என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி சாவு"
- நேற்று இருசக்கர வாகனத்தில் நேரலகிரி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
- எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வாலிநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது44). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் நேரலகிரி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சின்னப்பன் உயிரிழந்தார்.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது56).
கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே சவுளூப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சேகர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சூர்யா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால், கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது சேகர், தனது 2-வது மனைவி சூர்யாவை குடும்ப நடத்த அழைத்தார். அவர் வரமறுத்ததால், மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகசமுத்திரத்தில் உள்ள ஆற்றில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.
- முனியம்மாள் அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் ஆற்றில் மூழ்கி இறந்தார் என்பது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது55).
தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பந்தாரஅள்ளியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன முருகனின் மனைவி முனியம்மாள் தனது கணவரை பந்தாரஅள்ளி வந்து பல இடங்களில் தேடிபார்த்தார். அப்போது அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நாகசமுத்திரத்தில் உள்ள ஆற்றில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனே முனியம்மாள் அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் ஆற்றில் மூழ்கி இறந்தார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் ஆற்றில் குளிக்கும்போது இறந்து விட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
- பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (வயது39). இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் உள்ளார்.
கூலித்தொழிலாளியான சுரேஷ் சம்பவத்தன்று பி.பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார்.
இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரேஷின் மனைவி விஜயா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது
- கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் தனியார் செயின் தொழிற்சாலை உள்ளது.
இங்கு வடமாநில தொழி லாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.
வடமாநில தொழிலா ளர்கள் தங்குவதற்கு தொழிற்சாலையின் எதிர்புறமும் விடும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வடமாநில தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங், தன்ஜெய் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா, தரம்வீர், மகாதேவ் சிங் ஆகிய 5 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் கோவில்பாளை யத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் மற்றும், தன்ஜெய் சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோவில்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தரம்வீர், மகாதேவ் ஆகியோர் கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- திடீரென வலிப்பு வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை - பெங்களூர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவரும் இங்கு வேலை செய்து வந்தார்.
வேலை செய்து கொண்டிருந்த போது விஜய்க்கு திடீரென வலிப்பு வந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூங்கிக்கொண்டிருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சேவை கவுண்டனூர் காசிலிங்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கார்த்திகா குருநாத புரம், வாழை குட்டை தோட்டம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அன்று இரவு மனைவியை பார்க்க மணி தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர். மணி வீட்டு வாசலில் தரையில் பாயை போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தூங்கிக் கொண்டி ருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதனால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.
- மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகுமார் (வயது 32). கூலி தொழிலாளி.இவர் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
- ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
ஆட்டோ, நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- மனமுடைந்து காணப்பட்ட மல்லேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மல்லேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் சார்ஜ் போடுவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார்.
- மின்சாரம் தாக்கி தங்கராஜ் கீழே விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தங்கராஜ் (வயது23). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்தபோது செல்போன் சார்ஜ் போடுவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று மின்சாரம் தாக்கி தங்கராஜ் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தங்கராஜை மீட்டு அரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னஎலத்தகிரியை சேர்ந்தவர் அஞ்சப்பா (வயது60). இவரது மனைவி சரசம்மா (45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது. இதனால் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அஞ்சப்பா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்