search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    • தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார். இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.

    அப்போது கட்டிலில் அமர்ந்திருந்த மாமியார் எழுந்து வந்து மருமகளின் கன்னத்தில் அறைகிறார். பிறகு, நாத்தனார் மீண்டும் பெண்ணை தாக்கி அவளது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

    பின்னர், பெண்ணை வெளியே தள்ளி மாமியார் மற்றும் நாத்தனார் அறையை பூட்டியுள்ளனர். அப்போது தரையில் கிடந்த பெண் தனது மாமனாரிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

    அவளைக் கொல்லுங்கள், முழு பலத்துடன் கொல்லுங்கள் என்று அவரது கணவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் சகோதரர் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சகோதரியை அவரது கணவர் கேசவ் குப்தா அவரது மாமியார், மாமனார் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.

    அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது.

    குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாவித்ரி காது கேளாத வாய் பேச முடியாத தனது மகன் வினோத் குறித்து அவரது கணவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
    • குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    கர்நாடகாவில் உத்தர கன்னடா பகுதியில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது 6 வயது மகனை முதலைகள் வசிக்கும் கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்த தாயை போலீஸ் கைது செய்துள்ளனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கால்வாயில் குழந்தையின் உடலை தீவிரமாக தேடினர். அப்போது குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து அவர்கள் மீட்டனர். அப்போது குழந்தையின் வலது கையை கிட்டத்தட்ட முதலை விழுங்கியிருந்தது.

    சாவித்திரியின் கணவர் ரவிகுமார் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் காது கேளாத வாய் பேச முடியாத மூத்த மகன் வினோத் தொடர்பாக இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் தனது மகனை சாவித்திரி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக சாவித்ரியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, எனது கணவர் தொடர்ந்து என்னை கேலி செய்தார், காது கேளாத, வாய் பேச முடியாத தனது மகனை கொலை செய்து விடுமாறு என்னிடம் கூறினார். என் மகன் எவ்வளவு சித்திரவதைகளை தான் தங்குவான். இந்நிலையில், கடந்த மே 4 அன்றும் இதே போல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடந்தது. அதனால் என் மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் தூக்கி வீசினேன். என் மகனின் மரணத்துக்கு என் கணவரே காரணம் என்று சாவித்திரி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    அதன் பின்னர் அவரது கணவர் ரவிக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

    • கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது.
    • குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், வேமகிரி கணபதி நகரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பள்ளிகள் படித்து வருகின்றனர்.

    கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை தனது நைட்டியில் சுற்றி எடுத்துச் சென்று 20 அடி பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    குழந்தை அழும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு எடுத்து வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கட்டிட மேஸ்திரி குழந்தைக்கு சுற்றப்பட்டுள்ள நைட்டி தனது மனைவி உடையது என்று கண்டுபிடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கேட்டபோது ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கர்ப்பத்தை மறைத்ததாக கூறினார்.

    இதையடுத்து மனைவி மற்றும் மகளை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
    • குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.

    இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.

    அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.

    இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    • குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (30) கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு இலக்கியா (9), அதன்யாஸ்ரீ (4 1/2), சபரீசன் (1 1/2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை பரமத்திவேலூர் தாலுகா ஜமீன் இளம்பள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு வந்த வேலுசாமி தனது மனைவி வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். முனியப்பம்பாளையத்தில் இருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பஸ் நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

    அப்போது குழந்தை அதன்யாஸ்ரீ எதிர் திசையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் ஜேடர்பாளையம்- சோழசிராமணி சாலையை கடக்க வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் வாகனம் எதிர்பாராத விதமாக குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியது.

    இதில் குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வழியில் நின்றிருந்த பைக் மீது மோதினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்(24). இவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த அருண் என்பவரது பைக் மீது மோதினார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேசை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த ராஜேசின் தாய் செல்வியையும் கடுமையாக தாக்கி வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடி உள்ளனர். காயமடைந்த ராஜேஸ் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை.
    • குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்தியாலா காந்தி நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஷன்னூபி. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ஷன்னூபிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் இறந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஷன்னூபிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை மகேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் இருந்தனர்.

    அப்போது ஷன்னூபியின் அறையில் இருந்து குழந்தை அலறல் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் ஷன்னூபியின் அறைக்கு சென்று பார்த்தபோது அறை கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.

    குழந்தையை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மகேஷின் தாய் போலீசில் புகார் செய்தார் போலீசார் ஷன்னூயை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தை மற்றும் இந்த குழந்தையும் ஷன்னூபி கழுத்தை நெரித்து கொலை செய்ததும். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
    • இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.

    எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.

    தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).

    கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.

    அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    ×