search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223704"

    • இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர்.
    • கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஒடை அருகே மருத்துவக் கழிவு மற்றும் பிளாஸ்டிக்கழிவு பொருட்களை கொட்டி இரவு நேரங்களில் தீ வைப்பதாகவும் இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் புகார் கூறினர்.

    இதனை அடுத்து அவ்வாறு கழிவுகளை கொட்டி தீ வைக்கும் பொழுது உடனடியாக தகவலை கொடுங்கள் இரவு எந்த நேரமாக இருந்தாலும் அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்றுதெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர். இதனை அந்தப் பகுதி மக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு தெரிவித்தார்கள்.

    உடனடியாக எம்.எல்.ஏ., அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டு அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனத்தையும் வரவழைத்து அந்த தீயை முற்றிலும் அனைத்து மருத்துவக் கழிவுகளை அகற்ற செய்தார்.மேலும் இனி இதுபோல் மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அப்போது துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.

    • பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வ ராஜ் எம்.எல்.ஏ., இன்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.அப்போது பொதுமக்கள் 43 ம் நம்பர் அரசு பேருந்து இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் கோரிக்கை மனுவாக வழங்கினர். கவுன்சிலர்கள் ராதா கிருஷ்ணன்,வேலம்மாள், காந்தி,நெருப்பெரிச்சல் பாலன்,வார்டு செயலாளர் பாபுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடைகள் கட்டிட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள36 வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளை உள்ளடக்கிய ஒரு ரேசன் கடை இருப்பதால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ரேசன் கடை பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21, 28 26 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பங்கேற்று ரேசன் கடை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ், 28-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, நகர் மாணவரணி மகேந்திரன், 26-வது கவுன்சிலர் ராதா பூசத்துரை, சோலை செல்லப்பாண்டி, 21-வது வார்டு கவுன்சிலர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வாணி குமார், நகர் மீனவரணி அமைப்பாளர் நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஏ.டி காலனியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பொங்குபாளையம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, காளம்பாளையம் என்.எஸ்.பி.ராஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் நகர் பகுதியில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர் 9,10,11 ஆகிய வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜபாளையம் நகர, கிராமப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 10 நியாய விலைக்கடைகள் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் சம்மந்தபுரம் பகுதி நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 26-ந் தேதி லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் உள்ள வினோத் பாபு லண்டன் செல்ல உதவி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர்- காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் உதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதன்பேரில் எம்.எல்.ஏ. கொடுத்த நிதியை வினோத்பாபு வீட்டுக்கு சென்று கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார். அப்போது கீழச்செல்வனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • 7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம், மார்ச் 6-

    ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் லியோனி தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. முன்னிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டியார்பட்டி கலை யரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்கு சாட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தான். தொடர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    திண்டுக்கல் லியோனி பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. தான். பெண்கள் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் வசதி, புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அதிகளவில் பெண் மேயர்களை உரு வாக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி ஆகும் என்றார்.

    கூட்டத்தில் நகர செயலா ளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பா ளர் வேல்முருகன், துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேல், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ப.சிதம்பரம் வாழ்த்தினார்.
    • திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி- தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம். மதுமிதாவிற்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழி லதிபர் சத்குரு தேவனின் மைத்துனருமாகிய பொறி யாளர் கே.மெய்யப்பனிற்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி பேலஸில் விமரிசையாக நடந்தது.

    முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    திருமணவிழாவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசின் முதன்மை செயலர்கள், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
    • மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்

     திருப்பூர்  :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏம்.எம்.சதீஷ் தலைமை தாங்கினார்.

    மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வேலம்பாளையம் பகுதி செயலாளர் சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் ,அன்பகம் திருப்பதி, கே பி ஜி .மகேஸ்ராம், ஹரிஹரசுதன், எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தண்ணீர் பந்தல் தனபால், நிர்வாகிகள் கண்ணபிரான் ,ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அதிகாரிகள் வரவேற்றினர்.

    கன்னியாகுமரி:

    அரியானா மாநில சட்டமன்ற மனுக்கள் குழு இன்று காலை கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த சட்டமன்ற குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றினர்.

    பின்னர் இந்த எம். எல். ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

    அங்குள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுத்ரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன்சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

    • பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்.
    • எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    ×