search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214766"

    • கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் முள்ளக்கல்லை சேர்ந்தவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் ஜலந்தர் ஆயராக இருந்தார். அப்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த பிரச்சினை கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பிராங்கோ முள்ளக்கல் ஜலந்தர் ஆயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. அவரது ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பாலியல் புகார் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், மறைமாவட்ட நன்மைக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
    • தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.

    திருப்பூர்:

    ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.

    வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    • புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

    மதுரை

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

    கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

    ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

    தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார்.

    கோவை,

    கோவையைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.

    இந்தநிலையில் அவர் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் பிப்ரவரி மாதம் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் என்னை பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டினார். இதனால் ஜனவரி 16-ந் தேதி 18 தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றேன்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு வந்தேன். இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக கட்டுப்பாட்டு அறை துணை சூப்பிரண்டும், எழுத்தரும் செயல்பட்டு என்னை பற்றி அவதூறாக பேசினர். இன்ஸ்பெக்டர் பற்றி 3 முறை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேலும் இன்ஸ்பெக்டர் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

    தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குகிறார்கள். இதனால் நான் இந்த பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு அரசால் வழங்கப்பட்ட சீருடை மற்றும் இதரபொருட்களை ஒப்படைத்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
    • சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

    சென்னை:

    பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது. சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

    அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.

    இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ்.
    • காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ். இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்று கூறி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை கண் டித்து பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 15-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

    ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

    கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

    எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் நான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காமராஜ் ராஜினாமா செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • பீகார் சட்டசபை இன்று காலை கூடியது.

    பாட்னா:

    பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முறித்தார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார்.

    நிதிஷ்குமார் அரசும் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    இதற்கு மந்திரி விஜய் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியது.

    • அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
    • கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.

    மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.

    இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-

    நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.

     தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் அறிவித்துள்ளார். #ZinedineZidane #RealMadrid
    உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணி திகழ்ந்து வருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன்ஸ் கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது. லா லிகா தொடரிலும் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இதற்கு ஷிடேன் முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய ஷிடேன், பதவியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் விலகுவது தான் அனைவருக்கும் நல்லது.


    இது என்னுடைய முடிவு. நான் தலைமை பயிற்சியாளர் பதவியை மேலும் நீட்டிக்க இருந்தது உண்மை தான். அது என்னுடைய தவறு. அணியில் மாற்றம் தேவைப்படுகிறது. இது தான் சரியான நேரம். ஷிடேயின் முடிவு பலருகு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிடேன் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ZinedineZidane #RealMadrid
    ×