என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 219231"
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
- புதிய ஃபேட்பாய் 114 விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மாடல்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் ஃபேட்பாப் 114 மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஃபேட்பாய் 114 மாடலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 விவிட் பிளாக் ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம்
ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 பிரைட் பில்லியர்ட் புளூ ரூ. 24 லட்சத்து 68 ஆயிரம்
ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 கிரே ஹேஸ் மற்றும் சில்வர் ஃபார்சூன் ரூ. 25 லட்சத்து 19 ஆயிரம்
ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 ஹெர்லூம் ரெட் ஃபேட் ரூ. 25 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய மாடலில் சிங்கிள்-பாட் ஹெட்லைட், ரியர் ஸ்வெப்ட் ஹேண்டில்பார், ஃபியூவல் டேன்க் மீது மவுண்ட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், க்ரோம் சரவுண்ட்கள், ஸ்டெப்-அப் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட் கேனிஸ்டர் உள்ளது. இதுதவிர மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய ஏராளமான அக்சஸரீக்களை ஹார்லி டேவிட்சன் வழங்குகிறது.
2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர்கள் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
சஸ்பென்ஷனுக்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளில் 49mm டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், அலுமினியம் ட்ரிபில் கிளாம்ப்கள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறத்தில் ஒற்றை டிஸ்க், நான்கு பிஸ்டன் கொண்ட கேலிப்பர், பின்புறம் ஒற்றை ரோட்டார், இரண்டு பிஸ்டன்கள் கொண்ட ஃபுளோடிங் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை தவிர புதிய ஹார்லி ஃபேட்பாய் 114 மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த மாடலில் உள்ள கன்சோல் அனலாக் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீனில் கியர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல், கடிகாரம், ட்ரிப், ரேன்ஜ் மற்றும் டக்கோமீட்டர் இண்டிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.
- கீவே நிறுவனத்தின் K300 R மோட்டார்சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களுக்கும் விலை குறைப்பு அறிவிப்பு.
- விலை குறைப்பு தவிர கீவே K300 R மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
கீவே இந்தியா நிறுவனம் தனது K300 R ஃபுல்லி-ஃபேர்டு மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பு கீவே K300 R அனைத்து நிற வேரியண்டிற்கும் பொருந்தும். முன்னதாக வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த கீவே K300 R அனைத்து வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று மாறி இருக்கிறது.
இது கீவே K300 R முந்தைய விலையை விட ரூ. 55 ஆயிரம் வரை குறைவு ஆகும். விலை குறைப்பு காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்ததில் இருந்தே கீவே K300 R மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் அதிக யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக ஒவ்வொரு யூனிட்டை இறக்குமதி செய்வதற்கான கட்டணம் குறைந்து இருக்கிறது. இதை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், கீவே நிறுவனம் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இதே போன்ற விலை குறைப்பு கீவே K300 N மாடலுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கீவே K300 R மாடலில் 292.4சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.1 ஹெச்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை இது போட்டி நிறுவன மாடல்களை விட கணிசமான அளவு குறைவு ஆகும்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய புதிய ஆலையை கட்டமைக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டில் புதிதாக உற்பத்தி மையம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வாகன உற்பத்தி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரால் என்பீல்டு நிறுவனம் சென்னையை அடுத்த செய்யாறு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ. 1000 முதல் ரூ. 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி திறனுக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்த ஆலையில் ஐசி என்ஜின் உற்பத்தி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
வாகனங்கள் அறிமுகத்தை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் இண்டர்செப்டார் / காண்டினென்டல் ஜிடி 650 மாடல்களின் அலாய் வீல் வெர்ஷனை மாடலை அறிமுகம் செய்தது.
இந்த வரிசையில், ஷாட்கன் 650 மற்றும் ஹிமாலயன் 450 மாடல்கள் விரைவில் இணையும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் யூனிட் வல்லம் வடகால் ஆலையில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. செய்யாறில் உருவாகும் ஆலையை பயன்படுத்தி பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு படிப்படியாக மாற ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஃபேட் பாப் 114 மோட்டார்சைக்கிள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ஃபேட் பாப் 114 சீரிசில் விவிட் பிளாக் நிறம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் 2023 ஃபேட் பாப் 114 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஃபேட் பாப் 114 விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப இந்த மாடலின் விலை வேறுப்படும்.
2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஃபேட் பாப் 114 மாடல்- விவிட் பிளாக், ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் விவிட் பிளாக் நிற வேரியண்டின் விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம் என்றும் ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 20 லட்சத்து 68 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் அழகிய ஹெட்லைட் டிசைன், ஃபியூவல் டேன்க் மீது இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சாப்டு ரியர் ஃபெண்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் முன்புறம் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் டுவின் டிஸ்க் மற்றும் நான்கு பிஸ்டன்கள், பின்புறம் இரண்டு பிஸ்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் 13.2 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலின் மொத்த எடை 306 கிலோ ஆகும்.
இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடல் இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ், டிரையம்ப் ராக்கெட் 3, டுகாட்டி எக்ஸ் டயவெல், பிஎம்டபிள்யூ ஆர்18 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 9 பேர் சிக்கினர்.
- தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
மதுரை
தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அவர்கள் பரசுராம்பட்டி சிலோன் காலனி கனக சுந்தரம் மகன் ஜீவரஞ்சன் (வயது21), புதூர் வீரகாளி கோவில்தெரு சுரேஷ் மகன் வினோத் கமார்(20), செல்லூர் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மாட்டுத்தாவணி கருப்பையா மகன் விஜயசாரதி (21), நரிமேடு ஜீவா குறுக்குத்தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21), நரிமேடு, ஜீவா தெரு, செந்தில் குமார் மகன் மனோஜ் (19), அவரது சகோதரர் வேல் பிரபாகரன் (22), சுயராஜ்யபுரம் ராஜா மகன் நிரஞ்சன் (19) என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 பான் அமெரிக்கா 1250 மெக்கானிக்கல் மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய மாடலில் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பைக் மாடல்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்த ஹார்லி சமீபத்தில் 2023 பான் அமெரிக்கா அட்வென்ச்சர் டூரர் மாடலை அறிமுகம் செய்திருந்தது.
இந்த வரிசையில், பான் அமெரிக்கா மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டை நீக்கிவிட்டு இதற்கு மாற்றாக ஸ்பெஷல் வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் வேரியண்ட் பான் அமெரிக்கா 1250 மாடல் அலாய் வீல் அல்லது ஸ்போக் வீல்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் ஸ்போக் வீல் வேரியண்டில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை அலாய் வீல் வேரியண்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும்.
இவைதவிர 2023 பான் அமெரிக்கா 1250 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய சந்தையில் புதிய 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பான் அமெரிக்கா 1250 மாடலிலும் 1252சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 150.9 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், எலெகர்ட்ரிக் லின்க் செய்யப்பட்ட பிரேகிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேகிங் கண்ட்ரோல், ஐந்துவிதமான ரைடிங் மோட்கள், மூன்று கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடல் பிஎம்டபிள்யூ R 1250 GS, ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- உள்நாடு மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதியும் முதல் முறையாக 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 895 யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. முன்னதாக 2018-19 வாக்கில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 492 யூனிட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு தனது முந்தைய விற்பனையை முறியடித்து இருக்கிறது.
2022 ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6 லட்சத்து 02 ஆயிரத்து 268 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறந்த விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 840 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 41 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதியை பொருத்தவரை 2022 நிதியாண்டில் 81 ஆயிரத்து 032 யூனிட்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 55 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
"இந்த ஆண்டு ராயல் என்பீல்டு விற்பனை வளர்ச்சியில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. இந்த முறை விற்பனையில் புதிய எல்லையை கடந்து இருக்கிறோம். முதல் முறையாக எங்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீடியோர் 650 போன்ற மாடல்கள் எங்களின் எதிர்பார்ப்புகளை கடந்து, புதிய வாடிக்கையாளர்களை பெற்று தந்துள்ளது," என்று ராயல் என்பீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி பி. கோவிந்தராஜன் தெரிவித்தார்.
- ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்தது.
- நைட்ஸ்டர் சீரிஸ் ஸ்பெஷல் வேரியண்ட் இந்தியாவில் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் 2023 நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நைட்ஸ்டர் சீரிஸ் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. 2023 நைட்ஸ்டர் சீரிஸ்- ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்பெஷல் வேரியண்டில் ஹெட்லைட் கௌல், பில்லியன் சீட், உயரமான ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஸ்பெஷல் வெர்ஷன் அதிக நிற ஆப்ஷன்கள் மற்றும் வித்தியாச டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடல்- விவிட் பிளாக் மற்றும் ரெட்லைன் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல்- விவிட் பிளாக், பிளாக் டெனிம், பிரைட் பில்லியர்ட் புளூ மற்றும் இண்டஸ்ட்ரியல் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இரண்டு வேரியண்ட்களிலும் விவிட் பிளாக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மற்ற நிற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் வரை அதிகம் ஆகும். மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2023 ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் சீரிசில் 975சிசி, வி-டுவின், லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 88.5 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 5.5. லிட்டர் /100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18 கிலோமீட்டர்) வரை செல்லும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஷோவா முன்புற ஃபோர்க்குகள், டுவின் ஸ்ப்ரிங்குகள், இரண்டு வீல்களிலும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ரோட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டு நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என்றும் நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 29 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கவாசகி நிறுவனத்தின் 2023 வல்கன் S மோட்டார்சைக்கிள் ஒற்றை நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- புதிய 2023 வல்கன் S மாடலில் 649சிசி, பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் 2023 வல்கன் S மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி வல்கன் S மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2023 சீரிசுக்கு இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட், மெட்டாலிக் மேட் கார்பன் கிரே எனும் ஒற்றை நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இதுதவிர மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த ஸ்டைலிங் எவ்வித மாற்றமும் பெறவில்லை. 2023 கவாசகி வல்கன் S மாடலிலும் நீண்ட மற்றும் லோ ஸ்டான்ஸ், சிங்கில் பாட் ஹெட்லைட், வளைந்த ஃபியூவல் டேன்க் மற்றும் காம்பேக்ட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கவாசகி 2023 மாடலில் 649சிசி, பேரலல் டுவின் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 59.9 ஹெச்பி பவர், 62.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் மோனோ ஷாக் உள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 250mm ரோட்டார், பாதுகாப்பிற்கு டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் 2023 கவாசகி வல்கன் S மாடல் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் பெனலி 502C போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. போட்டி நிறுவன மாடல்கள் இரண்டும் வல்கன் S-ஐ விட குறைந்த விலையில் கிடைக்கின்றன.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்
- மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
Liquor smuggler on motorcycle arrestedஇதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- ஹோண்டா நிறுவனத்தின் 2023 SP125 மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கும் 2023 ஹோண்டா SP125 OBD2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD2 விதிகளுக்கு பொருந்தும் SP125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹோண்டா SP125 மாடலின் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 மாடல் புதிய விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ததோடு, புதிய நிறத்திலும் கிடைக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் ஆன்போர்டு பரிசோதனை சிஸ்டம் உள்ளது. இது மோட்டார்சைக்கிள் வெளிப்படுத்தும் காற்று மாசு விவரங்களை ரியல்டைமில் காண்பிக்கும். இத்துடன் 2023 ஹோண்டா SP125 மாடல் புதிதாக மேட் மார்வல் புளூ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் SP125 மாடல் தற்போது- பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் புதிய மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன ஹெட்லைட் கவுல், முன்புற ஃபெண்டர், ஃபியூவல் டேன்க் ஷிரவுட்கள், பாடி நிறத்தால் ஆன பில்லியன் கிராப் ரெயில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், க்ரோம் ஹீட் ஷீல்டு கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங் மோட்டார்சைக்கிளுக்கு அதிநவீன தோற்றத்தை வழங்கி இருக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிஸ்டன் கூலிங் ஜெட், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேகிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஃபியூவல் விரங்கள், இகோ இண்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.
முந்தைய போன்றே 2023 ஹோண்டா SP125 மாடலும் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டிரம் வேரியண்ட் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 131 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா SP125 மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ கிளாமர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 300சிசி பைக் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- புதிய ஹோண்டா 300சிசி மாடல் அட்வென்ச்சர் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் CB200X மாடலை அறிமுகம் செய்தது. இது ஹார்னெட் 2.0 நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட அட்வென்ச்சர் ஸ்டைல் மாடல் ஆகும்.
அட்வென்சசர் பைக் என்ற போதிலும், இதில் நீண்ட சஸ்பென்ஷன் அல்லது பெரிய முன்புற வீல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதோடு கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாகவே இருந்தது. புதிய மாடலில் இது போன்ற வழிகளை தவிர்த்து புதிய மாடலுக்கு ஏற்ற அப்டேட்களை ஹோண்டா நிறுவனம் வழங்கும் என தெரிகிறது.
புதிய அட்வென்ச்சர் மாடலில் ஹோண்டா நிறுவனம் 293சிசி, ஏர்-ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படலாம். இந்த எஞ்சின் 24.47 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB300F மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலின் பின்புறம் ஒற்றை ஷாக், யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. புதிய 300சிசி மோட்டார்சைக்கிளில் பெரிய முன்புற வீல், நீட்டிக்கப்பட்ட சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் வயர் ஸ்போக் ரிம்கள் வழங்கப்படலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்