என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருகை"
- அமைச்சர் மனோதங்கராஜ்-மேயர் மகேஷ் கூட்டறிக்கை
- தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை செல் கிறார். இந்த நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இந்த பாத யாத்திரையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். இது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரியில் நடை பெறும் காங்கிரஸ் பேரியக் கத்தின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நாளை (7-ந்தேதி) குமரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி வருகிறார். குமரி வருகை தருவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு குமரி எல்லையான காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் வைத்து குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் எங்களது தலைமையில் காலை 11 மணிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஆகவே குமரிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரை வரவேற்பதற் காக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர் வாகிகளும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு மாலையில் நடைபெறும் ராகுல்காந்தி யின் பாதயாத்திரை நிகழ்ச்சி யில் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறி உள்ளனர்.
- பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கூடுதல் டி.ஜி.பி. நாளை ஆய்வு
- போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை
நாகர்கோவில்:
12 மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 7-ந் தேதி கன்னியா குமரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கே ற்கிறார்.
இதனை தொடர்ந்து அவர் குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதையொட்டி அவரது பயண பாதைகளை போலீசார் ஆய்வு செய்து வரு கின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் குமரி மாவட்டம் வந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோச னையும் வழங்கினார்.
இந்த நிலையில் பாது காப்பு தொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் நாளை (6-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
அவர் பாதயாத்திரை தொடங்கும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் பொதுக்கூட்டம் நடை பெறும் திடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
- மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்க வேண்டும்
- நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கன்னியாகுமரி:
ராகுல் காந்தி குமரி மாவட்டம் வருகையை ஒட்டி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜிஜி முன்னிலை வகித்தார்.
தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, துணைத் தலைவர்கள் அனீஸ் ராஜன், ஜெயசிங் ராபர்ட், வட்டாரத் தலைவர்கள் பிரேம் சிங், ஈஞ்சக்கோடு தாஸ், சுரேஷ், சிபிமோன், வழக்கறிஞர் ஜெஸ்டின் ரேம், முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன் தாஸ், மற்றும் நிர்வாகிகள் சுஜூ மோகன், சந்தோஷ், ரெஜி, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி வருகையை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டும், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மாவட்டத் தலைவர் அஜிகுமார் தலைமையில் நிர்வாகிகள் 1000 பேர் சுங்காங்கடை தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்திக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, வரவேற்பு பாதையில் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் தூய்மைப் பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்ட செய்வது, ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
பாதயாத்திரையை ஒட்டி குமரி மாவட்டம் வரும் வெளி மாநில, வெளி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி மதுரை வருகிறார். அப்போது முக்கம் கலையரங்கை திறந்து வைக்கிறார்.
- நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு மதுரை வருகிறார்.
மதுரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7 - ந் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பின் 8-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் நடக்கும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கி றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் கார் மூலம் நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு மதுரை வருகிறார். அன்றைய தினம் இரவு அவர் மதுரை யில் தங்குகிறார். 9 - ந் தேதி மு.க.ஸ்டாலின், மதுரை மாந கராட்சி ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் ரூ.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மதுரை தமுக்கம் கலையரங்கத்தை திறந்து வைக்கிறார்.
அதன்பின் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி இல்ல திரும ணத்தை நடத்தி வைக்கிறார். அமைச்சர் மூர்த்தி- செல்லம்மாள் தம்பதியின் மூத்த மகன் தியானேசுக்கும், திருச்சி சிவக்குமார்- பொன்னம்மாள் தம்பதியின் மகள் ஸ்மிர்தவர்ஷினி- க்கும் திருமணம் நிச்ச யிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணம் மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த திருமண விழாவில் தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகி றார். முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
இந்த திருமணத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் , எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக வருகிற 8 -ந் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக் கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பது அளிப்பது தொடர்பாக மதுரை வட க்கு மாவட்ட தி.மு.க. சார் பில் ஆலோசனை கூட டம் நடந்தது.
மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திருமண விழா வில் கட்சி தொண்டர்களை பெருமளவில் பங்கேற்க வைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
- ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
வருகிற 7-ந் தேதி இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது.நிகழ்ச்சி யில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலி ருந்து விமானம் மூலமாக வருகிற 7-ந்தேதி காலை தூத்துக்குடி வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்து சேருகிறார். பின்னர் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மாலை இங்கிருந்து கார் மூலமாக நெல்லை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் தலை மையில், மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மு. க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டாலினை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரி முதல் மாவட்ட எல்லையான காவல்கிணறு வரை கொடி தோரணங்களும் வரவேற்பு பதாகைகளும் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.
- நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது.
- அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
தாராபுரம் :
தாராபுரம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா்.இதில், பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கூறுகையில், நகரில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அகற்ற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் கொண்டு செல்லும் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 46 தீா்மானங்கள் நிறைப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் பேசுகையில், நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ஊழியா்களின் வருகை கண்காணிக்கப்படும். சொத்து வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சேலத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் இன்று வந்தனர்.
- மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சேலம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான தருமபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா,
சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காணப்பட்டனர்.
பொதுவாகவே வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். தற்போது அதி களவில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதால் ஏற்காடு களைகட்டியுள்ளது. இங்குள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.
நாமக்கல்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாமக்கல் வந்தார். நாமக்கல் அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதலைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அவர் திடீர் ஆய்வு செய்தார். இதனையடுத்து நாமக்கல் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் புதிய பால் பண்ணை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல் கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆவின் செயல்பாடுகள் குறித்த நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து நாமக்கல் பஸ் நிலையத்தில் கியாசக் பார்லரை அவர் திறந்து வைத்தார். ஆண்டலூர் கேட்டில் உள்ள ஹை- டெக் பார்லரை ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்