என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 181884"
- வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர்.
சோழவந்தான்
மதுைர மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
சங்கம்கோட்டை மந்தை களத்தில் பம்பையுடன் அம்மன் கரகம் எடுத்து பூசாரி சண்முகவேல் பூக்குழி இறங்கினார். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம், அலகு குத்தியும் காவடி சுமந்தும் பக்தி பரவசத்து டன் பூக்குழி இறங்கினர்.
இந்நிகழ்வில் பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர். இதையடுத்து இரவு அம்மன் மின்னொளி.அலங்காரத்துடன் கோர கத்தில் எழுந்தருளி வீதி உலா பவனி வந்தார் சோழவந்தான்.இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பசும்பொன் கண்ணன். மற்றும் வீரர்கள் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.
- 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லை வனநாதர் உடனுறை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வைகாசி விசாக பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி அம்பாள் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
7-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி முல்லைவன நாதருக்கும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடை பெற்றது.
திருக்கல்யாண வைவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பட்டு வஸ்தி ரங்கள் அணி விக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள்.
அக்னிஹோ மங்கள் வார்க்கப்பட்டு ஆகமவிதி கள்படி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோயில் செயல்அ லுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.
- 108 திவ்யதேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது
- அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ண புரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்ப டுகிறது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுவழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை யொட்டி, வருகிற 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
- 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது.
- பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா கோடுகிழி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது .
தீ மிதி விழாவை முன்னிட்டு நேற்று இரவு வெட்டாற்றின் கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவத்துடன் தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோடுகிளி கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கலசம்பாடி நற்கூந்தலழகி அம்மன் கோவிலின் 19-ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தெரடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அம்மன் மணி மண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஜாகர் கோட்லி அருகில் விபத்தில் சிக்கியது.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அம்ரித்சரில் இருந்து கிளம்பிய பேருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகர் கோட்லி எனும் இடத்தில் விபத்தில் சிக்கியது. இங்கிருந்து வைஷ்ணவ தேவி கோவில் இருக்கும் காத்ரா 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கான ஆரம்ப பகுதி ஆகும்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் இதர மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
"பத்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். பேருந்து அம்ரித்சரில் இருந்து கிளம்பி காத்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது காஜர் கோட்லி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று ஜம்முவின் துணை ஆணையர் அவ்னி லவசா தெரிவித்துள்ளார்.
- இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் சித்திரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
- மூன்று சக்கரத்தாழ்வார்களும் மாலையில் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் விஜய வல்லி சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் சித்திரை நட்சத்திரம் அன்றும் சக்கரத்தாழ்வாரும் சிவேந்திரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வைகாசி மாதம் சித்திரை நட்சத்தி ரத்தை முன்னிட்டு வருகின்ற 31-ம்தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பாலாபிஷேகம் , திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
அன்றைய தினத்தில் மூன்று சக்கரத்தா ழ்வார்களும் மாலை வேளையில் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடு களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
- கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளி க்கிழமையில், சமயபுரத்தி லிருந்து மாரியம்மன் மல்லி கைப்பூ, கைவளையலுக்கு ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
வைகாசி திருவிழாவை யொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஆகாச மாரியம்மன் அலங்கரி க்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருள செய்து மேளதா ளங்கள் முழங்க திருநறையூர், நாச்சியார்கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வந்தார். தொடர்ந்து, இன்று காலை அம்மன் பல்லக்கு கோவிலை வந்தடைந்தது.
பின்னர், பல்லக்கில் இருந்த ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி பெரிய திருவிழாவும், 7-ந்தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலாவாக வந்து பின்னர் சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- தருமை ஆதீனத்திற்கு வீதிதோறும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
- பாத அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் விமர்சையாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குரு லிங்க சங்கம வெற்றிவேல் யாத்திரையாக சொக்கநாதர் பெருமானுடன் மீண்டும் தருமபுரம் புறப்பட்டார்.
சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதர் பெருமானை சுமந்து தம்பிரான் சுவாமிகளுடன் புறப்பட்ட தருமை ஆதீனத்திற்கு வீதிதோறும் பூர்ண கும்ப மரியாதையும், பாதஅபிஷேகமும் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.
பாதயாத்திரையில் தருமபுரம் கல்லூரி முதல்வர் சாமிநாதன்,
கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத்தலைவர் மார்கோனி, ஆன்மிக பேரவை நிறுவனர் இராம.சேயோன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருப்பணி உபயதாரர்கள் முரளிதரன், கணேஷ், ஆசிரியர் கோவி.நடராஜன், கோயில் சொத்து பாதுகாப்பு பேரவை செயலர் பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
- சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர், விநாயகர், அரியநாச்சி அம்மன், சுப்பிரமணியர், தவசி தம்பிரான், தவமுனி மற்றும் பரிவார தெய்வங்கள் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் வில்வநாதர் சுவாமி.
இதையொட்டி கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மதுரை ஆதீனம் சுந்தர மூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமிகள், கோவை காமாட்சி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேசுவர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிந்தலக்கரை காலிபராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடந்த 3 தினங்களாக சுவாமிக்கு விக்னேசுவர பூஜை, புண்ணியாக வசானம், மகா சங்கல்பம், மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கணபதி வழிபாடு, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம், முதல், 2-ம் கால, 3-ம் கால பூஜைகள், எந்திர பிரதிஷ்டை, விக்ரகப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 4-ம் கால யாகம், கஜ, கோ, தன, சர்ப பூஜைகள் நடந்தன.
இறுதி நாளான நேற்று கடம் புறப்பாடு நடந்து கோபுர கலசம், மூலஸ்தானம் மற்றும் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- 4-ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த திங்களூர் கிராமத்தில் பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முடிந்தது.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா முதல் யாகசாலை கலா கர்ஷசனம் அக்னி மிதனம் அக்னி பிராணாயணம் யாகசாலை பிரவேசம் பூர்ணாஹூதியுடன் பூஜை துவங்கியது.
நேற்று காலை நான்காம் யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடை பெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து வேதபாராயணங்கள் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் முழங்க புறப்பட்டு சன்னதியின் பிரகாரங்கள் உலா வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், தாயார் சன்னதி, ராஜகோபுரம் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள், சேவா ர்திகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்