என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோதல்"
- கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
சேலத்திலிருந்து சென்னைக்கு கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ராமச்ச ந்திரன் ஓட்டி வந்தார். இந்த டேங்கர் லாரி திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது சாலையைக் கடக்க முயன்ற டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டரின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
- 4 பேரும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் நரேஷ் (வயது 25) .
இவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ் ஆகியோருக்கும் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சம்பவதன்று வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன்,மணிமாறன் உள்ளிட்ட4 நபர்களும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர்களான ராஜா, பாக்கியராஜ் வந்தனர். அவர்களையும் மணிகண்டன் கும்பல் தாக்கியது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ்,ராஜா,பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ், மணிமாறனையும், மற்றொரு தரப்பில் ஒருவரையும் புதுப்பட்டினம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது
- போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அவ்வப்போது தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்க ளுக்கு இடையே நேரம் பின்பற்றி பயணிகளை ஏற்றி செல்வதில் வாக்கு வாதம் ஏற்படுவது வாடி க்கை யாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு தனியார் பேருந்து களின் நடத்துனர்கள் போட்டி ப்போட்டு பயணி களை ஏற்றினர்.
அதில் ஒரு பஸ் அரிமளம் தேனிப்பட்டி நோக்கியும், மற்றொரு பஸ் ராங்கியம் மெட்டு பகுதிக்கும் இயக்கப்பட்டது.
பின்னர் அந்த பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 2-வது நிறுத்தமான பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி பயணிகளை ஏற்றினர்.
அப்போது இரு பேருந்து களின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இரண்டு பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழியாகச் சென்ற மற்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
ஆனால் அதைப்பற்றி கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தகராறு செய்தனர்.
அப்போது பொறுமை இழந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தகராறு செய்த 2 பேருந்துகளின் நடத்துன ர்கள் மற்றும் ஓட்டுனர்களை தட்டி கேட்டனர்.
அதனை தொடர்ந்து அந்த பேருந்துகளின் டிரைவர்கள், பேருந்துகளை இயக்கி சென்றனர்.
இந்த தகராறு காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது போல் பயணிகளை ஏற்றி செல்வதில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ே காரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது.
- புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளிகிருஷ்ணன்(19) என்பவர் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் உடன் படிக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த தருண் (19) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டிமோதலாக மாறியது. மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையும் மாணவர்களுக்கிடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்திலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முரளி கிருஷ்ணன், நண்பர்களான, தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருடன் காசிமேடு கடல் பகுதிக்கு சென்றார். இதனை அறிந்து அங்கு சென்ற தருண் மற்றும் அவரது நண்பர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் முரளி கிருஷ்ணன், தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர்களான தருண், விக்னேஷ், நவீன், தீபக், கார்த்திக், கவுதம், சஞ்சய் ஆகிய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார்.
சிவகிரி,
சிவகிரியை அடுத்த அம்ம ன்கோயில் அருகே பூலக்காடு என்ற இடத்தில் அரசு மதுப்பா ட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை திறக்கும்வரை காத்திருக்க முடியாத மதுப்பிரியர்கள் காலையிலேயே அங்கு சென்று மதுவை வாங்கி அருந்துவது வாடிக்கை. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு விற்ற மதுவை வாங்க நாட்ராயன் என்ற நபர் சென்று ள்ளார். அப்போது அங்கே மது வாங்க வந்த வேறு ஒரு நபரை கண்ட நாட்ராயன் அந்த நபர் அங்கு வந்திரு ப்பது குறித்து அங்கே வந்த நபரின் உறவினருக்கு செ ல்போனில் தகவல் அளித்து ள்ளார்.
இதனை கவனித்த அந்த நபர் இது குறித்து நா ட்ராயனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியு ள்ளது. இதில் நாட்ராயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரைத்து அனுப்பி யுள்ளனர்.
தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் நாட்ராயன் சிகிச்சையில் உள்ளா ர். இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, பின்னர் அம்மன்கோயில் டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கு கடை திறப்பதற்கு முன்னரே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது ப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
- மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாணவர்கள் ஏராளமானோர் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது புத்தேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் அங்கு வந்தனர்.
பஸ் நிலையத்தில் வைத்து அவர்களுக்குள் திடீரென மோதல் உருவானது. ஒரு மாணவரை மற்ற 3 பேர் சேர்ந்து தாக்கினர். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காயம் அடைந்த மாணவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் குடிபோதை தகராறில் மோதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் முட்டம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கூட்டாக சேர்ந்து மது குடித்துள்ளனர். முட்டம் கடற்கரை சுற்றுலா பகுதி என்பதால் மாணவர்களை மது குடிக்க கூடாது என்று கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள் அண்ணா பஸ் நிலையம் வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தனபதி. இவர்களுக்குள் முன்விரோதம் தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜபிரியா கொடுத்த புகாரின் பேரில் தனபதி, விஜயா, சரண்யா, ஜெயசூர்யா மீதும், ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம், மணிமேகலை, ராஜப்பிரியா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணப்பாறை அருகே மூதாட்டி உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை - மகன்
- தென்னை மட்டை விழுந்த தகராறில் மோதல்
திருச்சி,
திருச்சி மாவட்டம் மண ப்பாறை வளநாடு கொடும்ப பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).இவரது மகன்கள் ராம சாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டை கள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழு ந்தது. இதனால் ஆத்திர மடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்கு மாரிடம் தகராறு செய்தனர்பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார்,தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்கு மார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.இதில் பலத்த காயம டைந்த 4 பேரையும் அக்கம்ப க்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்த னர்.தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் பெற்று விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விளை பொருட்களை சந்தைப்படுத்து வதற்காக வும் இந்த தார் சாலையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
- அப்பகுதி யில் வசிக்கும் இரு வருக்கிடையே வழித்தடம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் சாமி செட்டிப்பட்டி ஊராட்சியில் உச்சி மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து பொன் நகர் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தார் சாலை அமைந்துள்ளது.
இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அதனை சுற்றி விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இப்பகுதி பொது மக்களுக்கான பிரதான போக்கு வரத்துக் காகவும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்களை சந்தைப்படுத்து வதற்காக வும் இந்த தார் சாலையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் இரு வருக்கிடையே வழித்தடம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையை இரண்டு இடங்க ளில் கற்கள் மற்றும் மரங் களை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் பொதுமக்கள் செல்லாத வாறு தடையை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால் இன்று காலை முதல் அவ்வழியாக எந்த ஒரு வாகனங்களும், பொது மக்களும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
- மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
- தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.
அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் இவரது பேத்தி மைஸிகாபேரன் சர்வன் ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
- பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அன்னதானப்பட்டி;
சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). இவரது பேத்தி மைஸிகா (9), பேரன் சர்வன் (5) ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடராஜன் தனது பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
- 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42) விவசாயி, இவரது மகன் செல்வம் (15) மாற்றுத்திறனாளி, இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது வழியில் மாடு கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் (43) என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஏழுமலை, அவரது தம்பி சரவணன், மற்றும் சரவணன் மனைவி சுகந்தி ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஏழுமலை தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன், மணிரத்தினம், கண்ணன், மணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணிரத்தினம் மற்றும் பத்ரி நாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் பத்ரி நாராயணன் தனது வீட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மனைவி ரேவதி, உறவினர்கள் சரவணன், சுகந்தி, கலைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அம்சா, சடையன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தன், சுமதி, வீரமங்கலத்தைச் சேர்ந்த வீரப்பன், தியாகதுருகத்தைச் சேர்ந்த பவுனாம்பாள், பாரதி, மணிவேல், சாந்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்