search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம்.
    • ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.

    புதுக்கோட்டை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையே தவிர வேறு எதையும் வைக்கவில்லை, வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.

    விஜய் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்ததை வரவேற்கிறேன். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திரு.வி.க. உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும்.

    பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கவில்லை. ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து. ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

    ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். கட்சியிலிருந்து விலகுபவர்கள் அவர்களாக போகிறார்கள். அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுப்போன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும்.

    தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும். நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் செய்தியாளர்களை சந்திக்கும்போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.

    நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க. ஆதரவை விட்டு விலகினால் தி.மு.க. 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும்.

    ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில், என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார், போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை. விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் என்றார்.

    • அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது.
    • நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிப்பதை சீமான் தவிர்த்து வந்த நிலையில், தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "நான் தனித்து போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானாக இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது."

    "நான் பிரபாகரன் மகன், என் பாதை தனி, என் பயணமும் தனி, என் இலக்கு தனி. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நாட்டை எப்படி படைக்க வேண்டும் என்று என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவு அது. பூமியின் சொர்க்கமாக என் நாட்டை படைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இவரோடு சேரலாம், அவரோடு சேரலாம் என்றில்லை."

    "என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள். இல்லையெனில் விடுங்கள். ஒரு தலைவனுக்கு முதல் தகுதி, தன் மண்ணையும், மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன். அதனால் நான் தனித்து போட்டியிடுகிறேன்," என்று தெரிவித்தார். 

    • காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம்.
    • டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா?

    திருமங்கலம்:

    மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா. தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.

    காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.

    தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை உள்ளது. ஆனால் வேலுநாச்சியாருக்கு சிலை இல்லை. நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நம்மிடத்தில் தமிழ் இல்லை.

    டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா? என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா?

    மலை, மணல் திருடினால் பரவாயில்லை-எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைதான் இங்கு உள்ளது. சீமான் வந்த பிறகு அனைத்தையும் தமிழில் தான் பேசுவார்கள். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? இந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான்.

    அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.

    திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.
    • மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.

    * மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ். அவரை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். ஆனால் என்னை மாநாட்டிற்கு அழைக்கவில்லை.

    * 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். இதற்கு முதல்வரும் ஆமாம் என்று சொல்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?

    * மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை.

    * அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது.

    * அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.

    • போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து.
    • புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

    பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர். எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள்.

    இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?

    தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?

    மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன், அ.தி.மு.க.,வுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

    தி.மு.க.,வுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அரசு தான் தி.மு.க., அரசு.

    ஒரு 5 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்த்துக்கலாம். அப்படி தொட்டால், அன்னைக்கே பதவி விலகிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
    • கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150ன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

    ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம் ஆண்டு அரசாணை 525இன் படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

    கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?

    அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

    இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

    250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது.

    அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும். அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.

    ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    • புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை.

    சிவகிரி:

    மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுழற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவரின் வீரமும், திமிரும் தமிழர்களாக எங்களுக்கும் உண்டு. பீரங்கியும், துப்பாக்கியையும் எதிர்த்து வெறும் வாளையும், வேலையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனார் பூலித்தேவர்.

    திரை உலகத்தில் மட்டுமல்லாது, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த துறையிலும் இதுபோன்று நிலை ஏற்படக்கூடாது.

    தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட காமிராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல். இது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என்பதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    உலகிற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள். புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை. குல கல்வி முறையை மறுபடியும் ஊக்குவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார்.
    • தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    பைபிள், கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் 'சண்டாளன்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது அநியாயம். என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். ஆனால் நான் ஜாலியாக இருக்கிறேன்.

    பார்முலா4 பந்தயத்தில் கார் ஓட்டுபவர்கள் மேல்தட்டு மக்கள்தான். இது அவர்களுக்கான விளையாட்டு. சிற்றூர்களில் சிறிய விளையாட்டு திடல்கள்தான் உள்ளன. அங்கு ஓடி விளையாடுவதற்கு வழியில்லை. அதுபோன்ற சிற்றூர்களில் திறமையான குழந்தைகளை தேர்வு செய்து பயிற்சி அளித்து விளையாட்டு வீரர்களாக மாற்றலாம்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, விளையாட்டு வீரர்களும், இஸ்லாமிய மக்களும் அதிகமாக வந்தனர். அந்த அளவுக்கு அவர் விளையாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதுபோன்று தி.மு.க.வினர் ஏதாவது செய்தார்களா?. பொதுமக்கள் செல்லும் இடத்தில், 2 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்துகிறார்கள். இந்த விளையாட்டுக்கு பதிலாக சாலை, பள்ளிக்கூடங்களை சீரமையுங்கள். ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஆனால் பந்தயம் நடத்த எப்படி பணம் வருகிறது?. டோல்கேட்டில் கட்டணம் உயர்வை போராடி தடுப்போம்.

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுதான் பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமைகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறுகையில், '2026-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தற்போது 60 வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன்' என்றார்.

    • மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார்.
    • எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி பற்றி அவதூறு பாடல் ஒன்றை பாடினார்.

    இது தொடர்பாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர் பட்டாபிராம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை அவமதித்து விட்டதாக சீமான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்படி சீமான் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

    • வந்திதா பாண்டே IPS மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    • வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார்.

    இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் இருந்து நானும், எனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக X இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே IPSம் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

    புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
    • மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது ஏன்?

    * தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?

    * எல்.முருகனோடு தோற்றுப்போன மற்ற பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது ஏன்?

    * மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    * அண்ணாமலை, கே.பி.ராமலிங்கம் போன்றோருக்கு மத்திய அமைச்சராக தகுதியில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
    • தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். இப்போது இருக்கிற தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான். அவரை தற்குறி என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி இருக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×