என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 205975"
- நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
- இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.
மதுரை
தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.
நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.
அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.
ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.
இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.
அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.
வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
- அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,
பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
- இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழ கத்தில் கடந்த 1½ ஆண்டு காலமாக பொதுமக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு சமீபத்தில் சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு என்பது போன்ற அத்தியாவசிய தேவைகளின் வரிகளை, விலைகளை அதிக அளவில் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த கட்டண உயர்வு களை திரும்ப பெற்றிட வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் (தினமணி தியேட்டர்) நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
- அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.
..........................
மதுரை
மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.
அவனியாபுரம்
பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும், வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.
இந்த சிறப்பு மிக்க விழாக்களில் பங்கேற்க வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருவண்ண கொடியினை கையில் ஏந்தி வரவேற்பு கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தி னர் என பெரும்பாலானோர் பங்கேற்று வரவேற்பு நிகழ்ச்சியினை சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
- போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி
கன்னியாகுமரி:
மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதமடைந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையி லான போலீசார் இலப்பை விளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.
சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத் தும் வீடியோவில் பதிவுச்செய்யப் பட்டது. இந்த திடீர் சோதனையின்போது அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.தகவலறிந்து பொதுமக்களும் முஸ்ஸாமில் வீட்டு முன் திரண்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை முடிந்து வெளியே வந்த டி.எஸ்.பி. தங்கராமனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சோதனை அறி க்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என கூறினார். மேலும் தலைமறைவாகியுள்ள மணவாளக்குறிச்சி பகு தியை சேர்ந்த ஆறான்வி ளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் இவர்களின் வீடுகளிலும் குளச்சல் போலீஸ் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் சோதனை நடந்தது.
- சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்குமாறு பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலை தந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயலும் சங்பரிவார்- சனாதன சக்திகளின் சூழ்ச்சியை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அ.தி.ம.மு.க. மனதார வரவேற்கிறது. மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம்.
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் தமிழகம் முழுவதும் அ.தி.ம.மு.க.வினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம். மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த எனது பாட்டி மரணத்தில் சந்தேகம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) என்ஜினீயரிங் படித்துள்ளார்.
இன்று அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் டவரில் திடீெரன வேக வேகமாக ஏறினார்.
இதனை பார்த்த போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ராம்குமார், சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வாருங்கள். பேசி சரிசெய்து கொள்ளலாம் என்றனர்.
ஆனால் ராம்குமார் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் உங்களது கோரிக்கையை கீழே இறங்கி வந்து தெரிவியுங்கள் என்றனர். இதையடுத்து ராம்குமார் டவரில் இருந்து கீழே இறங்கினார்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு ராம்குமார் போலீசாரிடம் கூறும்போது:-
எனது பாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை என்னிடம் தர வேண்டும் என்று கேட்டேன்.
ஆனால் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து டவரில் ஏறினேன் என்றார்.
இதனை தொடர்ந்து போலீசார் ராம்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராம்குமார் ஏற்கனவே ஒருமுறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது அவர் 2-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார்-அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என பசும்பொன்பாண்டியன் அறிக்கையை வெளியிட்டார்.
- அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.
மதுரை
அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளை கொண்டாடுவது தமிழனின் கடமையாகும். திராவிடப்பெருநாளாகும் வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்திட அ.தி.ம.மு.க. நிர்வாகிகளையும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்று தலைமைக்கழகத்தில் சார்பில் எனது தலைமையில் மதுரையில் உள்ள அன்னை இல்லத்தில் அண்ணா பிறந்தநாள் விழா காலை 9மணிக்கு நடைபெறுகிறது.
பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தமிழர்களின் கடமையாகும். சனாதன, வகுப்புவாத சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடாமல் தடுக்க பெரியாரின் பிறந்தநாளை திருவிழாவாக அ.தி.ம.மு.க.வினர் கொண்டாடி மகிழ வேண்டும்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டுகிறேன்.தலைமைக்கழகத்தின் சார்பில் மதுரை மேலூரில் 17-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
காலை 8 மணிக்கு பெரியார் படத்திற்கு தலைமைக்கழகத்தில் மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இதில் அ.தி.ம.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வட்ட, ஊர்க்கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்