search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227959"

    • சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
    • இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

    இந்த முகாமை வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்தினர். அதில் புது ரேசன் கார்டு கேட்டு 7 பேர், முகவரி மாற்றம்-24 பேர், கார்டு வகை மாற்றம் -47 பேர், பிறந்த தேதி மாற்றம்-11 பேர், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் 64 பேர் உள்பட 331 பேரின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் 4 மனுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர், சங்கரலிங்காபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் வருவாய்த்துறை மூலம் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் 2 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 4 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை 2 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.24,000 மதிப்பிலும், பட்டா மாறுதல் உத்தரவு 4 பயனாளிகளுக்கும், உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் இலவச தையல் எந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலும், இலவச தேய்ப்பு பெட்டி 5 பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 355 மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு காய்கறி பரப்பு விரிவாக்கம் மற்றும் கொய்யா, மா, பாகல் விதைகளும், வேளாண்மைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மின் விசை தெளிப்பான், தென்னங்கன்று, குதிரைவாலி விதை ஆகியவைகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு கன்று பெட்டகமும், 3 பயனாளிகளுக்கு தீவன விதைகளும் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு 89 ஆயிரத்து 223 மதிப்பலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டது. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் அரசின் நலத்திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட செயல்விளக்க கண்காட்சியை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டார்.

    இந்த முகாமில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், வட்டாட்சியர் செந்தில்வேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வூதியம்: 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஒய்வூதிய இயக்கு நரக இணை இயக்குநர் தி கமலநாதன் முன்னிலையில், கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 78 மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய பதி லும், தீர்வும் காணப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஒய்வூதிய இயக்குநரக துணை இயக்குநர் மதிவாணன், மாவட்டக் கருவூல அலுவலர் சண்முகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜலட்சுமி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
    • தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளி களுக்கா ன சிறப்பு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர்கள் சரவணன், ராஜ்குமார், சித்ராதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும்வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கரன்வரவேற்று பேசினார்.

    முகாமில் சிறப்பு விருந்தினர்களாக தனி வட்டாட்சியர் திருநாசுஜாதா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மற்றும் தஞ்சை மாற்று திறனாளிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத் திறனாளிகளிடம் புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க ப்பட்டது. முகாமில் கபிஸ்தலம் அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் 258 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் செந்தனேந்தல் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சந்தனமாரி வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை 6 திருநங்கைகளுக்கும், சமூகநல வாரியத்தின் மூலம் 3 திருநங்கைகளுக்கும், அடையாள அட்டைகளையும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (21-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மதுரை பெருநகர் மின்பகிர்மான செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இதில் தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம் சாலை, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், மாரியம்மன் தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்தினார்.
    • நிறுத்தப்பட்டு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடந்தது.

    அப்போது வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

    அதில் நூத்தப்பூர் வடக்கு கிராமத்தில் விவசாய நிலம் மற்றும் 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களது விவசாய நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டு, மூன்று தலைமுறைகளுக்கு மேலாக அனுபவம் செய்து வருகின்றோம். எங்களது வயல் காடு அருகிலேயே நாங்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். பரம்பரை பரம்பரையாக அங்குள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றோம். இந்த பாதை வனத்துறைக்கு சொந்தமான பாதையாகும்.

    இந்நிலையில் எங்களது கிராமத்தை சேர்ந்த 2 பேர் வீடு கட்டிக்கொண்டு பொதுபாதையை மறித்து பொதுமக்களின் பயன்பாட்டை தடுத்து வருகின்றனர். இதனால் நாங்களும் பாதை வசதியின்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் எங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வழியின்றி பள்ளிக்கு செல்லாமல் கல்வியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்து வருவோர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நிறுத்தப்பட்டு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட 25க்கு மேற்பட்ட முதியோர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, அம்மனுவினை தொடர்புடைய அதிகாரிகளிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    • நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார்.
    • 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக முகமது ஷாநவாஸ் பொறுப்–பேற்றதில் இருந்து கடந்த மாதம் வரை ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கப்பட்ட 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் தாசில்தார், தனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானா

    மதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது .இதில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, இலவச வேளாண் பொருட்கள் மற்றும் அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி. முருகேசன், ஒன்றியதலைவர்லதா, ஒன்றியகவுன்சிலர்கள். ராதா, அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தாசில்தார் தமிழரசன் மற்றும் அனைத்து துறைஅரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    ×