என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224091"
- மேலூரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன், நகர தலைவர் சேவுகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தசரதன், ராஜகோபால், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- அதிகாரிகள் ஆசியுடன் ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் வீடுகள் கட்டியதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அகரம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை மாநில அரசால் வழங்கப்பட்டு அதில் நூற்றுக்கணக்கான பயனாளிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தை சிலர் அதிகாரிகள் ஆசியுடன் ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் வீடுகள் கட்டியதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளும் விசாரணை நடத்திய நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மேலும் ஒரு இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பணியை நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட தனிநபர் தன்னிடமும் அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ளதாக கூறி கட்டிடம் கட்டும் பணியை நிறுத்த மறுத்துள்ளார். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர்.
பொது இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் அந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா வைத்துள்ளது குறித்தும் ஏற்கனவே போலி பட்டா மூலம் பொது இடத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
எனவே பொதுமக்களின் புகார்களையும் உரிய விசாரணை மேற்கொண்டு போலி பட்டா மூலம் பொது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீதும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடை வாடகை செலுத்தாமல் 35 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.
- போலீஸ் பாதுகாப்புடன் நேரில் சென்று ஆக்கிரமிப்பு கடைகளை இயந்திரம் மூலம் அகற்றி காலி செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டை செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் வள்ளலார் திடல் அருகே 4095 சதுர அடியில் உள்ளது.
இந்த கடைகளுக்கு 10 ஆண்டுகளாக சரியாக கடை வாடகை செலுத்தாமல் 35 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. மேலும் கடைகளை உள் வாடகைக்கு விட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழகில் அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை அடுத்து உடனடியாக கடைகளை காலி செய்யும்படி மூன்று மாதத்திற்கு முன்னே எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் அவர்கள் கடையை காலி செய்யவில்லை.
இதையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேரில் சென்று ஆக்கிரமிப்பு கடைகளை இயந்திரம் மூலம் அகற்றி காலி செய்தனர்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
- அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
கடலூர்:
புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது
இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.
ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
- ஜவஹர் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கரூர்:
கரூர் நகரத்தில், ஜவஹர் பஜார், தாலுகா அலுவலகம், கிளை சிறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள், நகைக்கடை, ஜவுளி கடை, லாட்ஜ்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், ஜவஹர் பஜாரில் தினமும் இரவு 11மணி வரை போக்குவரத்து இருக்கும். பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடை பாதையை ஆக்கிரமித்துள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள், ஜவஹர் பஜார் சாலை நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் உட்பட அனைத்து பொருட்களும் அப்புறப்படு த்தப்பட்டன.
- ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வி கோட்டை ஊராட்சி உருமநாதபுரம் கிராமம் பஸ் ஸ்டாப் அருகில் 6.76 ஹெக்டேர் அதாவது 17 ஏக்கர் வருவாய்த்துறை கணக்கில் கோவில் இடமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தவளைப்பள்ளம், பாத்திமா நகர், உருமநாதபுரம், அரசடிப்பட்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய கிராமத்தில் உள்ள நபர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த மழவராயர் சமூக அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் தெட்சிணாமூர்த்தி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த இடம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி 2021 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசிலினை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு கணக்கில் கோவில் இடம் என்றும் அறக்கட்டளை சார்பில் பெரிய கோட்டை முனீஸ்வரர் மற்றும் பன்னீர் கோட்டை பரிவார தெய்வங்களுக்கான இடம் என உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதாக கூறப்படுகிறது.
ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு 17 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றினர். இந்நிலையில் ஒரு கிணற்றில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினர். அதனால் அந்த கிணறு அகற்றப்படவில்லை. வருவாய்த்துறை சார்பில் ஆலங்குடி வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணன், சர்வேயர் கோபி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி, உதவியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான 10-க்கு மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பூங்காக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
- பூங்காக்களில் காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம், சிராஜ்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிராஜ்பூர் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த நகரில் அமைந்துள்ள அமரன் பூங்கா, மைமூன் பூங்கா, ஷேக்நூர் பூங்கா ஆகிய பூங்காக்களில் ஆக்கிரமிப்பதற்காக போடப்பட்டிருந்த கயிறு மட்டும் கம்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
40 அடி சாலையின் தெற்கு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே தடை உத்தரவை விலக்கி சிராஜ்பூர் நகருக்கு சொந்தமான பூங்காக்களை சுத்தம் செய்து காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சி ஊழியர்களுடன் வியாபாரிகள் மோதல்
- சத்திரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
திருச்சி,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆக்கி–ரமிப்புகள் அதிகம் உள்ள–தாக புகார்கள் எழுந்தது. இதனால் தினமும் போக்கு–வரத்துக்கு இடையூறும் ஏற் பட்டது.இது தொடர்பாக மாநக–ராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம், சிங்கா–ரத்தோப்பு, சிந்தாமணி பஜார், காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.இதில் 400-க்கும் மேற் பட்ட தரைக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் பெட்டி கடைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில், மாநகராட்சி உதவி ஆணையர் ரவி தலை–மையில், மாநகராட்சி அதி–காரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய இன்ஸ் பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது மாநகராட்சி உதவி செயற்பொ–றியாளர் பாலசுப்பிர–மணியன், இள–நிலை பொறியாளர் கணேஷ் பாபு மற்றும் மாநக–ராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேன்சி பொருட்கள் விற் பனை பெட்டிக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது அந்த கடையின் பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை ஒருமையில் அவதூறாக பேசினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து இது யாருடைய கடை என தெரியுமா? என கூறி மிரட்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளை தாக்க முற்பட்டனர்.உடனடியாக அருகில் இருந்த போலீசார் கடையின் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விலக்கி விட்டனர். அதனை தொடர்ந்து ஜே.சி.பி. எந்தி–ரம் மூலம் அந்த பெட்டி கடை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள ஆக்கி–ரமிப்புகளை மாநக–ராட்சி ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.அப்போது வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காமலாபுரம் கிராம சாலையை பலரும் ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடம் கட்டியுள்ளனர். அதனால், விவசாயிகள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஓட்டி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே செல்லும் வகையில் அகலமாக இருந்த சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது.
இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில், ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அதனால், பாதிக்கப்படுவர்கள் என 84 பேர் கலந்துக்கொண்டனர். அப்போது பாதிக்கப்படும் பலரும் ஆக்கிரமிப்பை தாங்களே எடுத்துகொள்ள கால அவகாசம் கேட்டனர். மேலும், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களது வீடு எந்த வகையிலும் சாலையை பதிக்கவில்லை என்றும், தங்களுக்கு ஒரு வீடு மட்டுமே இருப்பதால், நாங்கள் வாழ வழியில்லை என்றும் கூறினர்.
அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பலரும் முறையாக அளவீடு செய்யவில்லை என்று கூறினர். அப்போது பேசிய தாசில்தார் வள்ளமுனியப்பன், மீண்டும் அளந்து காட்ட அதிகாரிகள் தயாராக இருக்கிறோம். மேலும், அனைவருக்கும் வரைபடம் வழங்கப்படும். அதனால், நீங்கள் தனியார் சர்வேயர் வைத்துகூட அளந்து பார்த்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும், நீங்களே ஆக்கிரமிப்புகளை எடுத்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்ட நாளில் முறையாக உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பேரணை சாலை ஆக்கிரமிப்பு குறித்த சர்வே பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் வேலை செய்ய ஆட்கள் இல்லை.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து அறிக்கை தாக்கால் செய்ய வருவாய்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து முள்ளிப்பள்ளம் கிராம பகுதிகளில் முதல் கட்ட சர்வே பணிகள் முடிந்தது. 2-ம் கட்டமாக குருவித்துறை சித்தாயிபுரத்தி லிருந்து மன்னாடிமங்கலம் வரை சர்வே செய்யும் பணியை வட்ட அளவை யாளர் சந்திரா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முபாரக், முத்துகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. ஆனால் உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியின்போது அளவு டேப் பிடிக்க மற்றும் எல்லை குறியீடு வேலை செய்ய ஆட்கள் இன்றி தொய்வு ஏற்பட்டு உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியை துரிதபடுத்தி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது.
- ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும்.
கடலூா:
புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் 2 விபத்துகளில்2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது இது சம்பந்தமாக நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்ப டையில் ஆக்கிர மிப்புகள் தான் காரணம் என்று உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.
எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கடைக்கா ரர்களும் அவரவர்கள் கடைக்கு முன்பு வைத்திருந்த ஆக்கிரமி ப்புகளை தானாக முன்வந்து அகற்றினர். இதனால் சாலை அகலமாக காட்சி அளிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்