search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184454"

    • இறந்த வாலிபர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார்.
    • சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை ,

    கோவை போத்தனூரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று காலை பயணிகள் வந்திருந்தனர்.

    அப்போது பயணிகள் நடைமேடை அருகே உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது இறந்த வாலிபருக்கு 45 வயது இருக்கும். அவர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாப இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கடம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் தமிழ். இவர் சம்பவத்தன்று உறவினர் கண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். வலையம்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    2 பெண்கள் காயம்

    சிவகங்கை அருகேயுள்ள தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உஷாதேவி. திருப்பத்தூரை சேர்ந்தவர் மகேஷ்வரி. இவர்கள் இருவரும் ஆட்டோவில் பயணம் செய்தனர். கண்டராமாணிக்கம் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த உஷாதேவி, மகேஸ்வரி காயமடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஞானஒளிவுபுரத்தில் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (39). இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கருதுகின்றனர். இது குறித்து முனியசாமியின் தந்தை பூபதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.
    • தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ரெட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சரவணன் . இவரது மனைவி கோகி லவாணி. இவர்களுக்கு விஷ்ணு பிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

    சரவணன் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வந்தார். அருள்சா ரதி வெளி நாட்டில் ஐ.டி. கம்பெனி யில் வேலை க்கு செல்ல வேண்டி கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனி யார் பயிற்சி மையத்தில் பயி ற்சி பெற்று வந்தார்.

    இந்நிலை யில் கடந்த 21-ந் தேதி அருள்சாரதி பயிற்சி முடித்து விட்டு செ ன்னையில் இருந்து வீட்டி ற்கு வந்தார். கடந்த 2 நாட்களாக வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அருள்சாரதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருள்சாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (60). இவரது மகன் இளங்கோ (24). இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக் குள்ளாகி இருந்தார்.

    இதற்காக அரசு மருத்துவமனையில் இளங்கோ சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனாலும் முறையாக மாத்திரைகள் சாப்பிடாமல் மது குடிப்பதையும் தொடர்ந்துள்ளார்.

    இதனால் இளங்கோவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து உடனடியாக அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.
    • பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அண்டமி ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30) . கட்டிட தொழிலாளி.

    இவர் அண்டமியில் இருந்து மதுக்கூருக்கு கட்டுமானம் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மதுக்கூர் அருகே தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.

    இதில் நிலைதடுமாறிய சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார்.
    • இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது50). இவர் கோவை அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்சில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது சூலூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார்.சிறிது தூரம் சென்ற பின்னர் இருவரும் ரூ.20 கொடுத்து டிக்கெட் வாங்கினர்.

    இதையடுத்து அந்த வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார். அதற்கு சசிகுமார் சிறிது நேரம் கழித்து மீதி தொகையை தருவதாக அந்த வாலிபரிடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முகத்தில் அடித்தார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சசிகுமார் அரசு பஸ் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறினார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் சிக்னலில் மெதுவாக சென்றிருந்த போது அந்த வாலிபரும் அவருடன் வந்த இளம்பெண்ணும் பஸ்சில் இருந்து தப்பித்து சென்றனர். இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • நட்பை துண்டித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை என மணிகண்டனிடம் பாண்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் மணிகண்டபெருமாள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டினர். இதில் அவருக்கு உச்சந்தலையில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டபெருமாளும், பாண்டியும் தப்பி சென்றனர். மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி (32). இவர் முத்துப்பட்டி யோக விநாயகர் கோவில் பின்புறம் உள்ள பனை மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலமாக அடிபட்டது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுமதி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

    மதுரை

    திடீர்நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சாலமன் ராஜா (40). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மனைவி மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த சாலமன் ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் முபிஸ் ரகுமான் (24). இவருக்கு சிறு வயது முதல் உடல் நலக் கோளாறு இருந்தது. மூச்சு திணறலும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வாலிபர் முபிஸ்ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×