search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230716"

    • நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
    • ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • திருமங்கலம் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து. இதல் 10 பேர் காயம் அடைந்தனர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    சேலம் நெத்தி மேடு பகுதியைசேர்ந்தவர் வாசுதேவன்(வயது65). இவரது மனைவி வளர்மதி(60). திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு சேலத்திலிருந்து வேனில் புறப்பட்டார்.

    அவர்களது வேன் இன்று அதிகாலை 4.45 மணியள வில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மேலக் கோட்டை அருகே வந்தது. அப்போது நான்கு வழிச்சாலை தடுப்புசுவரில் வேன் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த வளர்மதி, ராஜ் குமார், ஷாலினி, விஜய குமார், சரோஜாதேவி, குழந்தைகள் காதம்பரி, நித்திலன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்த வளர்மதி உள்ளிட்ட 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரண மாக நான்குவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 பேரும் வேனில் வேதாரண்யம் நோக்கி சென்றனர்.
    • லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39).

    அதே பகுதியை சேர்ந்த பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வேனை செந்தில் ஓட்டினார்.

    அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்டர் மீடியனில் வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ராமேசுவரத்திற்கு 13 பேர்களுடன் டூரிஸ்ட் வேன் சென்றது. இதை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் இளங்கோவன் (வயது30) ஓட்டினார்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது புளியால் விலக்கு சென்டர் மீடியனில் மோதியது. இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தம் ேகட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் விபத்தில் காய மடைந்தவர்களை தேவ கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேவகோட்டை ரஸ்தா வில் இருந்து தற்போது புதிதாக போடப்பட்ட திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. உடனடியாக இந்த பிரிவு சாலையில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பழுதாகி நின்றுள்ளது. அந்த வாகனத்திற்கு டூல்ஸ் எடுத்துக்கொண்டு வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில் இருந்து நவீன் (வயது 23) என்பவர் வேனில் சென்றார்.

    வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    • எர்ணாகுளத்தில் இருந்து நேற்று ஒரு மினி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மன்னார்குடி:

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததுமு விக்கிர பாண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விக்கிர பாண்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது

    கடலூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர். இந்த வேனை அதே ஊரை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 25) ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பண்ருட்டி-கும்பகோணம் சாலை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக சிறிது தூரம் ஓடிய வேன் மீண்டும் தடுப்பு கட்டையில் மோதி  இதில் வேனில் பயணம் செய்த செவ்வாடை பத்தர்கள் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனால் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பண்ருட்டி கும்பகோணம் சாலையிலுள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பண்ருட்டி போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

    • மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோடு அரசு கல்லூரி எதிரே உள்ள ரோட்டில் நேற்று சரக்கு வேன் ஒன்று மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் - பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி, ஊழியர்கள் மூலம் மின்கம்பத்தை மாற்றி அமைத்து சரி செய்தனர். இதனால் மங்கலம் ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெயிலால் ஏற்கனவே அவதியில் இருந்த மக்கள், மின்தடையால் மேலும் அவதிப்பட்டனர்.

    • வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.
    • ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர்.

    அவினாசி :

    கோவையிலிருந்து அவினாசி நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை டிரைவர் குமரேசன் (வயது 35) ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையம் அருகே வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார். குமரேசன் வேன் தொடர்பாக பைனான்ஸ் தவணை செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிதிநிறுவனத்தை சேர்ந்த முருகேசன் (32) என்பவர் அந்த வேனை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது எதிரே அன்னூரிலிருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு வேன் மீது மோதியது.

    இதில் இரண்டு வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர். இதனால் ஆட்டையாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • ஒரு மாணவனுக்கும், ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சின்னங்குடியில் இருந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வேனில் அழைத்து சென்றனர்.

    வேன் மயிலாடுதுறை அருகே கிடங்கள் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு, ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.

    அவர்களுக்கு ஆக்கூரில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவிகள் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேனில் சென்ற மற்ற மாணவர்கள் யாரும் காயம் அடைய வில்லை.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    • கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    வெள்ளக்கோவில் :

    கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வெள்ளக்கோவில் அருகேயுள்ள வெள்ளமடை திருச்சி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    இதில் ஆம்னி வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பிரமிளா (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லோகேஸ்வரன் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×