search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224003"

    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராமநாதபுரம்

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

    இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ. முனியசாமி வழிகாட்டு தலின்படி நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் சாமி நாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ராமநாத புரம் அரண்மனை, புதிய பஸ் நிலையம், கேணிக்கரை உள்பட பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் ரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வீரபாண்டியன், எஸ்.எஸ்.செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், நகர் நிர்வாகிகள் கமலக் கண்ணன், காளீஸ்வரன், சசிகுமார், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி.

    துணைச் செயலாளர் நாகஜோதி, நகர் செயலாளர் வாசுகி, பொருளாளர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஆரிபு ராஜா, டாஸ்மாக் தொழிற் சங்க நிர்வாகி ராபர்ட், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், வன்னிய ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, இணை செயலாளர் முத்துக் குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் சண்முகம், முருகன், அய்யனார், ராம கிருஷ்ணன், முத்து முருகன், செந்தில், பழனி, ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை ஆதரித்தும், பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், சோழவந்தான் 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், சோழவந்தான் பேரூர் கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், சண்முக பாண்டியன், மன்னாடிமங்கலம், தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு, நகர இளைஞரணி கேபிள் மணி, சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    சமஸ்கிருத பாரதி சார்பில் தென் தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் இலவச அஞ்சல் வழியில் சமஸ்கிருத மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை அம்மன் சன்னதி தெரு குருகுல பள்ளியில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரிங்கேரி பாடசாலை அமைப்பாளர் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். முன்னதாக லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நெல்லை மாவட்ட சமஸ்கிருத மொழி ஆசிரியர்கள் லதா மாதா, நாகராஜன் மற்றும் செங்கோட்டை, தென்காசி பொறுப்பாளர்கள் தங்கம்மாள், உமா, உஷா, ஜெயா, வள்ளி, சீதாலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் திறனறி தேர்வு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, ஆசிரியர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு பற்றுறுதி தமிழ் சங்கத்தின் சார்பில் கல்வி திறன் சார்ந்த தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் திறனறி தேர்வானது சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. தேர்வினை ஆலத்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகளின் கல்வி திறனை சோதித்தறிய வினாத்தாளானது ஏ, பி என 2 வகைகளில் தயாரிக்கப்பட்டு 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 19 ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 51 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவுடன் விடைத்தாள்கள், ஆசிரியர்களை கொண்ட மதிப்பீடு குழுவினர்களால் திருத்தப்பட்டு முதல் 5 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சத்திரமனை பள்ளி மாணவன் சாய் பிரசாத் முதலிடமும், 2-ம் இடத்தை சிறுகன்பூர் பள்ளி மாணவி சகானாவும், அய்யனார்பாளையம் பள்ளி மாணவி சர்மிதாவும், 3-ம் இடத்தை எசனை பள்ளி மாணவி பூமிகாவும், சத்திரமனை பள்ளி மாணவி கானஸ்ரீயும், மலையாளப்பட்டி பள்ளி மாணவி மிருதிகாவும் பிடித்தனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையே 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொருளாளர் சக்தி தேவி மற்றும் வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி, தனபாலன்,வெங்கடாஜலபதி,மாணிக்கராஜ்,மகேஷ்,ராஜேஷ்,மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக மூத்த வழக்கறிஞர்கள் தனபாலன், மாணிக்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்யவும், ஏப்ரல் 27 அன்று ஓட்டுப் பதிவு நடத்தி, அன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    • 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
    • 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அவர் பேசியதாவது:

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 101-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2012-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 301 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன .

    342 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், கல்லூரி செயலர் கணேசன், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் சிவா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 14 வட்டாரங்களில் 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளி கல்வித்துறை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத, கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி (77), தாராபுரம் (108),குடிமங்கலம் (59),காங்கயம் (69),குண்டடம் (90), மடத்துக்குளம் (56),மூலனுார் (80),பல்லடம் (89), பொங்கலுார் (67),திருப்பூர் வடக்கு (78),தெற்கு (59), உடுமலை (105),ஊத்துக்குளி (65),வெள்ளகோவில் (80) உள்ளிட்ட 14 வட்டாரங்களில், 1,082 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இம்மையங்களில் கல்வி பயிலும், 19 ஆயிரத்து, 957 பேருக்கு நேற்று, அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.

    15 வயதுக்கு மேற்பட்டோர் என குறிப்பிட்டு இருந்தாலும், பெரும்பாலான மையங்களில், 40 முதல் 50 வயதை கடந்தவர்களே மாணவ,மாணவியராக மாறி வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுதி அசத்தினர்.அனுப்பர்பாளையம் புதுார், பத்மாவதிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தேர்வு பணிகளை ஒருங்கிணைத்தார்.

    • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
    • தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    * தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    * தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

    * தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

    * இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

    * தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

    * தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

    * தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

    * கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    * இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

    மலர்விழி, பெங்களூரு.

    • தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது
    • அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி

    பெரம்பலூர்:

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக பெரம்பலூர் படிப்பு மைய பொறுப்பு அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவ, மாணவி களுக்கான சிறப்பு தேர்வு வரும் மே மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மே மாதம் நடைபெற உள்ள சிறப்பு தேர்வை எழுத விருப்பும் மாணவ,மாணவிகள் https://coe.annamalaiuniversity.ac.in/bank/splddeapp.php என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் 31ம்தேதிக்குள் பதிவு செய்து தேர்வு எழுதிவெழுதி கொள்ளலாம். இந்த வாய்ப்பினை தேர்வர்கள் பயன்ப டுத்திக்கொ ள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் படிப்பு மைய தொலை பேசி எண் 04328-278877 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
    • நாளை நடைபெறுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற் கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் பொது மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது:-

    108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பு வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி சாலை கமிட்டி அருகில் நாளை (18-ந் தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    மருத்துவ உதவியாளர்: வயது 19- 30 வயதுக்குள் இருக்க வேண்டும், பிஎஸ்சி நர்சிங், டிஎம்எல்டி, ஏஎன்எம் அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி ,செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோ திக்கப்படும்.இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சிக்கு முன்னர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஓட்டுநர் பணி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 -35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். முதல் கட்டமாக எழுத்து தேர்வு , தொழில்நுட்ப தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு போன்றத் தேர்வுகள் நடைபெறும். மாதம் ஊதியமாக 15,235 வழங்கப்படும்

    அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பனிக்குண்டான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது சான்றிதழ்களின் அசல், நகல்களை கொண்டு வரவேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 9154250969 என்ற கைப்பேசி எண்ணில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
    • வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.

    வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

    12-ம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும்.

    அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் அடங்கிய கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளி்ட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    இப்போது வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    காலையிலே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 பணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் , 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

    ×