என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 186479"
- அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.78 அடியாக இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.72 அடியாக சரிந்தது.
இனிவரும் நாட்களில் இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது.
- சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது.
நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் அங்கு அதிகபட்சமாக 53.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 43, சிற்றாறு 1-5, பூதப்பாண்டி 17.6, கன்னிமார் 12.8, நாகர்கோவில் 3, சுருளோடு 53.6, தக்கலை 2.2, பாலமோர் 35.6, முள்ளங்கினாவிளை 52, அடையாமடை 2.2, முக்கடல் 11.6.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 38.22 அடியாக இருந்தது. அணைக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. அணைக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.
நாகர்கோவில் :
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழூவு மண்டலம் வலுவிழந்து குமரிக் கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்தது.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வில்லை.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முள்ளங்கிவிளையில் 12.8 மில்லி மீட்டரும், மயிலாடியில் 8.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 7.2 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 703 கன அடி தண்ணீர் வருவதால், 785 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.அணையின் கொள்ளளவு 48 அடி என்ற நிலையில் தற்போது 43.38 அடி நீர்மட்டம் உள்ளது.
பெருஞ்சாணி அணை யின் கொள்ளளவு 77 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 73.02 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 79 கன அடி தண்ணீர் வருவதால், 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 மற்றும் 2 அணைகளில் 14.04 மற்றும் 14.13 அடி நீர்மட்டம் உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை யில் 48.47 அடி நீர்மட்டம் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் கொள்ளளவு 25 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 20.80 அடி யாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
- திற்பரப்பு அருவியில் சிறுவர்கள் உற்சாக குளியல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை ஓய்ந்திரு ந்தாலும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நேற்று திருவட்டார், அருமனை பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுருளகோடு பகுதியில் 25 மில்லி மீட்டரும் பெருஞ் சாணி அணைப் பகுதியில் 22.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 20.8 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைப் பகுதியில் 4.8, கன்னிமாரில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த மழையின் காரண மாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணைக்கு 821 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கனஅடி நீரும், சிற்றாறு-1 அணைக்கு 157 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்ப டுவது நேற்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அணையில் இருந்து மீணடும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை:
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையானது தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது.
மழை மறைவு பகுதியாக உள்ள திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 630 மி.மீ முதல் 680 மி.மீட்டராகும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை மூலம் சற்று அதிக மழை பொழிவு பெற்று வரும் பகுதியாகவும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
இதன் காரணமாக ஒரே சீரான மழை பொழிவு இரு பருவ மழையின் போதும் கிடைக்காத ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக மழை பெறும் பகுதிகளில் இருந்து வரும் ஆறுகளை நம்பி அமைந்துள்ள அணைகளில் இருந்து கால்வாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பாசனம் பெற்று வருகிறது. இதற்கு பிஏபி, எல்பிபி பாசனங்கள் எடுத்துக் காட்டாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர் தேங்கும் உயரம் 90 அடியாகவும், கொள்ளளவு 4 டிஎம்சி.யாகவும் உள்ளது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 83அடியை தாண்டியுள்ளது. அணைக்கு 2078 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.
தக்கலை, களியக்காவிளை, குழித்துறை, இரணி யல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆறு கோதை ஆறு பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோரப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.70 அடியாக இருந்தது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது.அணைக்கு 1136 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1020 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 12.86 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 21.6 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்து றையாறு நீர்மட்டம் 38.71 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.தோவாளை செண்பகராமன்புதூர் தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த செங்கல்களும் மழையில் சேதம் அடைந்து உள்ளது. தொடர்மழையின் காரணமாக செங்கல் சூளை தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
கீரிப்பாறை தடிக்காரன்கோணம் குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு பெய்த மழைக்கு கம்பளம் பகுதியில் வீடு வந்து இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிபாறை-53.8, பெருஞ்சாணி-20, சிற்றார்-1-6.2, சிற்றார்-2-21.6, பூதப்பாண்டி-11.2, களியல்-2.4, கன்னிமார்- 18.6, கொட்டாரம்-18.4, குழித்து றை-14, மயிலாடி- 69.2, நாகர்கோவில்-34.8, சுருளோடு-18.6, தக்கலை- 23.2, குளச்சல்-4.4, இரணியல்-8, பாலமோர்- 38.2, மாம்பழத்துறை யாறு-19, திற்பரப்பு- 8.2, கோழிபோர் விளை- 37.6, அடையாமடை- 31, குருந்தன்கோடு-5.2, முள்ளங் கினாவிளை-18.6, ஆணைக் கிடங்கு-17.
- ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. இதனால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
மழையின் காரணமாக அய்யனார் கோவில், நீராவி ஆறு, 6-வது மைல் நீர்த்தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா ஆலோசனையின்படி அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் 6-வது மைல் நீர்த்தேக்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிதெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்தி–ற்கு 300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
- அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.
30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.
- நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர் வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்