search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • இயற்கை குடில் சார்பில் ஆரோக்கிய உணவு

    திருச்சி,

    இயற்கை வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக 'இயற்கை குடில்' நிறுவனத்தின் துவக்க விழா திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.அமைச்சர் கே.என். நேரு விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இயற்கை வேளாண்மையில் விளைந்த பச்சை காய்கறிகள் பழங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இயற்கை குடில் நிறுவனம் மூலம் இருக்கும் இடத்தில் நீங்கள் ஆரோக்கிய உணவுகளை பெற முடியும்' என்றார். முன்னதாக நுகர்வோரின் இருப்பிடத்திற்க்கே சென்று பொருட்களை வழங்கும் நடமாடும் சிறுதானிய உணவு வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் சுகுமார், தஞ்சை வேளாண் செம்மல் கோ.சித்தர், என் ஆர் அகாடமி மேலாண் இயக்குனர் விஜயாலயன், வேளாண் வணிக துறை துணை இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை இயற்கை குடில் இயக்குனர்கள் முன்னின்று சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் கலைமகள் ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

    • டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் வழங்கப்பட்டது
    • சாக்சீடு, புனித அன்னாள் பள்ளி இணைந்து வழங்கியது

    திருச்சி,

    திருச்சி, சாக்ஷீடு மற்றும் திருச்சி அன்னாள் மேல்நிலைப்பள்ளி இணைந்து ரூ.50,000 மதிப் புள்ள புத்தகங்களை சிறைவாசிகளின் நூலகத்திற்கு வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் நடைபெற்ற இந்த விழாவில் திருச்சி சரக சிறைகள் மற் றும் சீர்திருத்தப்பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதியிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பங்குத்தந்தை அன்புராஜ், சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறை மேலாளர் திருமுருகன், சின்னராணி, தலைைம ஆசிரியை மரிய ரஞ்சிதலீலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களுக்கு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரபிரஷாத், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர் ச்சி புவனேஸ்வரி மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

    • மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது
    • கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்தார்கள். நாடு வளர்ந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியின் 130-வது ஆண்டு விழா இன்று தொடங்கியது. கல்லூரி செயலாளர் பைஜூ நிசித்பால் தலைமை தாங்கினார்.

    முதல்வர் எர்வர்ட் அறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஐரின் ஷீலா வரவேற்று பேசினார். தெலுங்கானா, பாண்டிச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலின் அடையாளமாக ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி விளங்கி வருகிறது. நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது மாணவர்கள் அளித்த வரவேற்பை பார்க்கும்போது மாணவர்கள் எவ்வளவு எழுச்சியுடன் உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இளம் வயது ஆளுநராக என்னை தேர்வு செய்தார்கள்.

    தெலுங்கானாவில் பதவியேற்ற போது இவர் எப்படி அந்த மாநிலத்தை சமாளிக்க போகிறார் என்று கூறினார்கள். புதிதாக உருவான மாநிலத்தை  எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும்.குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பேச்சு திறமை உள்ளவர்கள்.

    நான் ஒரு மகப்பேறு டாக்டர். பிறந்த குழந்தையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதே போல தெலுங்கானா மாநிலத்தை சிறப்பாக கையாண்டு வருகிறேன்.

    இதைத் தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக எனக்கு பதவி வழங்கினார்கள். மகப்பேரின் போது இரட்டை குழந்தை பிறந்தால் எப்படி கையாள வேண்டுமோ அதே போல் தான் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை இரண்டு குழந்தைகளை வளர்ப்பது போல் வளர்த்து வருகிறேன்.

    ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு கல்வி அளித்த இந்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியை பாராட்டுகிறேன். இந்த கல்லூரி இந்தியாவில் 56-வது இடத்தை பிடித்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் மாணவர்கள் சாதிக்க முடியாது.

    மாணவர்களை மாணிக்கங்களாக உருவாக்குவதும் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. மாணவர்கள் நாட்டின் தூண்களாக உள்ளார்கள். மாணவர்கள் தனது மொழியை கற்றுக் கொள்வதுடன் இன்னொரு மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும். கடின உழைப்பே வெற்றிக்கு காரணமாகும். உழைப்பதற்கு குறுக்கு வழி கிடையாது. உழைத்தால் மட்டுமே சாதிக்க முடியும். மாணவர்களை சமாளித்து சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியரின் கையில் தான் உள்ளது.

    ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வது மட்டு மின்றி பெற்றோரின் தியாகங்க ளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மாணவர்கள் தான் நாட்டின் சொத்து. கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்தார்கள். நாடு வளர்ந்து வருகிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தான் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை தொலைத்து விடக்கூடாது. சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவர்கள் அனைவரும் படித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் என்றாலே சவாலை சந்தித்தாக வேண்டும். அரசியல் தலைவராக இருந்தால் அதிக சவால்களை சந்திக்க வேண்டும். என்னைப் பற்றி என்னென்ன கருத்துக்களை கூறினார்கள். நான் எம்.பி.பி.எஸ். டாக்டர் படித்தவர். கவிதை எழுதுவேன். நிர்வாக திறமை என்னிடம் உள்ளது. அதை எல்லாம் கூறாமல் நான் கருப்பாக இருக்கிறேன். குட்டையாக இருக்கிறேன் என்றெல்லாம் கூறினார்கள். அதை மனதில் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு இருந்ததன் காரணமாகத்தான் சாதிக்க முடிகிறது. இந்தியா பல துறைகளில் முன்னேறி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை உடன் ஒப்பிடும் போது இந்தியா பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜி 20 மாநாட்டை நாம் நடத்துவது நமது இந்தியாவிற்கு பெருமை ஆகும். மாணவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் பெஞ்ச் மாணவர்களிடம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கவர்னர் தமிழிசை சௌந்தர்ரா ஜனுக்குகல்லாரி செயலாளர் பைஜூ நசித்பால் நினைவு பரிசு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் அலுவலக சங்க செயலாளர் ஹெனிராஜா நன்றி கூறினார். விழாவில் கலந்து கொள்ள வந்த கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை கலெக்டர் ஸ்ரீதர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் ஆகியோரும் வரவேற்றனர்

    • நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் நெகிழ்ச்சி
    • பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள த ர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இந்த கோவில் 2-வது குருஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.இதை தொடர்ந்து கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சரியார்கள் பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, ஆலங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சிவாச்சாரியாகர்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இதே போல் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் யாக பூஜை நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலின் ராஜகோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.மேலும் கும்பாபிஷேகத்திற்காக கோயிலுக்கு வரும் பக் தர்களுக்கு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கியது மத ஒற்றுமை க்கு எடுத்துக் காட்டாக இருந்தது மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி - முருகானந்தம் செயல் அலுவ லர் பாலசுப்ரமணியன்.அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சுற்று வட்டார பெருமக் கள் கிராம ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.300க் கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர் 'ஆலங்குடி தீயணை ப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவி னர் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன.

    • 62 கிலோ எடையில் கிராம மக்களால் செய்யப்பட்டுள்ளது
    • வெற்றி ஆண்டவர் அய்யானார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர்வலம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயில் பங்குனி திருவிழா நேற்று காப்பு கட் டுதல் தொடங்கியது. அந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று நிறைவு பெறுவது வழக்கம். மழை வேண்டியும் அக்கி ராமத்தில் வேளாண்மை செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலில் இருந்து 62 கிலோ எடையில் வெள்ளி குதிரை வாகனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளி குதிரை வாகனத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமா க எடுத்து சென்று கோயிலூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அய்யனார் சி லையை அந்த குதிரை வாகனத்தில் அலங்கரித்து அமர வைத்து அத னை மீண்டும் கிராம மக்கள் குப்பகுடி கொண்டுவந்தனர்.வெள்ளி குதிரையில் வீட்டில் இருந்த ஐம்பொன்னாலான அலங்கரி க்கப்பட்ட அய்யனார் சிலைக்கு மக்கள் வழிநெடுகிலும் சிறப்பு பூ ஜைகள் செய்து வழிபட்டனர்..மேலும் கோயிலில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த தங்க ஆப ரண பெட்டிகளையும் பலத்த பாதுகாப்போடு எடுத்து வந்த கிராம மக்கள் அதனை ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் அய்யனா ருக்கு அலங்கரித்து சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் ஆராதனை விழாக்களை மேற்கொள்ள உள்ளனர். இன்று தொடங்கிய விழா இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறவு ள்ள நிலையில் நாள் தோறும் சுவாமி வீதியுலா காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுக ளை 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திருவாடுதுறை ஆதீனம் பங்கேற்பு

    ஆவுடையார்கோவில்,

    கருங்காடு கிராமத்தில்உள்ள பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார், ஸ்ரீ கருங்காளியம்மன், ஸ்ரீ காத்தான் சாம்பான் ஆகிய சாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் புலிக்குட்டி அய்யனார் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாதசுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் மகா சாந்திஹோமம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. . திராவிட வேதமும், சதுர்வேத மந்திரங்களும் முழங்க ராஜகோபுரம், மூலவர் தாயார் சன்னதி கோபுர கலசங்களில் பட்டர்கள் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்ட பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பக்தர்களின் "அரோகரா அரோகரா" கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டிகுளம் நாட்டாரங்கலம் கூத்தனூர், ஆலத்தூர்கேட், பாடாலூர் சிறுவயலூர்,நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி இரூர், சீதேவிமங்கலம், சத்திரமனை, மாவிலிங்கை உள்ளி பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.நாள்தோறும் இரவு சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா நடைபெறும்.வருகிற 02 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவுடன் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி என தேரோட்டம் வருகிற 04ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன்,அறங்காவலர் குழு, கோயில் ஊழியர்கள்,உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

    • பொன்னமராவதி அமல அன்னை பள்ளியில் நடைபெற்றது
    • 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அருள்சகோதரி லீமா ரோஸ் தலைமைவகித்தார். பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றார். விழாவில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழிலதிபர் ஏ.பி.மணிகண்டன், மருத்துவர் ஆ.அழகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் தொட்டியம்பட்டி கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் செல்வி முருகேசன், கொப்பனாபட்டி மேனகா மகேஸ்வரன், வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். ஒலியமங்கலம் பங்குத்தந்தை ஏஎம்.லூர்துசாமி, புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலர் யு.சிரில் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர்கள் செ.பாலமுரளி, ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை ரிபினா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புத்தக அறிமுக விழா நடைபெற்றது
    • சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கவிஞர் நந்தலாலா பேச்சு

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய "ஊறும் வரலாறு" புத்தகத்தின் அறிமுக விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் நந்தலாலா பேசியதாவது,ஒருவரை அவர் வாழ்நாளுக்குள் பாராட்டி விடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம். சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தின் இருக்கிறோம்.பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத்தோடு துணை நிற்பதை காண்கிறேன். இந்த தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன் எழுதவில்லை என கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழுதத்தான் நந்தலாலா வேண்டும் என்றார்.விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கபார்க்கான் வரவேற்க, மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார். சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.

    • அரசு திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பு
    • அரசின் திட்டங்களை அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஆயுதப் படை திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் அவர் கூறியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நலத்திட்டங்கள் பெறும் பெண்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசு அலுவலர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. முத்துராஜா வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ் செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சியாமளா வட்டாட்சியர் விஜயலெட்சு, சமூக நலத்துறை தொழில் கூட்டுறவு அலுவலர் மனோகரன், விராலிமலை சந்திரசேகரன், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×