என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 232031"
- ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீபத்மநாபசுவாமி ஆராட்டுக்கு மட்டும் இங்கு விமான சேவை நிறுத்தப்பட்டு, ஆராட்டுக்கு பயன்படுத்தப்படும்.
- அதானி குழுமம் மத்திய அரசிடமோ அல்லது கேரள மாநில அரசிடமோ திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
கன்னியாகுமரி :
குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தியாவில் விமான சேவையை டாடா குழுமம் நடத்தியது.இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட விமானம் நிலையங்களில் திருவனந்தபுரம் விமான நிலைய மும் ஒன்று. இது திருவிதாங்கூர் சமஸ்தா னத்தின் கடைசி மன்னர் ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னரால் தொடங்கப்பட்டது.
அப்போது இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கியதால் டாடா குழுமம் அதை நிறுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் ஸ்ரீசித்திரை திரு நாள் மன்னர் விமான சேவையை நிறுத்தக்கூடாது கேட்டுக்கொண்டது மட்டுமில்லாது பொருளாதார வகையில் உதவியும் செய்தார். பின்னர் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வளர்ச்சி பெற்றது.
மேலும் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி திருக் கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் நடக்கும் விழாவின்போது சுவாமி இந்த விமான நிலைய வழியாகத்தான் சங்குமுகம் கடலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு செல்லும். வருடத்திற்கு 2 நாட்கள் ஸ்ரீபத்மநாபசுவாமி ஆராட்டுக்கு மட்டும் இங்கு விமான சேவை நிறுத்தப்பட்டு, ஆராட்டுக்கு பயன்படுத்தப்படும்.
இதற்கான அனுமதியை ஸ்ரீசித்திரை திருநாள் மன்னர் உடன்பாடு செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடக் கிறது.இப்படி வர லாற்று சிறப்பு மிக்க விமான நிலையத்தை தனி யாருக்கு விற்கும் கொள்கையில் அதானி குழுமத் திற்கு இந்த விமான நிலையம் விற்கப்பட்டது.
அப்போது கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனியாருக்கு விற்கக்கூடாது, கேரள அரசு வாங்கி கொள்ளும் என கேட்டிருந்தார். அதை மீறி மத்திய அரசு அதானி குழுமத்திற்கு விற்பனை செய்தது. தற்போது அதானி குழுமம் பங்குச்சசந்தை யில் மோசடி செய்த காரணத்தினால், அதன் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமம் மத்திய அரசிடமோ அல்லது கேரள மாநில அரசிடமோ திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வலியுறுத்தப்பட்டது
- நடிகை ரோகிணி பங்கேற்றார்
புதுக்கோட்டை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விட்டனஸ் திரைப்படம் திரையிடலும், அப்படத்தின் கலைஞர்களுக்கு பாரா ட்டு விழாவும் புதுக்கோ ட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் டாலின் சரவணன் வரவேற்றார்.
இதில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி பேசிய போது, சாக்கடைகள், குப்பைகளை அகற்றும் சக மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண்டின் அவலம். மலக்குழிக்குள் கூட மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவலத்தை விட்டனஸ் திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது.
இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது.
துப்புரவுப் பணியாளர்களுக்கான பணிபாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களையப்ப ட வேண்டும். இனி ஒரு மனிதர்கூட மலக்குழியில் இறங்கக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கங்கள் உட னடியாக கழிவுநீர்தொ ட்டிகளுக்குள் சுத்தம் செய்யும் கருவிகளை தருவிக்க வேண்டும். அதுவே சகமனிதன் மீதான அக்கறையையும் பொறுப்பு ணர்வையும் உறுதி செய்யும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்ம துக்கூர்ராமலிங்கம் , எம்.எல்.ஏ.சின்னத்துரை, கவிஞர் கவிவர்மன், மாநில துணைத் தலைவர்கள் முத்துநிலவன், நீலா, கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, இளங்கோ உள்ளிட்டோ ர்பங்கேற்றனர். பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.
- டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
- தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.
இதற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர்கோ விந்தராஜன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர்அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள்தா மரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அ ப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
- கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
திருவாரூர்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.
இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.
இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
- இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
திருவாரூர்:
நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் ஒன்றியம் விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நிலத்தையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.
நிலம் தேர்வு குறித்து உரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர்.
கடந்த ஆண்டு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் பணிகள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் 5.35 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
விவசாய அணி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜ், அர்ஜுணன், மகளிர் அணித் தலைவி விமலா, மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், அரசு பிரிவு மாவட்டத் தலைவர் தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில், 4.63 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய தேங்காய் உற்பத்தியில் 31.5 சதவீதம் உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3,751.26 டன் உற்பத்தி செய்து தேசிய தேங்காய் வியாபார சந்தையில் 27.47 சதவீதம் பங்கு பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் தென்னை உற்பத்தியாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளனர்.
உரிய விலை கிடைக்காமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் உற்பத்தி பரப்பளவும் குறைந்து கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் பொதுவினியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் பொருட்களில் தேங்காயையும் கட்டாயம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 635 ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
மாதம் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 10 தேங்காய்களை வழங்குவதன் மூலம் மக்களும் பயன்பெறுவர். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதன் மூலம் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும்.
தேங்காய் உற்பத்தியாளர்களிடம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து ஆண்டு முழுவதும் அரசு கொள்முதல் செய்தால், தென்னை விவசாயிகளை காப்பாற்ற இயலும்.
அதன்மூலம் தென்னை சார்ந்த பல பொருட்கள் வணிக வாய்ப்பு பெரும். எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.
சுவாமிமலை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜன்.
செயலாளர் ரவி பொருளாளர் அரசு ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஏப்ரல் 2021 முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாள ர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை பல மாதங்களாக வழங்காமல் உள்ளதை இனியும் காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.
திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் 15 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், எம்.ஆர்.பி., செவிலியர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிற அரசாணைகள் 115, 139, 152-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வெங்கடாசலபதி, கால்நடைத் துறை செல்வகுமார், வட்டச் செயலாளர் மணி, குடிநீர் வடிகால் வாரியம் பெரியசாமி, பெருமாள், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
- சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பெருமாள், துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் முகமதுஅலி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவன விலை உயர்வு, பால் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2017&ம் ஆண்டு ஆவின் நிர்வாகம், ஆரம்ப சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும் போதே, பாலில் உள்ள சத்து, கொழுப்பு கணக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் 5 ஆண்டுகள் கடந்து நடைமுறைப் படுத்தப்படவில்லை.
கால்நடை தீவனங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் லாபகரமாக செயல்பட்ட ஆவின் மூலம் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். நாள்தோறும் 1 கோடி லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும்.
சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
- விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகில் உள்ள திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 24-வது நாள் தொடர் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையிலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கரும்பு விவசாயிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:-
கரும்பு விவசாயிகள் போராட்டம் 24 நாட்களைக் கடந்தும் நடந்து வரும் வேளையில் மத்திய,மாநில அரசுகள் கவலை கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஆலையை நிர்வகித்து வந்த திருவாரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் கால்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆலையை விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை பட்டுவாடா செய்யாமல் விற்று இருக்கிறார்.
இந்த ஆலையை புதிதாக வாங்கிய நிறுவனமும் இவர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வருகிற இத்தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி வருவது வருத்தம் அளிக்கிறது.
கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக ஆலை முதலாளிகள், வங்கி நிர்வாகத்தினர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். மேலும் உடனடியாக உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.
விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறவேண்டிய தொகையைப் பெற்று கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, உழவர் உரிமை இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் தமிழ் வேந்தன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ் மாறன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஹென்றிதாஸ், குடவாசல் ஒன்றிய செயலாளர் சாலமன், குடந்தை ஒன்றிய முன்னணி பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்