search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 216847"

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ந்தேதி நடக்கிறது.
    • நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தமிழகத்தில் உள்ள ஓசூர் ஆலையில் பணிபுரிய பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த முகாமில் 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    உடற்தகுதியில் உயரம் குறைந்தபட்சம் 145 செமீ இருக்க வேண்டும். எடை 43 கிலோ முதல் 65 கிலோ வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு, 12 நாட்கள் பயிற்சி நிறைவுக்கு பிறகு ரூ.16 ஆயிரம் மாதச்சம்பளத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நம்பிக்கைக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சுசூழல் ஏற்படுத்தித் தரப்படும்.

    மேலும் பி.எப்., ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை பிடித்தம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் உயர்கல்வி பயிலும் வசதியும் உண்டு. மேற்காணும் வேலைக்கான நேர்காணல் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சிவகங்கை மன்னர்துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்த நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

    விரைந்து மாறி வரும் தொழில் உலகில் பணியாற்றும் பொழுதே பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாழ்கையில் முன்னேறவும், புதுமைமிகு எந்திரங்களை இயக்கத் தெரிந்து கொள்ளவும், மெய்நிகர் யதார்தத்தின் உதவியுடன் மெருகூட்டும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் இது நல்ல வாய்ப்பு ஆகும்.

    எனவே,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த மு காம் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது.
    • தொழிற்பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுவதற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்கள் விண்ணப்பம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாவது தளம் என்ற முகவரியில் பெற்று 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    தரங்கம்பாடி:

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

    படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-

    என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.

    நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.

    அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.

    அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.

    எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.

    • நாடு முழுவதும் 50 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய மந்திரி மற்றும் மாநில, மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார்.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணெய் கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

    இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற் கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 

    ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை வாரணாசியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் 50 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய மந்திரி மற்றும் மாநில, மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மோடி தொடங்கி வைத்ததும் அனைத்து இடங்களிலும் பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரிகள் வழங்கினார்கள்.

    தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய 2 இடங்களில் நடந்தன. சென்னையில் பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி, ரெயில்வே வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன், பா.ஜனதா தொழில் பிரிவு நிர்வாகிகள் கோவர்தன்,பொன்முரளி மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கபிலன் மற்றும் சுமதி வெங்கடேஷ், ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு அஞ்சல் துறையில் 250 பேருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாணவ-மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

    மதுரை

    தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் மனுக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பட்டியல் இனத்தவர் 45 வயது வரையிலும் இதர வகுப்பினர் 40.வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு மையத்தில் பொதுப் பிரிவின் கீழ் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பட்டதாரிகள் உதவித்தொகை பெறலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடித்தவர்கள் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் வர வேண்டியது இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கி பயன் பெறலாம்.

    ஓராண்டுக்கு பிறகு தொடர்ந்து உதவித்தொகை பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பு முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது.
    • 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-ஒசூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பட்டப்படிப்புடன் கூடிய நிரந்தர பணி வாய்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதர இயக்கம் இணைந்து பெண்க ளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

    இந்த முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகுதி உடைய பெண்கள் நாளை (15-ந் தேதி) விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வ தற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியம னமும் வழங்கப்படும்.

    எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2020. 2021 -2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்கள்.

    • பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் வங்கிக்கடனை கலெக்டர் வழங்கினார்.
    • இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியுடன் வங்கிக்கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடனுதவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கி வருகின்றன. அதனடிப்படையில் தற்போது மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு பனைசார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு ஒரு வார காலம் பயிற்சி வழங்கி சுய தொழில் தொடங்க 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் அவர்கள் பனைசார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுலா பகுதிகள் அதிகமுள்ள இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள்.

    அவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற முடிவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். தற்பொழுது இந்த மகளிர் குழுவினர் பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பதை கையாளப்பட்டுள்ளார்கள். இதை இவர்கள் நன்கு செயல்படுத்தினால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற முடியும்.

    அது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றம் பெறவும் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட கடன் எளிதாக திருப்பி செலுத்துவதன் மூலமும் அவ்வப்போது கூடுதலாக வங்கியில் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம். எனவே சிறப்பாக செயல்பட்டு மற்ற குழுக்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்திட வேண்டும்.

    இதே போல் ஆர்வமுள்ள படித்த ஆண்கள், பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ராதிகா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்சி.(சிஜிஎல்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டிஎன்பிஎஸ்சி., டிஎன்யுஎஸ்ஆர்பி., எஸ்எஸ்சி., டி.ஆர்.பி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது Assistant Audit Officer, Assistant Account Officer, Assistant Section officer, Inspector of income tax, Junior Statistical Officer போன்ற பதவிகளில் 20,000 க்கும் மேற்ப்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 17.9.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.9.2022 அன்று மாலை 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை https://forms.gle/BHUGLvaxfkkCMqKt8 என்ற link-இன் மூலம் google form -ல் பதிவு செய்வதன் மூலமோ (அல்லது) 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

    ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்:

    1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)

    2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)

    3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)

    5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள்.

    • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லேத் ஆபரேட்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சி.என்.சி. ஆபரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லேத் ஆபரேட்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவ ர்களுக்கு சிஎன்சி ஆப்ப ரேட்டர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு பயிற்சியிலும் 30 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்ப டுகின்றனர். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் லேத் ஆப்பரேட்டர் பயிற்சிக்கு ரூ.5000 உதவி தொகையும், சிஎன்சி ஆப்பரேட்டர் பயிற்சிக்கு ரூ.5500 உதவித் ளதொகையும் வழங்கப்படுகிறது.

    பயிற்சி முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

    இந்த பயிற்சியில் சேருவதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை பயிற்சியில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன், முதல்வர் குமரன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கை விட ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக திகழ்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சிலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் முதலமைச்சர் வருகிற 10-ந் தேதி அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை பாதுகாக்கின்ற வகையிலும், போதையில்லா தமிழகத்தை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில், கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.

    மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனதை சோர்வடையாமலும் மற்றும் மன தைரியத்துடன் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக, முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட ''நான் முதல்வன்'' திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன்மூலம் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தககங்களை, இந்த கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசி–ரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்துக் கொண்டனர்.

    சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களின் கல்வி, உணவு, வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த டேக் கேர் இண்டர்நேஷ்னல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இன்று காலை நடைப்பெற்றது.

     

    இந்நிகழ்ச்சிக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான செளந்தர் ராஜா, லிட்டில் ஃபிளவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான் சேவியர் தங்கராஜ், நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுந்தரபாண்டி, இந்திய தொழில்துறை தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டி செந்தமிழன், சுதா ஃபவுண்டர் நிஷா தொட்டா, சாண்ட்விச் ஸ்கொயர் நிறுவனர் தன்வீர், போஸ் க்ளாத்திங் ஃபவுண்டர் உஸ்மான், வாசன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் இயக்குனர் வேனுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    ×