search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்"

    • இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சுரங்கவியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகைய்யன் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-ம் தேதி முதல் 1 யூனிட் ரூ.2200-க்கு டிராக்டரில் மணல் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்ற போது 1 யூனிட்டிற்கு ரூ.3500 வழங்க வேண்டும் என சுரங்கவியல் துறை அதிகாரிகள் மணல் வழங்க மறுத்தனர்.

    இதனை தொடர்ந்து, கிராம மக்கள் கோவிந்தநா ட்டுச்சேரி, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை 20-க்கும் மேற்பட்ட டிராக்டரை கொண்டு மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் உதவி இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மணல் கடத்தல் தொடர்வதால் தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    சங்கரன் கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கண்மாயில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் பெரும்புத்தூரைச் சேர்ந்த காளிதாசன் (வயது 31). டிராக்டர் டிரைவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான பெரும்புத்தூரை சேர்ந்த காளிராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

    கரிவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிட்சேபநதி என்ற ஆறு உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ள இந்த ஆற்றில் அடிக்கடி மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உளவுத்துறை போலீசார் உயரதிகாரிகளுக்கு உரிய முறையில் தகவல் அளிக்காததால் சமூக ஆர்வலர்கள் நேரடியாக தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு கரிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் மீது புகார்கள் வந்ததின் அடிப்படையில் தென்மண்டல் ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

    தற்போதும் மணல் கடத்தல் தொடர்வதால் தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    • அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த குன்னம் மற்றும் பாலுரான் படுகையில் அரசு மணல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவு செய்த லாரிகளுக்கு சீர்காழி புறவழிச்சாலை துறையூர் செல்லும் பகுதியில் டோக்கன் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் பதிவு மூலம் குறைந்த லாரிகளுக்கு மணல் அல்ல டோக்கன் வழங்கப்படுவதாகவும் மீதமுள்ள லாரிகளுக்கு ஆப்லைன் முறையில் மணல் அள்ள அனுமதிக்க படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில் ஆப் லைன் முறையில் மணல் அள்ள வெளி மாவட்ட லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்தனர்.

    இதனால் சீர்காழி, மயிலாடுதுறை, வல்லம்ப–டுகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கு அதிகாரி–களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது வெளி மாவட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் லாரி ஓட்டுனர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன் பிறகு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசு அறிவித்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும் என சுமார் 50 -க்கும் மேற்பட்ட லாரிகளை டோக்கன் வழங்கும் இடத்திற்கு முன்பாக குறுக்கே நிறுத்தி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் உள்ளே டோக்கன் பெற்ற 70-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட லாரிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன. இதனால் ஆத்திரமடைந்து கிராம மக்களும் அப்பகுதியில் லாரி ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இந்த இரு தரப்பு திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதனை அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீர்காழி வருவாய்த் துறையினரும் உரிமையாளர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

    • இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் - இருக்கை சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த இடத்தில் மண் குவாரி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மண் எடுக்கப்படும் இடத்திற்கு வந்த குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலம் விளைநிலங்கள் அருகில் உள்ளதால் அந்தப் பகுதியில் மண் எடுக்க கூடாது என்று ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சு வார்த்தையில் இது சம்பந்தமாககீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.அதுவரை அந்த பகுதியில் மண் எடுக்க கூடாது என்று போலீசார் கூறினர் இதையடுத்து கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திட்டக்குடி அருகே போலீசாரை கண்டதும் மணல் ெகாள்ளையர்கள் தப்பி ஓடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி தினந்தோறும் நள்ளிரவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக திட்டக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 2 டிப்பர் லாரிகள், பொக்ந்திலைன் எந்தி ரம், 1 டிராக்டர் டிப்பர் மற்றும் இனோவா கார் உட்பட 2 கார்கள் பறிமுதல் செய்து திட்டக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தளவாய் புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது புத்தூர் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவது தெரிய வ ந்தது.

    இதனை தொடர்ந்து மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணல் அள்ளிய ஆறுமுகம், பிரவின்காந் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரான்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி இயங்கி வருகிறது.

    இங்கு வரும் லாரிகள் மூலம் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவு மண் ஏற்றி செல்ல படுவதாகவும், கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாகவும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை யில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதானகூட்டம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தூரில் நேற்று நடைபெற விருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் செந்தில் முன்னிலையில் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    ×