search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 187529"

    • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும், மண்ட லங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளர்களுக்கே வழங்க வேண்டும், பழைய பேருந்து களை பராமரிப்பு செய்ய தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோத மாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் போது போக்கு வரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

    சென்னை:

    அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரு மான குமரன் தலைமை தாங்கினார். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், பல்வேறு மாவட்ட அதிகாரிகள், அமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளிமாநில தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்

    (labour.in.gov.in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது.

    மேலும் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல கோரப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சட்ட உரிமைகள் குறித்து மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநரும், விபத்து மரண இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    தொழிலாளர்களின் பணிநிலைமை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் விபத்து நேர்ந்தால் வழங்கப்படும் இழப்பீடு போன்ற விவரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் பணியிடத்தில் சரியான பணி நிலைமை, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி போன்றவை வேலையளிப்பவரால் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும், ஏதும் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து தீர்வுகாணுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கும்பகோ ணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வெடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஓய்வு அறை கட்டிடத்தின் திறப்பு விழா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.

    எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஓய்வு அறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும் என்கிற வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக அலுவலகங்களில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்யப்படும்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதிய பஸ்கள் வாங்கப்பட்டதும் புதிய வழித்தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கவும் நவக்கிரக தலங்களை இணைத்து பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கும்பகோணம் போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிதாக டிரைவர் கண்டக்டர்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

    இந்த அரசாணையின்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப துறையுடன் சேர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய  3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம்.

    அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம் :

    விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும்இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வ்ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தலைவர் மணிகண்டன் , செயலாளர் இளவரசன், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனார்.முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் பழனி வரவேற்று பேசினார். முடிவில் மேஸ்திரி கலை நன்றி கூறினார்.

    • பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம்
    • வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைப்பவர்கள்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மே 1-ந்தேதி தொழிலாளர்கள் தினம். தொழிலாளர்களின் தியாகங்களையும், பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம். தொழி லாளர்கள் அனைவரது உழைப்பையும் போற்றி அவர்களுக்கு இந்த நாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைத்து சமூகத்திற்கு அன்றாடம் உதவி செய்பவர்கள் நமது தொழிலாளர்கள். உழைப்பால் நாட்டிற்கு பெருமை சேர்த்து பொருளாதாரம் மேம்பட பெரும் பங்களிப்பவர்கள் தொழிலாளர்கள். எனவே, தொழிலாளர்கள் வாழ்வும், வாழ்வாதாரமும் மேம்பட நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். அவர்கள் உழைப்பை சுரண்ட நினைப்பவர்களிடம் இருந்து அவர்களை காக்க வேண்டியது நமது கடமை. உழைப்பாளர் களை போற்றுவோம், அவர்கள் உழைப்பை போற்றுவோம். உழைப்பே உயர்வு தரும். அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • தொழிலாளர்கள் பள்ளி வளாகத்தில் தங்கி இருந்து பணி செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது இதில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்க ள் பள்ளி வளாகத்தில் தங்கி இருந்து பணி செய்து வருகின்றனர். நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பீகார் தொழிலாளர்கள் பேக்கில் வைத்திருந்த ரூ.18ஆயிரம் மற்றும் செல்போன்களையும் திருடிச் சென்று விட்டனர் காலையில் எழுந்த தொழிலாளர்கள் பணம் மற்றும் செல்போன் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக கூலியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்து வதுவழக்கம். ஆனால் ரம்ஜான் பண்டிகை வருவதால் பணத்தை ரொக்கமாக வாங்கி வைத்துள்ளனர் .இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அத ன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே பள்ளி வளாகத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    • 22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம் ஊதிய நிலுவை வழங்கப்பட்டது.
    • புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் முத்திரையிடாத தராசுகள் மற்றும் படிக்கற்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. கூடுதல் தொழி லாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் சோதனை நடத்தினர்.

    ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், காய்கறி- பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மறு முத்திரையிடாத தராசுகள், தரப்படுத்தாத எடை அளவுகள், மறு பரிசீலனை சான்று வைக்காத 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக பட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 16 நிறுவனங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 15 நிறுவ னங்கள் அரசு நிர்ணயித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதில் 5 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 தொழிலாளர்களுக்கு

    ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 283 சம்பள நிலுவைத் தொகை பெற்று தரப்பட்டது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அம லாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தராசுகளை முத்திரையிட, பதிவுச் சான்றுகளைப் பெற labour.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது, 18 வயது முடியாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு. அப்படி கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

    குழந்தை தொழிலாளர் குறித்து 1098 அல்லது பென்சில் போர்டல் (PENCIL PORTAL) என்ற இணையதளம் வழியாக புகார் தெரிவிக்கலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது, அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • அரசு உப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனத்தில் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் பச்சமால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். 2022-ல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் தனி ராம், முருகவேல், வடிவேல், அற்புதமணி, காட்டு ராஜா, கலாவதி, சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
    • கல் தயார் செய்யவும் முடியவில்லை, தயார் செய்த கல்லை காய வைக்கவும் முடியவில்லை.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கோடைமழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.

    பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், சுரைக்காயூர், கோடுகிளி மற்றும் ஒன்பத்துவேலி உள்பட பல இடங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் கோடை மழையால் செங்கல் உற்பத்தி செய்யும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் செங்கல் உற்பத்தி செய்யும்பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து செங்கல் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது

    பொதுவாக கோடை காலத்தில் தான் எங்களுக்கு செங்கல் தயார் செய்ய முடியும் இரண்டு பேர் சேர்ந்து ஆயிரம் பச்சகல் தயார் செய்யலாம் ஆயிரம் கல் தயார் செய்யலாம் அந்த கல்லை நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து கொட்டகையில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்வரை கூலியாக கிடைக்கும் தற்போது தினசரி பெய்து வரும் மழையால் கடந்தசில நாட்களாக தயார் செய்து வைத்து பச்ச கல் எல்லாம் நனைந்து சேதமடைந்நு விட்டது தொடர்ந்து கல் தயார் செய்யவும் முடியவில்லை தயார் செய்த பச்ச கல்லையும் காயவைக்கவும் முடியவில்லை அதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்

    செங்கல் தயார் செய்யும் தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் மழையால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் குருசாமி தலைமை வகித்தார்.

    விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், துரைசாமி, சங்க கிளை நிர்வாகிகள் சம்பூர்ணம், சின்னத்தாயி, குமார், சக்திவேல், முருகே சன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தங்கள் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை விவ சாயிகள் தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கி விட்டு சென்றனர்.

    ×