என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226964"
- உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
- குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை:
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒருநாள் சிறப்பு நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என 804 பேரின் வீடு தேடிச் சென்று தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
மேலும் "உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் ஏற்கனவே, 459 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,262 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தேடுதலை அறிந்து மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்குகளில் ஆஜராகி உள்ளனர். போலீசாரின் இதுபோன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடரும்" என்றனர்.
- சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகரில் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- போலீசார் கடந்த ஓராண்டில் 280 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 44 இதர குற்றவாளிகள் என மொத்தம் 324 குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகரில் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 1.துப்பாக்கி கார்த்தி, 2.ஆற்காடு சுரேஷ், 3.பினு, 4.கரிமேடு அன்பு, 5.வெள்ளை பிரகாஷ், 6.பால் பிரவீன், 7.ராம்கி, 8.பல்லு சதீஷ், 9.ரஜினி ஆகியோர் பட்டா கத்திகளுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த எழும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி மாறா (எ) மணிமாறன் உள்பட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த ஓராண்டில் 280 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 44 இதர குற்றவாளிகள் என மொத்தம் 324 குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
- வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- கைது செய்யப்பட்ட செல்வம் மீது கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது.
நாகர்கோவில் :
சாமிதோப்பு அருகே கருப்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற னர்.
இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கரும்பாட்டூரை சேர்ந்த செல்வன் (வயது 37), மண்டைக்காட்டைச் சேர்ந்த வேல்முருகன் (36), கன்னங்குளத்தைச் சேர்ந்த சகாயராஜ் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 18 கிராம் நகை மற்றும் வாட்ச் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செல்வம் மீது கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. வேல்முருகன் பெயரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மீது 6 பிடிவாரண்டு உள்ளது. மேலும் 15 வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
- மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
கோவை:
தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள்.
கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடி கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து வந்தனர்.
கைதானவர்களில் கவுதம், ஜோஸ்வா ஆகியோர் நடுவழியில் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 2 பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
திருச்சி வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சகோதரர்களான துரை என்ற துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் திருச்சி தில்லை நகரில் நடந்த கொள்ளை வழக்கில் நீண்ட கால தேடுதலுக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடந்த 20-ந்தேதி அவர்களை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் காலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஜீப்பில் இருவரையும் அழைத்து சென்றனர்.
அப்போது துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது இருவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யா என்பவன் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றான்.
அப்போது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா துணிச்சலாக செயல்பட்டு சூர்யா மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் சூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகதீஸ்வரன் என்பவர் சிக்கிய நிலையில், ரவுடி வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை பாண்டியன் கோட்டை கல்குவாரியில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை கடந்த மாதம் 28-ந்தேதி காலை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ் ஏட்டு சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தின் காலில் சுட்டார். இதனால் அவர் தப்பி ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல தமிழகத்தில் ரவுடிகள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.
- செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
- 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள் அதில் மொத்த ரவுடிகள் 423 பேர்களில் 373 ரவுடிகளின் வீடுகளில் 17 வகையாக கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் 45 ரவுடிகளின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தைப் பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
32 ரவுடிகளை சம்பந்தப்பட்ட உட்கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து அவர்களையும் ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு மொத்தம் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.
- சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
- இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
- பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.
ராஜபாளையம்
ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.
பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.
- இந்த நிலையில் சேலத்தில் வழிபறியில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகரத்தில் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்து பவர்கள், பாலியல் பலாத்காரம், வழிபறி, திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சேலத்தில் வழிபறியில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு-
சேலம் எருமாபாளை யத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் களரம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இவரை வழிமறித்த 3 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500-ஐ பறித்து தப்பினர். இது குறித்து விஜயகுமார், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி களான சூரியின் மகன்கள் ஜீசஸ் (35), இளையராஜா (31), செல்வா(27) ஆகி யோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்