முன்னிட்டு ரெயில்கள் மூலம் சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றது. அதன்படி, தாம்பரம்-திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் வேளங்கண்ணி, திருவனந்தபுரம்-மங்களூரு, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும், தெற்கு ரெயில்வேயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 37 கோடைகால சிறப்பு ரெயில்களை இயக்க மற்ற ரெயில்வே மண்டலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மொத்தம் 526 சேவை இதன்மூலம் வழங்கப்படும். இதுதவிர, ஊட்டி மற்றும் குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி நீலகிரி மலை ரெயிலில் கோடைகால (முன்பதிவு) சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாக அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.
    • தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    சென்னை :

    சென்னை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும் ரெயில்வேயின் உதவி மையத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் நின்றபோது ரெயில் பயணியிடம் அடையாளம் தெரியாத 2 திருநங்கைகள் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை ரெயில்வே போலீஸ் எஸ்.பி.பொன்ராமு நேற்று நேரில் அழைத்து பேசினார். அப்போது சங்க உறுப்பினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார். தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    • ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
    • கிராம நிர்வாக அதிகாரி கேசவன் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்த நாயக்கன்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விருதுநகர்- காரைக்குடி பயணிகள் ரெயிலை அந்த வாலிபர் கவனிக்கவில்லை.

    இதன் காரணமாக ரெயில் மோதியதில் அந்த வாலிபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சென்னிலைக்குடி கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? விபத்தா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×