என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிர்ச்சி"
- பீரோ உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் மேல ரஸ்தா மெயின் ரோட்டில் வசித்து வரும் மணிகண்டன் (வயது 34), வெளிநாடு சென்று வந்தவர், இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வங்காரம்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு வந்த பொழுது பின் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார்.
உடன் சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டது. கைரேகை நிபுணர் கார்த்திக் கைரேகைகளை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காந்தி பூங்கா அருகே உள்ள கழிவு நீர்கால்வாயில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் கிராமநிர்வாக அதிகாரி ஜெகதீசன் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த குழந்தையின் தாய் தந்தை யார் என்றும், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் என விசாரணை.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கொத்தங்குடி மண்ணியாற்றங்கரையில் துணி துவைப்பதற்கு பொதுமக்கள் சிலர் சென்றனர். அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு கொத்தங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்பட்டதாலும், குழந்தையை ஒப்படைத்து 2 மணி நேரமாகியும் திரவ உணவு கொடுக்கப்படாததாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் ? குழந்தையின் பெற்றோர் யார் ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்தனர்
- இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதுஇந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் நேரங்களிலும், மேட்டூர் அணை தண்ணீர் மூலமும் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு பருவ மழை அதிகரித்ததால் வீராணம் ஏரி 6 முறை நிரம்பி வழிந்தது.தற்ேபாதும் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது.
சுமார் ஒரு வாரகா லமாக 47.50 அடியாக நீடித்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரி நிரம்பினால் அருகில் உள்ள கிராமங்களில் நீர்மட்டம் கணிசமாக உயரும். ஆனால், தற்ேபாது அதிகாரிகள் ஏரியில் உள்ள தண்ணீரை வீணாக கடலுக்கு திறந்து விடுகின்றனர். இதனால் ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. ஏரிக்கு 334 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
- தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி கொள்ளையர்கள் ஒரு வீட்டில் புகுந்து 2 பெண்களை கொலை செய்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரு சிறுவனையும் கத்தியால் குத்தினர். அவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த கொள்ளை நடந்து ஒரு மாதம் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தேவகோட்டை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேவ கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் பூங்கா அருகில் உண்ணா விரதம் இருந்தனர்.
அப்போது போலீசார் ஒரு மாதத்திற்குள் உண்மை யான குற்ற வாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. துரை தேவகோட்டையில் முகாமிட்டு இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்று குற்றவாளிகளை தேடி வருகிறார். இன்ஸ் பெக்டர் சரவணன், பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தங்களது பகுதிகளில் அதிக அளவு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மீண்டும் கொள்ளை
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திருப்பத்தூர் சாலையில் ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் சென்டர் என அடுத்தடுத்து 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விரைவில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றார்.
- அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் - கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன் கார்த்திக் (வயது 24).
இவர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியா விற்கு வேலைக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நல க்குறைவு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலையறிந்த கார்த்திக்கின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் மகன் வேலைக்கு சென்றான்.
ஆனால் அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறினார்கள். இந்த அதிர்ச்சியை எங்களால் தாங்கவே முடியவில்லை.
எங்கள் மகன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் மலேசியா நாட்டில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டை கிராமத்தில் உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சிவாச்சாரியார் பூஜை செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறு நாள் காலையில் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாலா திரு–விடை–மருதூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஏ.வி.பி.அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி அனிதாராஜ் (வயது 31).
சம்பவத்தன்று அனிதாராஜ் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- அதிர்ச்சியடைந்த குடும்பத்தி–னர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை கும்பகோணத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் சித்தநாதன். இவரது மனைவி வள்ளியம்மை (வயது 78).
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த
குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வள்ளியம்மையை தேடி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை.
- காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகரில் அதிக ஒலி எழுப்பி சென்று வந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் பறிமுதல் செய்து எச்சரித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் போது சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் காற்று ஒழிப்பான்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன் படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலை பேரில் சீர்காழியில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் செய்த போது இருபதுக்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிபான்களை பறிமுதல் செய்து இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலக பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
- வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
- மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மகாலெட்சுமி. இவரது வீட்டின் மேல் சிமெண்ட் சீட்டால் கூரை அமைத்துள்ளார்.
அதன் மேல் வெய்யிலின் தாக்கத்தை குறைப்பதற்காக தென்னை மட்டைகளை பரப்பியுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கூரை மேல் ஏறி அங்கு மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
- இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்