search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227127"

    • கழிவுகள் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய 3000 வீடுகளில் கியூ ஆர் கோடு பொருத்தப்பட்டு உள்ளது
    • நிறுவனங்களிலும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர் கோடுகள்' பொருத்தி அங்கு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சோதனை அடிப்படையில் தனிநபர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுமார் 3000 கியூ ஆர் கோடுகளை மாநகராட்சி விநியோகித்து உள்ளது.இதில் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் வீட்டு எண், பெயர் உள்ளிட்ட விபரங்கள் மாநகராட்சி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே அதன் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை மாநகராட்சிக்கு கியூ ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து அதற்கான தொகையை செலுத்தி விட முடியும்.இதனை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, கழிவுகளை சேகரித்த பின்னர் அந்தந்த கட்டிடங்களில் உள்ள கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய தூய்மை பணியாளர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். மேலும் கழிவுகளை தரம் பிரிப்பதை உறுதி செய்வதற்காக திருச்சி மாநகராட்சி இந்த திட்டத்தை துவக்கியுள்ளது.தமிழக நகராட்சி நிர்வாக துறை முன்னோடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த மாதத்திற்குள் கியூ ஆர் கோடு எண்ணிக்கை 4,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆகஸ்ட் மாதத்தின் இலக்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார். இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் கூறும்போது, கியூ ஆர் குறியீடு பொருத்தப்படுவதை வரவேற்கின்றோம்.ஆனால் இந்த கியூ ஆர் குறியீடு தாள் மிகவும் லேசாக இருக்கின்ற காரணத்தால் மழைக்காலங்களில் குறியீடு அழியும் நிலையில் உள்ளது. ஆகவே மழையில் எளிதில் சேதமடையாமல் இருக்கும் வகையில் அந்த குறியீடு தாள் லேமினேஷன் செய்து பொருத்தப்பட வேண்டும். அனைத்து வீடு மற்றும் நிறுவனங்களிலும் இந்த முறையை விரைவாக அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்று இருந்ததை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4-வது குடிநீர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடு, தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மாநகராட்சிக்கு டெபாசிட் தொகை மற்றும் குழாய் இணைப்பு பணிக்கான தொகையை செலுத்தி இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு விட்டது. புதிய குடிநீர் குழாய் இணைப்பை பெறுவதற்கான கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் இணைப்பு கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெளிவான விளக்கத்தை அறிவிப்பாக வெளியிட வேண்டும். இடைத்தரகர்கள் மூலமாக மக்களிடம் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கோரிக்கை வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் பேசும்போது, புதிய குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கான கட்டண விவரங்கள் குறித்து பரிசீலித்து விரைவில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு கட்டண விவரங்கள் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

    • காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளி மாநில வாடிக்கையாளர்களும் காஞ்சிபுரம் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.

    சாலை ஓரங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடிய அளவில் விளம்பர போர்டுகளும், நடைபாதை கடைகளும், பேனர்களும் வைத்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான செங்கழுநீர் ஓடை வீதி, மேற்கு ராஜ வீதி,கிழக்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு, உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளையும், விளம்பர போர்டுகளையும், அதிரடியாக அகற்றும் பணியை மேற்கொண்டார். இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆக்கிரமிப்பு செய்திருந்த விளம்பர போர்டுகள் மற்றும் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

    • சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது.
    • பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் அளித்த மனுவில், தச்சநல்லூர் மண்டலம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது. தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் வாழும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சமுதாய நலக்கூடத்தை செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், சுடலை ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. முறையாக கட்டப்படாததால் இது ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கலந்து கொண்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
    • மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும்.

    நெல்லை:

    நாட்டில் அரசு துறைகளில் புதுமையான திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தும் நிறுவனங்களை பாராட்டி, 'ஸ்கோச்' அமைப்பு விருது வழங்குகிறது.

    அந்த வகையில், நெல்லை மாநகராட்சி தனது தூய்மை மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளிகேஷன் மூலம் நகர்ப்புற குடிமை அமைப்பில் சிறந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஏற்படுத்தியதற்காக ஸ்கோச் அமைப்பினர் 'தங்க வகை' விருதை பெற்றுள்ளது.

    இந்த விருதை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி டெல்லியில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெறுகிறார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறை, குறித்த நேரத்தில் வார்டுகளுக்கு சென்று குப்பைகள் சேகரிப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மாநகராட்சி சார்பில் 'தூய்மை' என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளி கேஷன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூய்மை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் வருகை, பணி முன்னேற்றத்தை கண்காணிப்பதில் தீர்வு ஏற்பட்டது.

    மேலும் தூய்மை பணியா ளர்களின் வருகைப்பதிவு, நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர்கள் புதுப்பித்தல், பணி முன்னேற்றம், முதன்மை சேகரிப்பு புதுப்பித்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தனிப்பயனாக்கப்பட்டு இந்த ஆப்-பில் சேர்க்கப்பட்டன. அவையும் பின்னர் அதிகாரிகளால் கண்காணிக்கும் வகைக்கு கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இந்த மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வருவதில் மிகுந்த சிரமமாக இருந்த நிலையில் தற்போது சுகாதார அதிகாரிகள் புரிந்துகொண்டு செயல்படவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றப்பட்டது.

    இது வார்டு அளவிலான செயல்பாடுகள் மற்றும் அறிக்கையிடலை பயனுள்ள முறையில் வழங்கியது. மேலும் இதுபோன்ற ஆப்-கள் மூலம் இருப்பிட கண்காணிப்பு பதிவு செய்யப்பட்டதால் கூடுதலாக பல நன்மைகள் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக வேலை அல்லது ஒரு செயல்பாடு உண்மையில் செய்யப்பட்டு ள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கும். வார்டு எல்லைகளை மேப்பிங் மூலமாக ஜியோ-பென்சிங் செய்வதன் மூலம் இந்த தீர்வு செயல்படுத்தப்படுகிறது.

    இந்த ஆப் மூலமாக அதிகாரிகள் மத்தியில் பொறுப்புணர்வு மற்றும் பணியில் கவனம் செலுத்தும் உணர்வு உருவாகி வருகிறது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் 100 சதவீதம் வருகையை பெற்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக அளவு கழிவுகளை சேகரிக்க முடியும் என்பதால் தற்போது நெல்லை மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக திகழ்கிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    மதுரை

    மதுரை விளாங்குடியில் மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பட்டியலணி தலைவர் சிவாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விளாங்குடி பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில தலைவர் சிவாஜி பேசுகையில், விளாங்குடி செம்பருத்தி நகரில் மாநகராட்சி நிர்வாகம் அனுபவம் இல்லாத ஊழியர்களை பாதாள சாக்கடை தோண்டுதல், பைப் பதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்துகிறது.

    அங்கு அரைகுறையாக பணிகள் நடந்து வரு கின்றன. இதனால் பொதுமக்களும் முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்சு கூட வர முடியவில்லை.

    விளாங்குடியில் அனுபவம் இல்லாத வர்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனுபவம் உள்ள நபர்களிடம் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்- பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    • அமைச்சர் மனோ தங்கராஜ்- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தனர்
    • ரூ.12 லட்சம் செலவில் சிறிய பாலம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூர் நகர் 4-வது தெரு, 5-வது தெரு, சரலூர் ரோடு, டி.வி.எஸ். காலனி 1-வது தெரு, 3-வது தெரு ஆகிய பகுதிகளில் ரூ.15 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த பணியை அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், ஒன்றிய செயலாளர் மதியழகன், பகுதி செயலாளர் ஷேக் மீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுபோல் 8-வது வார்டுக்குட்பட்ட கைலாஷ் நகரில் ரூ.5.50 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணியையும், 26-வது வார்டுக்குட்பட்ட பாறைக்காமடை தெருவில் ரூ.12 லட்சம் செலவில் சிறிய பாலம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    • ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 27.5 ஏக்கர் இடம் மாநகராட்சி வசமும், 11.5 ஏக்கர் இடம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு பொழுதுபோக்கு பூங்கா, படகு சவாரி, கண்ணாடி தொங்கு மேம்பாலம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இதற்கிடையே வில்லிவாக்கம் ஏரிப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 3 ஏக்கர் நிலம் போக மீதி உள்ள 8.5 ஏக்கர் இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு உள்ள ஏரியுடன், 8.5 ஏக்கர் நிலத்தையும் சீரமைத்து ஏரியுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் நீர்பரப்பு அதிகரிக்கும்.

    இதற்காக ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வில்லிவாக்கம் ஏரி 219 ஏக்கரில் இருந்தது. தற்போது இது 39 ஏக்கராக சுருங்கிவிட்டது. இதில் 27.5 ஏக்கர் சென்னை மாநகராட்சியிடமும், மீதி உள்ள இடம் சென்னை குடிநீர் வாரியத்திடமும் இருந்தது.

    தற்போது குடிநீர்வாரியத்திடம் உள்ள 3 ஏக்கர் இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மீதி உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி சீரமைத்து ஏரியுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் பரப்பளவு விரி வடைந்து கூடுதல் தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    ஏரியில் பல வகையான மீன்களை விடவும் திட்டமிட்டு உள்ளோம். கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    வில்லிவாக்கம் ஏரியில் உருவாக்கப்பட்டு உள்ள கண்ணாடி தொங்கு பாலம் அதிகாரிகளின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்' என்றார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
    • இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களை பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

    அதாவது கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதா கிருஷ்ணன் தலைமையி லான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரி யான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

    இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

    மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெறப்படு கிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. அதே போல குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்துள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப் படும்.

    தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

    அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளி யிட்டுள்ளார். அதனை திருப்புவதற்காக தேவை யற்ற விவரங்களை தி.மு.க. பெரிதுபடுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 21 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பி.எஸ்.சி. நர்சிங், துணை நர்சிங் படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

    1 மருந்தாளுனர், 3 ஆய்வக நுட்புநர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மருந்தாளுனர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேர்காணலில் தகுதி பெற்று காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்துக்குள் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    ×