search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184454"

    • விருதுநகர் அருகே வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
    • நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார. இவரது மகன் கனகவேல் (18). இவர் உறவினர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    வாலிபர் பலி

    ஏ.ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கனகவேலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

    பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிலாளி

    விருதுநகர் மாவட்டம் எம்.துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது50). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கடைகளுக்கு சென்று மிக்சர் பாக்கெட் விநியோகம் செய்வார். இந்த நிலையில் சைக்கிளில் சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (68). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    • கண்டக்டர்கள் எடுத்து ஒப்படைத்தனர்
    • நடத்துனர்கள் சுரேஷ், சகாய ராஜன் இருவரையும் அதிகாரிகளும், சக பயணிகளும் பாராட்டினார்கள்.

    நாகர்கோவில் :

    தூத்துக்குடியை சேர்ந்த வர் குமாரசாமி (வயது 40).

    இவர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்தார். பின்னர் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு என்ட் டூ என்ட் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் குமாரசாமி பஸ்சை விட்டு இறங்கினார். பின்னர் பஸ் நிலையத்தி லிருந்து அண்ணா பஸ் நிலையம் சென்ற பஸ்சில் குமாரசாமி பயணம் செய்தார்.

    அப்போது அவரது பர்ஸ் மாயமாகி இருந்ததை பார்த்து குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார்.உடனே பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த என்ட் டூ என்ட் பஸ் அங்கு நின்று கொண்டி ருந்தது.

    அந்த பஸ்சில் ஏறி குமாரசாமி பர்சை தேடினார். அப்போது அங்கு பணியில் இருந்த கண்டக்டர்கள் குமாரசாமி யிடம் விசாரித்தனர்.

    அப்போது குமாரசாமி பயணம் செய்த பஸ்சில் கிடந்த பர்ஸை நடத்து னர்கள் சுரேஷ், சகாயராஜ் இருவரும் எடுத்து போக்கு வரத்து கழக அதிகாரி சிவராஜிடம் ஒப்ப டைத்தது தெரிய வந்தது. இதை யடுத்து குமாரசாமி பஸ் நிலை யத்தில் இருந்த அதிகாரி குமாரசாமிடம் சென்று தனது பர்ஸ் மாய மானது குறித்து தகவலை தெரி வித்தார்.

    மேலும் அந்த பர்சின் அடையாளங்களை கூறினார். அதிகாரி பர்சை சோதனை செய்த போது ரூ.6 ஆயிரம் பணம் இருந்தது. இதைத்தொ டர்ந்து குமாரசாமியிடம் அதிகாரிகள் அவரது பர்சை ஒப்படைத்தனர்.

    பஸ்சில் கிடந்த பர்சை எடுத்து ஒப்படைத்த நடத்துனர்கள் சுரேஷ், சகாய ராஜன் இருவரையும் அதிகாரிகளும், சக பயணிகளும் பாராட்டினார்கள்.

    • திருப்பத்தூர் அருகே வாலிபர் ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ேபாலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். 

    இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அவர் சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை சேர்ந்த தினேஷ் என தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது

    நாகர்கோவில்,ஜூன்.7-

    நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.

    இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் தினமும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஹெல்மெட் அணியாமல் வருப வர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வசாமி தலைமை யிலான போலீசார் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை யில் வாகன சோத னையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

    போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணும் இல்லாதது தெரிய வந்தது. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் அந்த வாலி பருக்கு அபராதம் விதித்த னர். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் வீல் பூட்டு போட்டுவிட்டு சென்றனர்.

    பின்னர் வந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிளில் போடப்பட்டு இருந்த பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்ல சாமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அம் மாண்டி விளையைச் சேர்ந்த விஷ்வா (வயது 23) மீது வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அவர் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 427, 379 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விஷ்வாவை பிடித்துள்ளனர். பிடிபட்ட விஷ்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் அருகேயுள்ள ஆத்திகுளம் கனகவேல் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹரீஸ்ராஜ் (வயது21). இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக ஹரீஸ்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரீஸ்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சகோதரி ரோகிணி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பலராமன் (வயது50). இவரது மனைவி சியாமளா தேவி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று பலராமன், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் அறையின் கதவை பூட்டிக்கொண்டு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சியாமளா தேவி பந்தல்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு சேர்ந்த சிவசங்கர் என்பவரை கைது செய்தனர்
    • சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (வயது 39) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் ஜெயில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதையடுத்து சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    • பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம்
    • தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அயனிவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ஐரிஸ் (வயது 42). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஐரிஸ் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவருக்கும், ஐரிஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் இருக்கும்போது ராஜன் வீட்டின் முன்பக்கம் வந்து நின்று அவதூறாக பேசி கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கல்லால் தாக்கியதில் ஐரிசுக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஐரிஸ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப்ப திவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது.
    • இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்ட நிலையில், மீதிமுள்ள 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தப்பி யோடியவர் சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் யுவராஜ் என்கிற ராஜா (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
    • வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை நகரப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தற்போது பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டா கிராம் (சமூகவலை தளம்) மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். தனது வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.

    இதன்பின் மாணவியின் புகைப்படம் ஒன்றை அவர் கேட்டுள்ளார். அதன்படி, மாணவியும் தனது புகைப் படத்தை அனுப்பியுள்ளார். அந்த படத்தை 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

    இந்நிலையில் அந்த படத்தை அனுப்பி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி முறையிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர்கள் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

    பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவரது மகன் நாகபாண்டி (வயது 21). இவர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில்விரக்தி அடைந்த நாகபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடுப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×