search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232186"

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் கண் மருத்துவ மனை இனைந்து கொழுந்துரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

    கொழுந்துரை ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் வரவேற்று கண்சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் முகாமை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இலவச கண்ணாடிகளை அணிவித்தார். முதுகு ளத்தூர் வட்டா வளர்ச்சி அலுவலர் ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெய பால், மணலூர் ராமர், சத்தியேந்திரன், ரஞ்சித், கொழுந்துரை ஊராடசி மன்ற தலைவர் நஸ் ரீன்பானு, வாகைக் குளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் அருண் தலைமையில் சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள 2 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், வினோத் பாபு, ஆங்கல்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    மேலும் இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 85 பேர் சளியால் பாதிப்பு
    • கிராமம் கிராமமாக சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    இந்தியாவில் இன் புளூயன்சா எச்.3, எச்.2 வகையைச் சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவு கிறது.

    தமிழகத்தில் இந்த காய்ச்சல் பரவாமல் தடுக் கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதை யடுத்து நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது. 9 ஒன்றியங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக ஒவ் வொரு கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களிலும் அங்கன்வாடி மையங்களி லும் டாக்டர் குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழு வதும் 2967 பேருக்கு பரிசோ தனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 85 பேர் சளியால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறார்கள்.

    இன்று 2-வது நாளாக மருத்துவ குழுவினர் கிராமம் கிராமமாக சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். 9 ஒன்றியங்களில் 27 இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூல மாக சிகிச்சை அளிக்கப் பட்டது. 36 பள்ளிகளிலும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பள்ளி மாணவ- மாணவி களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். தற்பொழுது நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் 2 அல்லது 3 நாட்களாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவ ருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குமரி மாவட்டத்தில் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோ தனை மேற்கொண்டு உள்ளனர்.

    • 14 நடமாடும் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • டெங்கு, மலேரியா உள்ளிட்ட 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்புளூயன்சா என்னும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று 200-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.

    தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இது தவிர ஒவ்வொரு வட்டாரங்களிலும் 14 நடமாடும் குழுக்கள் மூலமும் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பொது சுகாதார துறை மூலம் ஏராளமான களப்பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் 28 குழுக்கள் பிரிந்து சென்று குழந்தைகள், மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

    தஞ்சை மாநகராட்சியில் 210 களப்பணியாளர்களும், கும்பகோணம் மாநகராட்சி பட்டுக்கோட்டை நகராட்சியில் தலா 60 களப்பணியாளர்களும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 20 களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் காய்ச்சல் அறிகுறி தென்படுபவர்களை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.

    தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் ஏற்பாட்டில் நடந்த முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த மையத்தில் குழந்தைகள், பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, உன்னி காய்ச்சல், லெப்டோ ஆகிய 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பொது சுகாதார ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதன் முடிவுகள் வந்தவுடன் காய்ச்சல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    இந்த முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, சுகாதார ஆய்வாளர் அருமைத்துறை ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி க. ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும். தேவையான அளவு மருந்து , மாத்திரைகள், கிருமி நாசினி கையிருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    பொதுமக்கள் யாரும் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி மருந்து, மாத்திரைகளை வாங்க கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் மொபைல் வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒரு வட்டாரத்திற்கு மூன்று மொபைல் வாகனங்கள் என 10 வட்டாரத்திலும் 30 மொபைல் வாகனங்களில் மருத்துவ குழுவினர் வீதி வீதியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பு  சிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்த காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சூடான தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாகை- மயிலாடுதுறை

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.

    அங்கு பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    • எல்.ஜே.நகரில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 145 பேருக்கு எக்கோ, உடல் ரத்த அழுத்தம் மற்றும் பொது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமம் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டருடன் இணைந்து எல்.ஜே.நகரில் உள்ள நியூ விஷன் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.

    இந்த முகாம் நடத்திட தமிழ் பல்கலை கழக வளாக குடியிருப்போர் நலசங்க தலைவர் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பாரதி நகரில் வசித்து வரும் முன்னாள் படைவீரர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்மருத்துவ முகாமில் 205 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 145 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இ.சி.ஜி., பி.எம்.ஐ., பொது பரிசோதனைகளை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் குழுவினர் செய்தனர்.

    முடிவில் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரெ.குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • திடீரென மயக்கம் ஏற்பட்டு கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அந்தோணியார்புரம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 33) மீனவர்.

    இவர் நேற்று கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

    உடன் வந்த மீனவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன அந்தோணிராஜ்-க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இச்சம்பவம் அக்கிராமத்தில் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் காவல்சரகம் தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 50) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று அருகில் உள்ள சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வெங்கடாசலத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சாலக்கடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் வெங்கடாஜலம் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பொது மக்கள் கரியாபட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
    • அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி சார்பில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.

    முகாமிற்கு நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்,

    அனைவருக்கும் ரத்த அழுத்தம் ,சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது, தேவைபடுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற முதியோர்கள் 40 பேருக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது.கண்ணாடி தேவை படும் சுமார் 205 பேருக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகாமில் ஊராட்சி தலைவர்கள் சுஜாதா பாஸ்கரன் தமிழ்செல்வி வேல்முருகன்,திலகவதி சிவசுப்ரமனியன், தேவகி உதயகுமார், ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார், உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன், ஏரியா பொது மேலாளர் சரவணன்,முத்துகுமார், நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மகேந்திரன், துணைத்தலைவர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் நல்லூர், களப்பால், வாட்டார், வெங்கத்தான்குடி, அக்கரைகோட்டகம், பைங்காட்டூர், பனையூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முருகானந்தம் ஒருங்கிணைத்தனர். முகாமை கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது.

    • மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்குட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.
    • மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக் கோட்டையில் ஆண்டுதோறும் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை (சனிக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்கு உட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது.

    மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    • 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
    • சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது

    முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.

    மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்று சார்க்கரை நோய்.
    • தற்போது பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது.

    நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும்.

    ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.

    தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    • கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர் எஸ்.டி.பி. ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

    கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கலந்து கொண்டார். கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சரவணன் தலைமையில் குழந்தைகள் மருத்துவர் கவுதம், காது, தொண்டை, மூக்கு மருத்துவர் ஆரோபிண்டோ, கண் மருத்துவர் வடுலா கிருஷ்ணன், எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் நூருல் ஆயிஷா, பொது மருத்துவர் ப்ளெக்ஸ் நிதின், தோல் மருத்துவர் ஸ்ரீ பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    முகாமிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் முகமது பாஷா, சகிலா பேகம், சித்திக், சமூக ஆர்வலர் அஜ்ஹர், ரோட்டரி கிளப் மரம் நடுதல் சேர்மன் சபீக். ம.ஜ.க. நிர்வாகி செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமில் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எர்ணாகுளம் பஷீர் திருக்குர்ஆன் வழங்கினார்.

    ×