search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233400"

    • நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் இருந்து சேரன்மாநகர் 3-வது பஸ் நிறுத்தம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, 24-வது வார்டு கவுன்சிலர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது குமுதம் நகரில் உள்ள குறுக்கு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

    • மேற்கூறை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் சரணாலயம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே சோழன் அருங்காட்சியம் அமைப்பது குறித்தும் பார்வையிடப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம், ஆதார் சேவை மையத்தின் செயல்பா டுகள் குறித்தும், மாநகராட்சி மேம்பாலம் அருகே மாற்றுதி றனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல்நி லைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தோம்.

    மாவட்ட மைய நூலகத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூறை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவு றுத்தப்பட்டது.

    இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி திருவள்ளுவர் வணிக வளாக கட்டிட பணிகள், அய்யாசாமி வாண்டையார் நினைவு பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காந்தி சாலை கல்லணை கால்வாய் அருகே ராணி வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமேன சம்பந்தப்பட்ட அலுவர்க ளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர் கீதா, வட்டாட்சியர் சக்திவேல், மாநகராட்சி செயற்பொ றியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வி.பி.கார்டன், எலிசாநகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
    • திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமயம் அருகே ஓலை குடிப்பட்டியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2020-21ல் புதிதாக ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போர்வெல்லுடன் பைப்லைன் விஸ்தரிப்பு, செங்காடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 980 மீட்டர் பைப் லைன், திருமயம் கடைவீதியில் 91 மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயையும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
    • ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது.

    இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணர மைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவ தற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வை யிட்ட அவர், இந்த வாய்க்கா லில் மீதமுள்ள 800 மீட்ட ரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

    பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியா ளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 28 பணிகள் 301.13 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

    பெருங்கட்மபனூர் மற்றும் ஓர்குடி கிராமங்களில் வாய்க்கால் தொலைவு 4.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை மற்றும் 12.00 கி.மீ முதல் 15.00 கி.மீ வரை தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பெருங்கடம்பனூர் கிராமம் புளியந்தோப்பு தெருவில் மின்சார கசிவு காரணமாக ஜெயராமன் மற்றும் பிரேம்தாஸ் ஆகியோரது தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளர் ராஜேந்திரன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

    தொடர்ந்து கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

    கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னா் அவா் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

    மொத்த முள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் இளங்கோ, மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வருகிற 5-ந் தேதி திறக்க ஏற்பாடு செய்தார்.
    • வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனுடன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

    இந்த நிகழ்வில் தலைமை பொறியாளரிடம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்.

    அதன்பின்னர் 2 மாதத்தில் சர்வீஸ் ரோடு பணியை முடித்து முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மூலம் முறையாக திறப்பு விழா நடத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதுடன் பணிகளை விரைவு படுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக மேம்பால பணியை விரைவு படுத்தி ஜூன் 5-ந்தேதி மேம்பாலம் மட்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    இதில் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர்முத்து, கோட்டப்பொறியாளர் லிங்கசாமி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் ஜெகன்செல்வராஜ், காவு மைதீன், உதவிப்பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், குணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்ததாவது,

    திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்,

    நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள், அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரம் கி.மீ சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதத்தில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ரூ.833 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சவாலைகளுடன் இணைக்கும் வகையில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறதுபொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
    • விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து

    விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்குட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு 1 துணை மின் நிலையம், ஆயக்கா ரன்புலம் துணை மின் நிலையம் ,வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு,ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடையான், குரவப்புலம் , தென்னம்புலம், கரியாப்பட்டினம்,நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து,கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை 16-ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×