search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு"

    • நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மூணாம் கரடு அடுத்த பொம்மனசெட்டிக்காடு அருகே போலீஸ்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரை நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது தாயார் மகாலட்சுமி (வயது 64), மனைவி உஷா (42), மகள் கவுசல்யா (22) மற்றும் உறவினர்கள் லதா (40), கீதா (40), தாரணேஸ்வரி (21) ஆகியோர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனைக் கண்ட போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி டவுன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் பாஸ்கரின் மனைவி உள்பட 6 பெண்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
    • இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பாண்டியன் (31) என்பவரை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செல்வகு மார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
    • மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் யூனியன் சின்னத் தடாகம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019 அன்று நடைபெற்றது.

    இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020- அன்று எண்ணப்பட்டது.

    அன்று இரவு 10 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், தெரி விக்கப்பட்டது.இதையடுத்து சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறி விக்கப்பட்டது.

    ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்தார். மேலும் அவர் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

    இதற்காக கலெக்டர் அலுவலக கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 ஓட்டுப்பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் குருடம்பாளையம் எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு வாக்குப்பெட்டிகளை திறந்து அதிகாரிகள் வாக்குகளை எண்ணினர்.

    வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும், அதன்பின்னரே வெற்றி பெற்றவர் விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஜல்லிக்கட்டில் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தது.

    முன்னதாக இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    இந்தப் பணிகளை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏழும்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இதேபோல் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் வீரர்களை முட்டி காயம் ஏற்படாமல் இருப்பதற்காக மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தியிருந்தனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசாகவுண்டரின் விவசாய நிலத்தில் கோழி மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் இருதரப்பும் கொடுத்த புகாரின் படி கோமதி, மகாலிங்கம், வசந்த், கவுதம், இருசாகவுண்டர், மாதையன், சுப்புரு ஆகியோர் மீது தாரமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

    மடத்துக்குளம் :

    விவசாயம் என்னும் உணவு உற்பத்தித்தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயிகளை கவுரவப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு துணையாக அரசின் உதவிக்கரம் உள்ளது என நம்பிக்கையளிக்கும் வகையிலும் மத்திய அரசின் மூலம் பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியற்ற விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்வதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் ஆதார் இணைப்பு மற்றும் நில ஆவணங்கள் இணைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறையான ஆவணங்கள் இணைக்காத விவசாயிகளுக்கு தற்போது உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை வட்டாரத்தில் தற்போது 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

    தற்போது உதவித்தொகை நிறுத்தப்பட்ட விவசாயிகள் தங்களது சொத்து ஆவணங்களை வேளாண்மைத்துறையினரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொது சேவை மையங்களுக்கு சென்று ekyc பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் மற்றும் மொபைல் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு சில விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

    இதனால் இருவருக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் விட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்கும்போது மீதம் உள்ளவருக்கு உதவித்தொகை வருவதற்கு வாய்ப்புள்ளது. உதவித்தொகை வராத விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய அளவில் 2-வது முறையாக வினாடி-வினா போட்டி மாணவ, மாணவிகள் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
    • கடைசி தேதி 20.11.2022 ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் 2- வது முறையாக Fit India Quiz Competition நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசின் வலைதளமான https://fitindia.nta.ac.in-ல் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    இந்த வினாடி-வினா போட்டியில் ஒரு பள்ளியில் 2 மாணவா்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்கள் பதிவு செய்தால் ஒரு மாணவருக்கு ரூ.50 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதற்கான கடைசி தேதி 20.11.2022 ஆகும்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சோ்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் இணை–ய–த–ளம் மூலம் பதிவு செய்ய வேண்–டும் என கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது.
    • இது–தொ–டர்–பாக கடந்த செப்–டம்–பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்–றுலா தினத்–தன்று சுற்–று–லாத்–துறை அமைச்–சர் மூலம் வழி–காட்டு நெறி–மு–றை–கள் வெளி–யி–டப்–பட்–டது.

    சேலம்:

    சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் இணை–ய–த–ளம் மூலம் பதிவு செய்ய வேண்–டும் என கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது. சுற்–று–லாத்–து–றை–யின் மூல–மாக பெட் அண்ட் பிரேக் பாஸ்ட் திட்–டம், ஹோம் ஸ்டே, சாகச சுற்–றுலா இயக்–கு–ப–வர்–கள், கேம்–பிங் இயக்–கு–ப–வர்–கள், கேர–வன் மூலம் சுற்–றுலா இயக்–கு–ப–வர்–கள், கேர–வன் பூங்கா இயக்–கு–ப–வர்–கள் உள்–ளிட்ட சுற்–றுலா சார்ந்த நிறு–வ–னங்–கள் அர–சாணை மற்–றும் சுற்–றுலா வழி–காட்டு நெறி–மு–றை–க–ளின்–படி பதிவு செய்–வது கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது.

    இது–தொ–டர்–பாக கடந்த செப்–டம்–பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்–றுலா தினத்–தன்று சுற்–று–லாத்–துறை அமைச்–சர் மூலம் வழி–காட்டு நெறி–மு–றை–கள் வெளி–யி–டப்–பட்–டது. எனவே, சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் அனை–வ–ரும் http://www/tntourismtors.com/ என்ற இணை–ய–த–ளத்–தில் மூல–மாக உரிய வழி–காட்டு நெறி–மு–றை–க–ளின்–படி அவ–சி–யம் பதிவு செய்–யு–மாறு தெரி–விக்–கப்–ப–டு–கிறது.

    மேலும், கூடு–தல் விவ–ரங்–க–ளுக்கு மாவட்ட சுற்–றுலா அலு–வ–லர், சுற்–றுலா அலு–வ–ல–கம், மாவட்ட கலெக்–டர் அலு–வ–லக வளா–கம், சேலம் என்ற முக–வ–ரி–யில் நேரில் வந்து கேட்டு பயன்–பெ–ற–லாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்–டர் கார்–மே–கம் தெரிவித்து உள்ளார்.

    • தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.

    தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

    வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் தோட்டக்கலை துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23-ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in./tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • குமரி மாவட்டத்தில் மொத்தம் 26 முதியோர் இல்லங்கள் உள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட சமூக நலத் துறை சார்பில் முதியோர் இல்லங்களின் செயல்பாடு கள் குறித்த கலந்தாய்வு கூட் டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ் சில் கூட்டரங்கில் நேற்று நடந் தது.கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசியபோது கூறியதா வது:-

    குமரி மாவட்டத்தில் மொத்தம் 26 முதியோர் இல் லங்கள் உள்ளன. அதில் 26 முதியோர் இல்லங்களும் மூத்த குடிமக்கள் பதிவு சட் டத்தின்கீழ் பதிவு செய்யப்பட் டுள்ளது. 26 முதியோர் இல் லங்களில் 572 முதியோர்கள் தங்கியுள்ளனர். 5 முதியோர் இல்லங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உதவிபெற்று இயங்கு கின்றது. 572 முதி யோர்களில் 445 நபர்களுக்கு ஆதார் எண் பெறப்பட்டுள் ளது. மீதமுள்ள முதியோர்க ளுக்கு ஆதார் எண் எடுப்ப தற்கு முதியோர் இல்லங் களிலேயே நேரடியாக சென்று பதிவு செய்ய இ-சேவை மையத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட அளவி லான முதியோர் நலக்குழு வில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் ஆதர வற்ற நிலையில் சாலையில் சுற்றித்திரியும் முதியோர்கள் மற்றும் உதவி மைய எண்கள் மூலம் தகவல் பெற்று 12 முதியோர்கள் மீட்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பரா மரிக்கப்படுகிறார்கள்.

    மூத்த குடிமக்கள் உதாசீ னப்படுத்தப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தடுப்பதற்கான விழிப்பு ணர்வை சமூகத்தில் ஏற்ப டுத்திட வேண்டும். முதியோ ருக்கு ஏதேனும் கெடுதல்கள் நேர்ந்தால் முதியோர்களுக் கான தேசிய கட்டணமில்லா உதவி எண்-14567-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்ணையும் (04652-278404) தொடர்பு கொள்ளலாம். அரசின் பதிவு உரிமம் பெறாமல் தனியார் தொண்டு நிறுவ னங்கள் மூலம் நடத்தப்ப டும் முதியோர் இல்லங்கள் உடனே பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் சிவப் பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் சரோஜினி, முதியோர் நலன் மாநில திட்ட பணியாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×