search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • புத்தகப்பிரியர்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது
    • புத்தக திருவிழாவில் நடைபெற்ற புத்தக அரங்கிற்கு கலெக்டர் தலைமை வகித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நகராட்சி திடலில் புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக பிரியர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். மேலும் புத்தக திருவிழாவில் நேற்று இரவு நடந்த சிந்தனை அரங்கிற்கு கலெக்டர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது கலந்து கொண்டு பேசினார். மேலும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிற தலைப்பில் கவிதை பித்தனும், பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு என்கிற தலைப்பில் மல்லூரியும், என் குறிப்பு என்கிற தலைப்பில் தாமோதரனும் கருத்துரையாடினர்.

    • அரியலூரில் மாவட்ட மதிமுக நிர்வாகி தேர்தலுக்கு விண்ணப்பம் விநியோகம் நடைபெற்றது
    • எம்எல்ஏ சின்னப்பா விநியோகிகத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் அவைத் தலைவர், மாவட்டச் செயலர், துணைச் செயலர், பொருளாளர், ஒன்றியச் செயலர், துணைச் செயலர் உள்பட அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று மதிமுக தலைமை அலுவலகம் அறிவித்தது. அதன்படி, இதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா தலைமை வகித்து, ஜனநாயக முறையில் நடைபெறும் இந்த தேர்தலில், மாவட்ட செயலர் உள்பட அனைத்து பதவிக்கும் போட்டியிட கட்சியினர் அனைவருக்கும் தகுதியுண்டு. இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை என்றார். தொடர்ந்து அக்கட்சியின் மாநில மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், போட்டியிடும் நிர்வாகிகளுக்கு வேட்புமனு படிவத்தை வழங்கினார். போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக தலா ரூ.25 செலுத்தி படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல்
    • உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, செறிவூ ட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அரிசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் இரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அமிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை மகிமை நாயகி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைபாரி எடுத்து வந்தனர்
    • பக்தர்கள் அலகு குத்தி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன்வீதியுலா நடைபெற்றது.  தினமும் மண்டகப்படியும் நடைபெறு கிறது. பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம்ஏந்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும், கரும்பு தொட்டில் கட்டி அதில்குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல்வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில்மலர் அலங்காரத்தில்பல்வேறு வீதி  வழியாக பவனி வந்தார்.கோவிலில்மூலவர் மகிமைநாயகி முத்துமாரிஅம்மன்  வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    • விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடை–பெற்றது. இதைத்தொ–டர்ந்து கடந்த 26-ந்தேதி பங்குனி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தின–மும் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்கு–டம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேர்ச்சை, தொட்டில் கட்டு–தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த தேரை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரி–யம்மன் தேரில் எழுந்தரு–ளினார். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாண–வேடிக்கையுடன் திர–ளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந் தாடி வந்தது.ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங் காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி–பட்டனர். மாலை 7 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் முத்துமாரியம் மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கு வந்த பக் தர்களுக்கு முன்னாள் அமைச் சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினர் சார்பில் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தும, அன்னதானமும் வழங்கப்பட்டது. திரு–விழாவை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய் திருந்தனர்.

    • தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது
    • முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை ஆகிய வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 8.30 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவர் முருகருக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் அலங்கார பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணியளவில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை தேர் மீண்டும் நிலைக்கு வருகிறது. வருகிற 8-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகி்ன்றனர்.

    • ஓம்சக்தி கோஷத்துடன் தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
    • 10 அடி வரை அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் ஊர்வலம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே திருவரங்குளம் பாரதியார் நகரில் உள்ள புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயில் 21ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, பறவைக் காவடி, பால்குடம் எடுத்து, தீ மிதித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.இந்நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவரங்குளம் குளக்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பறவைக் காவடி, பால்குடம் மற்றும் 3 அடியில் இருந்து 10 அடி வரை அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் ஆடிப்பாடி வந்த ஊர்வலமானது கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

    • அரியலூரில் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் படைப்பாளிகள் விழா
    • பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

    அரியலூர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு, பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சிவபாண்டியன் தலைமை தாங்கினார்.விழாவில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கலந்துகொண்டு பேசியதாவது:-மனிதனுக்கு மனிதன் கூறிய ஒரே நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். திருக்குறள் பெரும்பாலான இந்திய மொழிகளிலும் 170-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் நூலுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறள் நூலானது உலக மக்களுக்காக இயற்றப்பட்டது.

    அதனால் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் படித்து அதனுடைய கருத்தை தெரிந்துக்கொண்டு வாழ்வை சிறப்பாக பயணியுங்கள். மேலும் தமிழர்கள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் தமிழ் வழியில் குடும்ப நிகழ்வுகளை நடத்த வேண்டும். பட்டி, தொட்டி எல்லாம் திருக்குறளின் புகழை தமிழர்கள் பரப்ப வேண்டும் என்றார்.சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பேசுகையில், திருக்குறளை ஒவ்வொரு குடும்பத்தினரும் பின்பற்றி நடக்க வேண்டும் . திருக்குறளில் சொல்லப்படாத அறநெறிகள் இல்லை. திருக்குறளை ஒருவன் தெளிவாக கற்றால் வாழ்நாளில் எத்தகைய துன்பமும் நேராது. பள்ளி குழந்தைகள் திருக்குறளை விரும்பி கற்று அதன் பொருள் உணர்ந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.விழாவில் மாநில பொதுச் செயலர் ஆதிலிங்கம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பிச்சி ஆதிலிங்கம், மண்டல தலைவர்கள் சின்னதுரை, இளங்கோ, சந்திரன், செவ்வேல், சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், இளவரசன், ஷோபனா மற்றும் காவல் ஆய்வாளர்கள் அனிதாமேரி, செல்வகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும், பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்டச் செயலர் நாகமுத்து நன்றி கூறினார்.

    • மீன்களை உற்சாகமாக அள்ளி சென்ற கிராமமக்கள்
    • அன்னவாசல் அருகே புதூர் பெரியகுளத்தில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் பெரிய–குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண் டுதல். இந்தநிலையில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இந்த குளம் நிரம்பியது.மேலும் அந்த குளத்தில் மீன்களும் அதிக அளவில் இருந்தன. இதனையடுத்து குளத்தில் தண்ணீர் வற்றியதால், குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து திருவிழா–வாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, சேலை என அவற்றை குளத்தில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடிப்பதும், தங்களுக்கு கிடைக்கும் மீன்களை எடுத்து சென்று சமைத்து சாப்பிடுவதும் கிராம மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி ஆகும்.இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் ஜாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச் சியாகும். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட் டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

    • ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.
    • முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்காலடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பி ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், கொக்காலடி ஊராட்சி தலைவர் வசந்தன் முன்னிலையில் நடந்தது.

    விழாவுக்கு ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜ சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்லத்தாய்க்கு நினைவு பரிசை தலைமை ஆசிரியர் அருள் அரசு வழங்கினார். ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் சிறந்த சேவையாற்றி வரும் துரை ராயப்பன் மற்றும் ராஜ சரவணன் ஆகியோருக்கு கொக்காலாடி ஊராட்சி மன்றம் சார்பில் டெல்டா நாயகன் என்று விருது வழங்கப்பட்டது.

    விழாவில் திரைப்பட புகழ் அகிலன் மேஜிக் செய்தார்.

    முடிவில் ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.

    • பங்குனி தேர்த்திருவிழாவை யொட்டி வீதி உலா
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருச்சி,

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.நம்பெருமாள் கடந்த 29-ந்தேதி இரவு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதையொட்டி காலை 8 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து காலை 9.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.5-ம் நாளான இன்று நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.2-ந் தேதி நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.விழாவின் 9ம் நாளான 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம்(கோரதம்) வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.விழாவிற்கான கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×