search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232186"

    • மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுநர் தமிழ்மணி, 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரிமா சங்க செயலாளர் வினோத் வரவேற்றார். செயலாளர்( சேவை) சரவணன் அறிமுக உரை யாற்றினார். முகாமில் மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தார். ஜி. எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் சேர்மேனும் ,லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவருமான பழனியாண்டி, உன்னியூர் எஸ்.எஸ்.பாலிடெக்னிக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் , மாவட்ட தலைவருமான டாக்டர் செந்தில்ஆண்டவன், மோகனூர் அரிமா சங்க கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மண்டல தலைவர் தனபால், வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாம் முடிவில் பொருளாளர் என்ஜினியர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெண்கள் மேல் நிலைப்பள்ளிப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    • ரத்தக் குழாய்களில் நகர்கின்ற ரத்த செல்களை படம்பிடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அறிய செய்கிறது.
    • கலர் டாப்ளர் ஸ்கேன் என்பது, ஒலி அலைகளை வண்ண படங்களாக மாற்றி காண்பிக்கிறது.

    'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசையாமல் இருக்கிற உறுப்புகளின் தன்மையை படம் பிடித்து காண்பிக்கிறது.

    'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களை படம்பிடித்து காண்பிக்கிறது. குறிப்பாக, ரத்தக் குழாய்களில் நகர்கின்ற ரத்த செல்களை படம்பிடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அறிய செய்கிறது.

    அசையா உறுப்புகளில் இருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறுவதில்லை. ஆனால் அசையும் உறுப்புகளில் இருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறும்.

    இந்த மாற்றத்தை வைத்து ரத்த ஓட்டத்தின் தன்மையை கணிக்க முடியும். இந்த அடிப்படையில்தான் 'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரத்த குழாய்க்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ரத்த செல்களின்மீது இந்த ஒலி அலைகள் பட்டு எதிரொலித்து திரும்புகின்றன. அவ்வாறு திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி, வேகம், அடர்த்தி, திசை போன்ற பல விவரங்களை அலசி ஆராய்ந்து, ரத்த ஓட்டத்தை கணித்து, அதை உருவப்படமாகவும் வரைபடமாகவும் தயாரித்து கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கிறது. இந்த படங்களை பிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும் முடியும்.

    டியூப்ளக்ஸ் டாப்ளர் ஸ்கேன் என்பதும் மேலே கூறப்பட்ட வகையை சேர்ந்ததுதான். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையை காண்பிக்கிறது. அலை டாப்ளர் ஸ்கேன் என்பது, இந்த ஸ்கேன் கருவியை நோயாளியின் படுக்கைக்கே கொண்டுவந்து பரிசோதிக்க உதவுகிறது. ரத்த ஓட்ட பாதிப்பை மிக வேகமாக கணிக்க இது உதவுகிறது.

    கலர் டாப்ளர் ஸ்கேன் என்பது, ஒலி அலைகளை வண்ண படங்களாக மாற்றி காண்பிக்கிறது. இதன் பலனால் தமனி, சிரை என்று ரத்தக்குழாய்களை பிரித்துக்காண இயலும். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையையும் காண முடியும்.

    கை, கால், கழுத்து, மூளைக்கு செல்லும் தமனி மற்றும் சிரைக்கான ரத்த குழாய்களின் நிலைமைகளை அறிய இதுபோன்ற ஸ்கேன் பரிசோதனைகள் உதவுகின்றன. ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா, சுருங்கி உள்ளனவா என்பதை அறியலாம். ரத்தக் குழாய்க்குள் ரத்தம் உறைந்துள்ளதா? ரத்த ஓட்ட தடை ஏற்பட்டுள்ளதா? எனவும் அறியலாம்.

    முக்கியமாக, 'ஆழ்சிரை ரத்த உறைவு நோய்' மற்றும் நுரையீரல் 'ரத்த உறைவுக் கட்டி' நோயை அறிய இந்த பரிசோதனை பெரிதும் உதவுகிறது. ரத்தக்குழாய் வீக்கம் மற்றும் அழற்சியை கணிக்கவும் இது பயன்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திட வேண்டும்.
    • மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் மற்றும் கழிசல் நோய்க்கான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆடுகளுக்கு டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகளை டாக்டர் விஸ்வேந்தர் மற்றும் அவர்களது குழுவினர் தடுப்பூசி போட்டனர்.மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திடவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்வில் துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    சோழவந்தான்

    தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் கர்ப்பிணிபெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இதில் செயல் அலுவலர் சுதர்சன், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம், துணைதலைவர் லதாகண்ணன், கவுன்சிலர் கொத்தாளம் செந்தில், வட்டார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், பிரபாகரன், செல்வம், செந்தில் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை உள்ளது.
    • விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனையானது தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை ஆகும். மேலும் சிறந்த மருத்துவமனை என முதல்வரால் பாராட்டப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை மற்றும் பெண்கள் மகப்பேறு அவசர கால சிகிச்சை செய்து வருகின்றனர்.

    தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் சேதம் அடைந்து மோசமான சூழ்நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவர்களே அந்தப் பிணவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

    விரைவில் மாவட்ட நிர்வாகம் முதன்மை வாய்ந்த அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக பிணவறை கட்டிடத்தை ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
    • வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம்.

    குழந்தைகளின் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வது வழக்கம். அதே சமயம் 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம். இதன்மூலம் ஆரம்ப நிலையில் இருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து, அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    கண் பரிசோதனை:

    ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.

    பல் பரிசோதனை:

    சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்போதுதான் பலரும் பல் மருத்துவரைச் சந்திக்கிறார்கள். குழந்தைகள் அதிகப்படியான இனிப்புகள், சாக்லேட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதால் பற்களில் கிருமிகளின் தாக்கம் இருக்கலாம். இவை பாதிப்பை ஏற்படுத்தும்வரை காத்திராமல், முன்கூட்டியே பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்.

    உடல் எடை:

    மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி சீராக உள்ளதா? உடல் எடை சரியாக உள்ளதா? எனப் பரிசோதிக்க பொதுமருத்துவரைச் சந்திப்பது நல்லது. மேலும் குழந்தைகளிடம் குறட்டை, காது நோய்த்தொற்றுகள், டான்சிலிடிஸ், சைனஸ் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சைகளின் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.

    தடுப்பூசி:

    குழந்தைகள் பிறந்தது முதல் 1 வருடம் வரையும், அதற்கு பிறகு 2 முதல் 12 வருடங்கள் வரையும் தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான தடுப்பூசி அட்டவணையை மருத்துவரிடம் பெற்று, உரிய இடைவெளியில் கால தாமதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது பல நோய்களைத் தடுக்க உதவும்.

    • மாணவர்களும் காய்ச்சலால் அவதி
    • அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

    இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    நேற்று 985 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 78 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 5 குழந்தைகளும் அடங்கும்.

    கடந்த 25 நாட்களில் மட்டும் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்றும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேல்புறம், முஞ்சிறை ஒன்றியங்களிலும் கொத்து கொத்தாக மக்கள் கொரோனா பாதிப்பு க்குள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே அந்த ஒன்றிய பகுதிகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேற்புறம் ஒன்றியத்தில் 14 பேருக்கும், முஞ்சிறை ஒன்றியத்தில் 17 பேருக்கும், தொற்று உறுதியாகியுள்ளது.

    ஒரே வீட்டில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்டதை யடுத்து அவ ர்கள் தனிமைப்படுத்த ப்பட்டு உள்ளனர். மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனை வரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 4 பேரும், கிள்ளியூரில் 5 பேரும், ராஜாக்கமங்கலம், திருவ ட்டாரில் தலா 3 பேரும், தோவாளையில் 11 பேரும், தக்கலை, குருந்தன்கோட்டில் தலா 4 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் தற்பொழுது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறை அதிகாரி கள் கண்காணிப்பு பணியை யும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 215 பேர் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கியின் கிளை மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். 215 பேர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரன் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • 15 நாட்களில் பாதிப்பு 200-ஐ கடந்தது
    • பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முன்சிறை ஒன்றியத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று குருந்த ன்கோடு யூனியனில் அதிகமானோர் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    அங்கு அதிகபட்சமாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் ஒன்றியத்தில் 2 பேரும் ராஜாக்கமங்கலம் தக்கலையில் தலா மூன்று பேரும், மேல் புறத்தில் ஒருவரும், திருவட்டாறில் 5 பேரும், முன் சிறையில் 10 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    நாகர்கோவில் ராமன்பு தூர், மேல சூரங்குடி பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 20 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது சுகாதாரத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி யுள்ளது.

    மாவட்டத்தில் 264 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்ய ப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள் ஆவார்கள். கடந்த 16 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்க ளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறா ர்கள்.ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் உள்ள கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது. ஆனால் அங்கு ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளார்.

    தற்போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுவதால் ஆஸ்பத்திரிக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேற்கு மாவட்ட பகுதியில் இருந்து தற்போது கிழக்கு மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    ×