search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இந்நிலையில், மகேஷுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இளம்பெண் தொடர்பை துண்டித்துக் கொண்டார். ஆனால், அதனை ஒத்துக்கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

    இதற்கிடையே, இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் மகேஷ் கடும் கோபம் அடைந்தார். காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை, அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.

    மனைவி காதலனுடன் இருந்த வீடியோவை பார்த்த வாலிபர் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்வளவு கொடூர சம்பவங்கள் நடந்த பின்னரும் மகேஷ் இளம்பெண்ணை விடவில்லை. தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என மீண்டும் தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறினர். அவரது குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தனர்.

    அவர் வந்தவுடன் இளம் பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் நடுரோட்டிலேயே மகேசை வெட்டி சாய்த்தனர்.இதில் மகேஷ் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். 

    • கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார்.
    • பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த அவரது மகள்களையும் அடித்து உதைத்தார்.

    நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

    கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதற்குப் பிறகும் பாவிடு மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் மீண்டும் நிர்மலா போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவன் மீது புகார் அளித்தார்.

    போலீசார் பாவிடுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவிடு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அவருடைய உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் சாமாதானம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பாவிடு, நிர்மலா இருவரும் ஒரு அறையிலும், அவருடைய மகள்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலையில் பாவிடு கண் விழித்தார். ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியின் மீது அவருக்கு தீராத கோபம் ஏற்பட்டது.

    வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    அந்தத் தலையை 3 துண்டுகளாக வெட்டி வீசினார். மேலும் நிர்மலாவின் 2 கைகளை துண்டு துண்டாக வெட்டி அறையில் இருபுறமும் தூக்கி எறிந்தார்.

    சத்தம் கேட்டு கண்டுவிழித்த அவரது மகள்கள் ஓடி வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தாய்க்கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் பாவிடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலாவின் உடலை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாவிடுவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய பாவிடு ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சதக் அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் சதக் அப்துல்லா (வயது29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட அவர், பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார்.

    தற்போது குற்ற சம்பவங் களில் ஈடுபடாமல் இருந்து வந்த சதக் அப்துல்லா, வெளியூருக்கு செல்பவர்களுக்கு தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று நள்ளிரவு சிலருடன் மது குடிக்க சென்றுள்ளார்.

    சதக் அப்துல்லா உள்ளிட்ட 6 பேரும் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கழிவறைக்கு பின் பகுதியில் இருக்கும் காலியிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சதக்அப்துல்லாவுக்கும், அவருடன் மது குடித்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சதக் அப்துல்லாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி சதக் அப்துல்லாவின் தலையில் போட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இதையடுத்து அவரை கொன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் கொலை நடந்ததால், சதக் அப்துல்லா கொல்லப் பட்டதை யாரும் பார்க்க வில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்த கழிவறைக்கு ஒருவர் வந்திருக்கிறார்.

    அப்போது அங்கு ரத்த வாடை வீசியதால் சந்தேகமடைந்த அவர், கழிவறைக்கு பின் பகுதியில் சென்று பார்த்த போது சதக் அப்துல்லா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்த சதக் அப்துல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சதக் அப்துல்லாவை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகளை கண்டறிவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சதக் அப்துல்லாவுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்று அவரது குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சதக் அப்துல்லா நேற்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அவரை பழக்கமான நபர்களே அழைத்து சென்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சதக் அப்துல்லாவின் நெருங்கி பழகியவர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு காமிராவில் நள்ளிரவு நேரத்தில் 5 பேர் ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் தான் சதக் அப்துல்லாவை கொன்ற கொலையாளிகளாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையாளிகள் 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகரின் பிரதான பஸ் நிலையமான பெரியார் பஸ் நிலையத்தின் அருகில் நள்ளிரவில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார்.
    • தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தர் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 22)இவர் அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார்.

    பூஜா வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் அதே பகுதியை சேர்ந்த தீபக் ரத்தோர் என்ற வாலிபர் பூஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனை பூஜா ஏற்கவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். பொறுமை இழந்த பூஜா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

    இதனால் தீபக் ரத்தோர் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்நிலையில் நேற்று பூஜா வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த தீபக் என் கோரிக்கையை ஏற்கிறாயா? இல்லையா? என சண்டை போட்டார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் நடுரோட்டில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீபக்கை தேடி வந்தனர். அவர் தர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கி தீபக் துப்பாக்கியால் சுட்டான். சுதாரித்துக்கொண்ட போலீசார் திருப்பி சுட்டனர். இதில் தீபக் காலில் குண்டு பாய்ந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த 2 ஆண்டுகளாக என் கொலை வெறிக்கு பெண்கள் மாட்டவில்லை.
    • என் கையால் சாகும் விதி உள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

    கொலையாளி சக்திவேல், 2 கொலைகளை கத்தி இன்றி, ரத்தம் இன்றி செய்து மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் போலீசில் கொடுத்தவாக்குமூலம் வருமாறு:-

    எனது தந்தை தபால் அதிகாரியாக வேலை பார்த்தார். பெற்றோருக்கு நான் ஒரே மகன். உடன்பிறந்த அக்கா, தங்கை உள்ளனர். எனது பெற்றோர் என்னை விட, எனது சகோதரிகளிடம்தான் அதிக பாசம் காட்டினார்கள். என்னை ஒழுங்காக படிக்க கூட வைக்கவில்லை. நான் தபால் மூலம்தான் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.வரை படித்தேன். ஆனால் அதில் பாஸ் ஆகவில்லை.

    நான் வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது மனைவி பெயர் சந்தியா. பிளஸ்-2 வரை படித்தவர். நான் வீடுகளில் உள் அலங்கார வேலைக்கு போவேன். அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்களைக்கூட நல்லமுறையாக படிக்க வைக்க வருமானம் இல்லை.

    இதனால் எனது மனைவி வேலைக்கு போய் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதித்தாள். அந்த வருமானம் சாப்பாட்டு செலவுக்குதான் வரும். வீட்டு வாடகை மாதம் ரூ.7 ஆயிரம் கொடுக்க வேண்டும். அது கொடுக்க முடியாமல் வீட்டு உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் பாக்கி. மாமியார்மற்றும் மனைவியின் தங்கை என்று எல்லோரிடமும் கடன். மனைவியின் நகை அடமானம்.

    இந்த நிலையில் எனது பெற்றோரும் எனக்கு துரோகம் செய்தனர். எங்கள் பூர்வீக வீட்டை பல லட்சங்களுக்கு எனது தந்தை விற்றார். அந்த பணம் முழுவதையும், எனது சகோதரிகளுக்கு கொடுத்து விட்டார். எனக்கு அதில் உள்ள பங்கை தர மறுத்து விட்டார். அந்த பணம் கிடைத்திருந்தால், நான் இதுபோல் கொலையாளி ஆகி இருக்க மாட்டேன்.

    கடன் மேல் கடன். குடும்பம் நடத்த முடியவில்லை. இதனால் கொலை செய்து, கொள்ளையடித்தாவது, பணம் சம்பாதித்து, கடனை அடைத்து விட்டு, நிம்மதியாக வாழ முடிவு செய்தேன். போலீசில் மாட்டாமல் எப்படி, இந்த கொலை, கொள்ளையில் ஈடுபடுவது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கள் வீட்டு அருகில் தனியாக வாழ்ந்த சீதாலட்சுமி என் கண்ணுக்கு நேர் எதிரில் வந்தார்.

    அவரை வலி இல்லாமல் கொலை செய்து, கொள்ளையடிக்க திட்டமிட்டேன். பகலில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது, திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அவரை தீர்த்துக்கட்டினேன். வீட்டில் பெரிய அளவில் நகை கிடைக்கவில்லை. 19 பவுன் நகைகள் மட்டும் அங்கு கிடைத்தது. அதை சவுகார்பேட்டையில் விற்றேன். அது போதுமானதாக இல்லை. கடனை அடைக்க முடியவில்லை.

    இந்த வழக்கில் போலீசில் மாட்டவில்லை. அப்போது நான் வசித்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை. அடுத்து தனியாக வசிக்கும் பெண்ணை பல இடங்களில் தேடினேன். என் கடனை அடைக்க உயிரை விடப்போகும், புண்ணியவதி எங்கே இருக்கிறாள், என்று தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருந்தேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக என் கொலை வெறிக்கு பெண்கள் மாட்டவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 17-ந்தேதி அன்று, ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 10-வது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்யும் வாய்ப்பு வந்தது. அங்கு போனபோது, 10-வது தெருவுக்கு பதில், 12-வது தெருவுக்கு போய் விட்டேன்.

    அங்குதான் சிவகாமிசுந்தரியை பார்த்தேன். அவரிடம் முதலில் முகவரி விசாரித்தேன். அவர் முகவரியை சொன்னார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டேன். அவர், தான் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மகனும், மருமகளும் வேலைக்கு போய் விட்டார்கள் என்றும், மாலை 6 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார்கள், என்றும், இதனால் தன்னால் முதல் மாடியில் இருந்து தண்ணீர் கொண்டு தர இயலாது என்றும் தனது வீட்டு அத்தனை சரித்திரத்தையும் சொல்லி விட்டார்.

    சிவகாமிசுந்தரிதான் எனது கடனை அடைக்க பலியாகப்போகும் அடுத்த பெண்மணி என்பதை முடிவு செய்தேன். 4 நாட்கள் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று நோட்டமிட்டேன். வேலைக்கார பெண் ராஜேஸ்வரி பகல் 11 மணிக்கு வருவார். அவர் வரும்போது மட்டும், சிவகாமிசுந்தரி வீட்டு கதவை திறப்பார். வேலைக்கார பெண் போனபிறகுதான் மீண்டும் கதவை பூட்டுவார்.

    அவ்வாறு கதவு திறந்து கிடக்கும்போது, பக்கவாட்டில் உள்ள படிக்கட்டு வழியாக நான் மாடிக்கு போய் ஒளிந்து கொண்டேன். வேலைக்கார பெண் 1 மணி அளவில் போய் விட்டார். உடனே கதவை பூட்டி விட்டு, சிவகாமிசுந்தரி வீட்டுக்குள் வந்தார்.

    என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீ ஏன் வீட்டுக்குள் இருக்கிறாய், என்று சத்தம் போட்டார். உடனே அவரை படுக்கையில் தள்ளி மூச்சு திணற வைத்து தீர்த்து கட்டினேன். வீட்டில் நகைகள், பணம் போன்றவற்றை பீரோக்களை திறந்து அள்ளினேன். அதற்குள் மாலை ஆகிவிட்டது. நைசாக கதவை திறந்து வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து தப்பிச்சென்றேன். இந்த முறை கடவுள் என்னை தப்பவிடவில்லை. என் கையால் சாகும் விதி உள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. அதனால் நான் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூக்க நிலையில் முதல் பெண் கொலை... மயக்க நிலையில் 2-வது பெண் கொலை

    சென்னையில் சக்திவேல் என்ற 'சைக்கோ' கொள்ளையன் சீதாலட்சுமி என்ற பெண்ணையும், சிவகாமிசுந்தரி என்ற பெண்ணையும் கொன்று நகைகளை கொள்ளை அடித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 80 வயதை தொட்டவர்கள். அவர்களை வலி இல்லாமல், மூக்கு, வாயை பொத்தி, மூச்சு திணற வைத்து தீர்த்துக்கட்டி இருக்கிறார்.

    முதலில் கொலை செய்யப்பட்டவர் சீதாலட்சுமி. இவர் பகலில் கதவை திறந்து போட்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கொலையாளி சக்திவேல், வீட்டுக்குள் புகுந்து, சீதாலட்சுமியின் மூக்கு, வாயை பொத்தி 10 நிமிடத்தில் உயிரைவிட வைத்துள்ளார்.

    அதாவது சீதாலட்சுமியை தூக்க நிலையில், போட்டு தள்ளி இருக்கிறார். 2-வதாக நடந்த சிவகாமிசுந்தரி கொலை மயக்க நிலையில் நடந்துள்ளது. அவரை மூக்கு, வாயை பொத்தி முதலில் மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர் தலையணையால் முகத்தை அமுக்கி உயிர் போகவைத்துள்ளார். அவர்கள் உயிருக்கு போராடிய நிலையை கண்ணால் பார்த்தால், இரக்கம் வந்து விடும், என்பதால், அதை பார்க்காமல் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்தபடி கொன்றதாக கொலையாளி சக்திவேல் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்தான் என்பது புரியாத புதிராக இருந்தது.
    • இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    சென்னை

    சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த 'சைக்கோ' கொள்ளையன், ''கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக'' பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

    தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர், 12-வது தெருவில் வசித்த சிவகாமிசுந்தரி என்ற 81 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த போது, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 21-ந்தேதி நடந்த இந்த கொலை வழக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய தீர்மானித்தோம். நான், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக் சிவாச் ஆகியோருடன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டேன். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வீட்டு கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் கொலை நடந்துள்ளது. மேலும் நகை-பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்தான் என்பது புரியாத புதிராக இருந்தது. கொஞ்சம் சவாலான வழக்காக இருந்தது.

    இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எங்களுக்கு இந்த வழக்கில் துப்பு துலக்க ஏதுவாக இருந்தது. கண்காணிப்பு கேமராவில் நீலகலர் சட்டை அணிந்த ஒருநபர், முகத்தில் நீலகலர் முககவசம் அணிந்த நிலையில், நீலகலர் குடை பிடித்துக்கொண்டு, அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தது பதிவாகி இருந்தது. அந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் பேசும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது. அதே நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடு, வேலைக்காரி செல்வதற்காக திறக்கப்பட்ட போது, நைசாக வீட்டுக்குள் செல்லும் காட்சியையும் கேமரா காட்டியது.

    ஆக அந்த நீலகலர் சட்டைகாரன்தான் கொலைகாரன் என்பதை ஓரளவு புரிந்து கொண்டோம். ஆனால் அந்த கொலைகாரன் பழைய குற்றவாளி இல்லை. அவரது கைரேகையை வைத்து அவர் யார், என்று கண்டறிய முடியவில்லை. மேலும் கேமராவில் பதிவான அவரது படத்தை வைத்தும், அவர் யார், என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது படத்தை காட்டி அவர் யார், என்று தெரிகிறதா, என்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மற்றும் மருமகளிடம் கேட்டால், அவரை இதுவரை பார்த்ததே இல்லை என்றார்கள்.

    மீண்டும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். நீலகலர் சட்டைக்காரன் கொலையை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து, சற்று தூரம் நடந்து, பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்கிறான். அந்த ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்தும் விசாரித்தோம். மேலும் நீலகலர் சட்டைக்காரனின் கேமரா பதிவு படத்தை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி பகுதி ஆட்டோக்காரர்களிடம் காட்டி விசாரித்தோம். அப்போதுதான் கொலையாளி யார் என்றும் அவரது வீட்டையும் கண்டுபிடித்தோம்.

    கொலையாளியின் பெயர் சக்திவேல் (வயது 45) என்று தெரியவந்தது. சக்திவேல், கொலையை செய்து விட்டு, தனது செல்போனை பயன்படுத்தாமல் ஆப் செய்து வீட்டில் போட்டு விட்டார். அவர் வீட்டில் இருக்கிறாரா, என்பதை முதலில் நைசாக விசாரித்தோம். அவர் முதலில் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து மடக்கிப்பிடித்தோம். நாங்கள் தீர்மானித்தபடி, சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிசக்திவேல் கைது செய்யப்பட்டார்.

    அவர் வாடகை வீட்டில் வசித்தார். வீட்டு உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் வாடகை பாக்கி இருந்தது. மேலும் அவரது மாமியாரிடம் வாங்கிய கடன் ரூ.25 ஆயிரம் போன்ற கடனை அடைப்பதற்காக, ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு பெண்ணை கொலை செய்து, கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த ரூ.2 லட்சம் பணத்தின் மூலம் வீட்டு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் உள்ளிட்ட கடன்களை அடைத்துள்ளார். கொள்ளையடித்த 45 பவுன் நகையை தியாகராயநகரில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகையை அப்படியே மீட்டோம். கொள்ளையடித்த பணத்தில் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    கொலையாளி சக்திவேலிடம் விசாரித்தபோது, அவர் ஏற்கனவே இதுபோல இன்னொரு பெண்ணையும், கொலை செய்து நகையை கொள்ளையடித்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி கொலையாளி சக்திவேல் வசித்த கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் சீதாலட்சுமி (வயது 79) என்ற பெண் இதேபோல் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது மகள் புவனேஷ்வரி துபாயில் உள்ளார். மகன் சிவகுமார் அடையாறில் குடும்பத்துடன் வாழ்கிறார். சீதாலட்சுமியின் தனிமையை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார். அவரும் உடலில் காயம் இல்லாமல் கொலை செய்யப்பட்டிருந்தார்.

    வாயை, மூக்கை பொத்தி மூச்சு திணற வைத்து இரண்டு பெண்களையும், சக்திவேல் தீர்த்துக்கட்டி இருக்கிறார். சீதாலட்சுமி வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிலும் 15 பவுன் நகைகளை மீட்டு விட்டோம். சீதாலட்சுமி கொலை வழக்கில் போலீசிடம் சிக்காமல் தப்பியதால், அடுத்து சிவகாமிசுந்தரியையும் கொலை செய்ய சக்திவேல் துணிந்து விட்டார்.

    சக்திவேல் ஒரு சைக்கோ மனம் படைத்தவர். வயதான பெண்களை கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும், என்று முதலிலேயே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். கேமராவில் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் முககவசம், குடையால் முகத்தை மறைத்தபடி செயல்பட்டுள்ளார். கொள்ளை மட்டும் அடித்தால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னை அடையாளம் காட்டி விடுவார்கள் என்பதற்காக கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    சக்திவேலை போன்ற கொடூர மனம் படைத்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். அவர் வேறு ஏதாவது இதுபோல் கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா, என்று விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை பிரிவை சேர்ந்த உதவி கமிஷனர் பிராங்க்ளின் ரூபன், இன்ஸ்பெக்டர் அம்மு உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார். மீட்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா அவற்றை பார்வையிட்டார்.

    • கடந்த 25 ஆண்டுகளாக ஜெர்மனியில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், 2019-ம் ஆண்டு இலங்கை திரும்பியதும் தெரியவந்தது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யாழ்ப்பாணம்:

    இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கார்த்தி கேசு நாகசுந்தரி என்பவரது வீட்டில் 51 வயது மதிக்கத் தக்க ஒருவர் வாடகைக்கு குடியிருந்தார். சம்பவத்தன்று நாகசுந்தரியின் உறவினர்கள் 4 பேர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர். அப்போது வாடகைக்கு இருந்தவர் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்தார்.

    அவர்கள் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுப்பிரமணியம் மகாதேவா (75) என்பவர் ஓடி வந்தார். அவரும் கொலை செய்யப்பட்டார்.பின்னர் கொலையாளி வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். கொலையுண்ட 5 பேரும் இலங்கை தமிழர்கள் ஆவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அவர் கடந்த 25 ஆண்டுகளாக ஜெர்மனியில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், 2019-ம் ஆண்டு இலங்கை திரும்பியதும் தெரியவந்தது. மேலும் இவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்ததால் போதை பழக்கத்துக்கு ஆளானதால் மன அழுத்தம் ஏற்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஜெர்மனியில் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    • பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியா(42) என்ற மனைவியும், மணிகண்டன் (25), சேட்டு (22) என்ற 2 மகன்களும் உள்ளனர்,

    இவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். அவர்களது 2 மகன்களும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜின் மனைவி பிரியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கூலி வேலை செய்து வந்தார். பிரியா வேலைக்கு செல்வதால் தங்கராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து பிரியாவை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரியா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதனை பார்த்த தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் பிரியா வேலைக்கு செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்த தங்கராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவும் அவர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தப்பி ஓடிய தங்கராஜை பென்னாகரம் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
    • போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கூடூர், வரத நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஷிரவாணி.

    இவர்களுக்குள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    ஷிரவாணிக்கு காந்திநகரை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இருவரும் கூடூர் அடுத்த நெர்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். அவர்கள் மிளகு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

    மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை நாகராஜால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    நேற்று மாலை கத்தியை எடுத்துக்கொண்டு ஷிரவாணி வேலை செய்யும் மிளகு தோட்டத்திற்கு சென்றார்.

    அங்கு வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஷிரவாணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    வெங்கடேஸ்வரலு ஓடி வந்து நாகராஜை தடுத்து நிறுத்தினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் வெங்கடேஸ்வரலுவையும் வெட்டினார்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஷிரவாணி பரிதாபமாக இறந்தார்.வெங்கடேஷ் வரலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கூடூர் போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியப்பன் நள்ளிரவில் அங்கு தூங்கி கொண்டிருந்த சப்பாணி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
    • மாரியப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சப்பாணிமுத்து (வயது 42). சலவைத் தொழிலாளி. தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (43). நண்பர்களான இவர்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள சலவை தொழிலாளர்கள் கூடத்தில் படுத்து உறங்குவது வழக்கம். மேலும் அவர்கள் ஒன்றாக மது குடித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நண்பர்கள் சலவை தொழிலாளர்கள் கூடத்தில் படுத்து உறங்கினர்.

    எனினும் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் நள்ளிரவில் அங்கு தூங்கி கொண்டிருந்த சப்பாணி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர் மாரியப்பன் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சப்பாணி முத்துவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து மாரியப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கூறும்போது, மது போதையில் எனது தாய் குறித்து சப்பாணி முத்து அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.

    அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.

    ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.

    இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பு குமார்.

    ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் குமார் காலையில் வீட்டில் இருந்து ஆரணி கங்கன் தெரு வழியாக நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை வள்ளுவன் தெருவை சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆகாஷின் தந்தை கொலைக்கு பழிக்குப் பழியாக 10 ஆண்டு காத்திருந்து குமார் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரவுடி குமாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் திருவொற்றியூரை சேர்ந்த ராஜசேகர் (வயது42) என்பவர் பங்கேற்றார். பின்னர் அவரும் கொலையுண்ட ரவுடி குமாரின் உறவினரான கமலக்கண்ணனும் அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் மாடியில் சென்று மதுகுடித்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் சரமாரியாக ராஜசேகரை தாக்கினார். மேலும் அருகில் கிடந்த கல்லை ராஜசேகரின் தலையில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜசேகரின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி மயங்கினார். இதனை அங்கிருந்த யாரும் கவனிக்க வில்லை. நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் ராஜசேகர் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த கொலை குறித்து குறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×