search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திவைப்பு"

    • பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

    • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

    எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
    • சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட்- 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் 31-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    • 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர்.
    • சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை வடலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சனை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது .இதன் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக நெய்வேலி அண்ணா திடலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட போரா ட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அமையும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி தெரிவித்தார். 

    • பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.

    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    • வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
    • மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலதிபரை கடத்தி மிரட்டிய புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் (வயது 52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ வர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெய ஆனந்த் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
    • மக்கள் கருத்துகேட்பு கூட் நாள் 18.5.2023ந் தேதி நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடாங்கி பாளையம் கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம் நிறுவனம் 35.78.28 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள்அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 20.4.2023 அன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உத்தே சிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு இருந்தது.மேற்குறிப்பிட்ட நாளில் தமிழக தலைமை செயலாளரால் சென்னையில் ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்ட நாள் 18.5.2023ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×