என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233463"
- 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
- திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நிழற்குடையில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் பெயர் விலாசம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.
இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.
அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.
எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.
- இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 9-ந் தேதி ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகள் இன்றி செய்யப்படும். இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மேற்கொள்வதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ அல்லது கடின உழைப்பிற்கோ தடை ஏதும் இல்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை முறையினை ஏற்று பயன்பெற தகுதிவாய்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் அடையாளம் தெரியாத ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார்.
- அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார்.
பள்–ளி–பா–ளை–யம்:
பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் உள்ள வாய்க்–கா–லில் 45 வயது மதிக்–கத்–தக்க ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார். அதைப்–பார்த்த அந்த வழி–யாக வந்–த–வர்–கள் பள்–ளி–பா–ளை–யம் போலீஸ் நிலை–யத்–திற்கு தக–வல் தெரி–வித்–த–னர்.
சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்–பெக்–டர் செந்–தில்–கு–மார் அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார். வாய்க்–கா–லில் இறந்து கிடந்–த–வர் வெள்ளை வேட்டி கட்டி இருந்–தார். சிவப்பு நிற பெட்–ஷீட் போர்த்தி இருந்–தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரி–ய–வில்லை? இது குறித்து வழக்–குப்–ப–திவு செய்து போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.
பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
சேலம்:
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரும்பள்ளம் ஓடையில் ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு நெசவாளர் காலனி அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆண் பிணம் அழுகி போய் இருந்தது.
அவர் பச்சை கருப்பு புளு கலர் கட்டம் போட்ட முழு கை சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஆஞ்சநேயர் படம் வைத்த டாலர் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன தெரியவில்லை.
ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஏற்காடு மலையில் பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
- 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது செங்காடு கிராமம். இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்றும், 30 வயது மதிக்கதக்க இளைஞராக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
எலும்பு கூடாக கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து கிடந்தது யார்? அவர் தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவரா? எப்படி இறந்தார்? வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்