என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 217541"
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
- மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் இந்த பூங்கா அமைய இருக்கிறது.
திருப்பூர்:
பி.எம். மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா தமிழ்நாட்டில் விருதுநகரில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு ஏற்றுமதியாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பி.எம்.மித்ரா மெகா ஜவுளி பூங்கா தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜவுளித்தொழிலை மேம்படுத்துவதற்கு பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டுகள். மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பை செலுத்தி வருகிறார். மெகா ஜவுளிப்பூங்கா அமையும்போது ஜவுளித்துறையில் ஆடைகள் உற்பத்தியில் உலக அளவில் தமிழகத்தின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் 1,100 ஏக்கர் பரப்பளவில் இந்த மெகா ஜவுளிப்பூங்கா அமைய இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் இந்த பூங்கா அமைய இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்கா அமைந்தால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுவதுடன் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெருகும்.
திருப்பூரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் பனியன் தொழில் நடத்துவதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மெகா ஜவுளிப்பூங்காவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சோலார் மின்திட்டம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் (பியோ) ஏ.சக்திவேல், பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பி.எம். மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமைய இருப்பதாக அறிவித்ததற்கு பாராட்டுகள். ஜவுளித்துறையில் உற்பத்தி அதிகரித்து வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை எட்ட முடியும். மெகா ஜவுளிப்பூங்கா அமைப்பதன் மூலமாக வெளிநாட்டினர் ஆயத்த ஆடை உற்பத்திக்கு இந்தியாவை தேடி வரும் நிலை ஏற்படும்.
இந்தியாவில் 7 மெகா ஜவுளிப்பூங்கா அமையும்போது, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். உலக தரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்போது அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதி வர்த்தகம் சிறந்தநிலையை எட்டும். செயற்கை இழை ஆடை தயாரிப்புக்கு பி.எல்.ஐ. திட்டத்தின் சாதகமான அறிவிப்புவரும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மேலும் வளர்ச்சி பெற்று இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றம் பெறும் என்று கூறியுள்ளார்.
- 3வது உலகளாவிய ஜவுளித்தொழில் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் துவங்கியது.
- பனியன் கழிவை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் யுத்திகள் குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது.
திருப்பூர் :
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சார்பில் 3வது உலகளாவிய ஜவுளித்தொழில் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் துவங்கியது. முதல் நாளில் உலகளாவிய ஜவுளித்தொழில் வளர்ச்சி மாநாடு நடந்தது.இந்திய அளவில் உற்பத்தியான ஆயத்த ஆடை ஜவுளி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு, ஏ.இ.பி.சி., மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதியாக துணை தலைவர் இளங்கோவன் பங்கேற்றுள்ளார்.
சாயக்கழிவு சுத்திகரிப்பில், ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம், மரம் வளர்ப்பு திட்டம், காற்றாலை மின் உற்பத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, பனியன் கழிவை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் யுத்திகள் குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது.இது குறித்து, மாநாட்டில் பங்கேற்றுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர்இளங்கோவன் கூறியதாவது :- சர்வதே அளவில் வேறு எங்கும் இல்லாத ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் பின்பற்றுகிறோம்.தினமும் 13 கோடி லிட்டர் கழிவு நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். காற்றாலை மின் உற்பத்தி, மறுசுழற்சி என திருப்பூரின் மறுசுழற்சி திட்டங்கள் குறித்து விளக்கினோம்.கேட்டறிந்த தொழில்துறையினர் திருப்பூரின் சாதனையை வெகுவாக பாராட்டினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து அணிகள் கலந்து கொண்டன
- சிவகங்கை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல் மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மைதானத்தில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கோ-கோ கழகம் இணைந்து , சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாநில அளவிலான மகளிருக்கான கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெண்களுக்கான நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஈரோடு, சென்னை, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் பங்கேற்றனர்.மாநில அளவிலான மகளிருக்கான கோ-கோ போட்டியை சென்னை இந்திய விளையாட்டு ஆணைய மைய பொறுப்பாளர் டி.பி. மதியழகன் துவக்கி வைத்தார்.இறுதிப் போட்டியில் சிவகங்கை அணியினரும், ஈரோடு அணியினரும் மோதிக்கொண்டனர். இப்போட்டியில், சிவகங்கை அணியினர் முதலிடமும், ஈரோடு அணியினர் 2 ஆம் இடமும், திருப்பூர், கோவை ஆகிய அணியினர் 3 ஆவது இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் , ஆல் மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் ராம்குமார் ஆகியோர் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கோ- கோ கழகச் செயலாளர் நெல்சன் சாமுவேல், இணைச் செயலாளர்கள் அசோக், கருப்பையா, ராஜி, நடுவர் மன்றக் குழு நாகராஜ், ஏஞ்சல்ஸ், நாராயணன் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவு
- ரூ.25 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு
திருச்சி,
இஸ்லாமியர்களின் ரம்ஜான்நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்க்கு தேவையான பச்சரியை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் வழங்குவது வழக்கமானது. அந்த அடிப்படையில் இந்த 2023ம் ஆண்டும் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க ரூ. 25 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 6500 மெட்ரிக் டன் அளவுள்ள பச்சரிசி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் முதல்வருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இந்திய துணைகண்டத்திலேயே சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மு.க. ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- சீருடை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சியில் சீருடை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நலதிட்ட உதவிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பழனி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் குமார் வரவேற்றார். மேலும் நகராட்சியில் பணிபுரியும் 19 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு அரசு வழங்கும் சீருடையை நகர மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் வழங்கினர்.
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தன்னார்வலர் பொற்கொடி வெங்கட்ராமன் என்பவர் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு தலா 5 கிலோ விதம் ஒரு டன் அரிசியை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சியின் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியம்
- 12வயது சிறுமி பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பரதநாட்டியம் சிறப்பாக ஆடி அசத்திய 7 ஆம் வகுப்பு மாணவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் அவரது பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் குரு சக்தி செல்லதுரை வி.பி.எஸ் கலைக்கூடம் மூலம் பயிற்சி கொடுத்தனர்.சிறுமி ஓவியாவும் ஆர்வத்துடன் பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டார். மேலும் பள்ளிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று மாலை நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இவரது நடனத்தில் அனைத்து பாவனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடனமாடினார். இதனை மெய்மறந்து பார்த்த சக நடன கலைஞர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவி ஓவியாவின் பரதநாட்டியத்தை பார்த்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்,
- வெள்ளப்பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் வீட்டினை கண்டுபிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்த நரேஷ்குமார் மற்றும் சித்ரகலா தம்பதியின் மகள் விஷாலினி ஐதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார்.
இவர் வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார்.
இந்த சாதனம் மனித உயிரை குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், செல்ல பிராணிகள், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை காப்பாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லெக்டர் அலுவலகத்தில் பிரதமர் "பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்" விருது மற்றும் ரூ.1லட்சம் பரிசுத்தொ கையாக காணொலி காட்சி மூலம் விசாலினிக்கு வழங்கினார்.
அதனை த்தொடர்ந்து மத்திய அரசின் மூலம் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதிற்கான பதக்கம், கைகடிகாரம், டேப் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் விருதிற்கான சான்றிதழ் மத்திய அரசின் மூலம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப ப்பட்டு அதனை கலெக்டர் ஜெயசீலன் விசாலினியிடம் வழங்கினார்.
- மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
- இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,
விழுப்புரம்:
ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.
ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.
- சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் போலீசாரிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். மேலும் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்வது குறித்து போலீசாரிடைேய கலந்தாய்வு நடத்தினார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட போலீசாரில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். பின்னர் அவர் கடந்த மாதத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடிய 49 போலீசாருக்கு வாழ்த்து மடலை வழங்கினார்.
- அரிமா சங்கம் சார்பில் சாதனை செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் சிங்கப்பூரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.
அவருக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், பட்டய தலைவர் அனிதா பால்ராஜ், செயலாளர் வைரமுத்து, பொருளாளர் சுந்தரம், முன்னாள் தலைவர் சிவராஜன் ஆகியோர் மாணவனை பாராட்டி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினர்.
இதேபோல ஆசாதி சாட் 2 செயற்கைகோளுக்கு மென்பொருள் தயாரித்து இஸ்ரோ சென்று திரும்பிய திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் திருமங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளுக்கும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இதில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரபாண்டி, விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனர்
- சிலம்பம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகளின் அடிப்படையில் அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
கரூர்:
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போட்டியில் தடகளம், கபடி, நீச்சல், கிரிக்கெட், கையுந்துபந்து, கூடைப்பந்து, சிலம்பம், சதுரங்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகளின் அடிப்படையில், கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கான பாராட்டு விழா, கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கவுசல்யாதேவி, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டினர்.
- ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
- வீரர், வீராங்கனைகளை தமிழக போல்ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
தஞ்சாவூர்:
தேசிய அளவிலான 9-வது போல்ரிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சர்தூல்கர் மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் மினி சப் -ஜூனியர், சப்- ஜூனியர், ஜுனியர்,சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் தமிழ்நாட்டி னைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 9 வீரர், வீராங்கனைகள் என தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆண்கள்பிரிவில் 36 வீரர்களும், பெண்கள் பிரிவில் 36 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அனைத்து பிரிவிலும் சிறப்பாக பங்கேற்று விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் பங்கேற்ற அணிகளில் 4-ல் 3 பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
இந்த வீரர் , வீராங்கனைகள் தமிழ்நாடு போல்ரிங் கழகத்தின் செயலாளரும், தென்னந்திய போல் ரிங் கழகத்தின் செயலாளருமான செந்தில்நாதன் (காஞ்சீபுரம்), தலைவர் புவேனஸ்வரி (தஞ்சை), தலைமை பயிற்சியாளர் சுந்தரமூர்த்தி (சென்னை) ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றனர்.
மேலும் சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை, தமிழக போல் ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மார்ச் மாதம் நடைபெறக்கூடிய சர்வதேச போட்டி தமிழகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்