search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234004"

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சி.சி.டி.வி. கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
    • கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் தானு. இவரது மகன் சரவண முருகன் (வயது 61). இவர் நெல்லை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது சரவண முருகன் தியாகராஜநகர் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு மே மாதம் தானு இறந்துவிட்டார். இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாத்தான்கோவில்விளையில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார்.

    இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார். அப்போது வீட்டின் பின் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரது பேக்கில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவரது பர்சில் இருந்த 4,500 பணத்தையும், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் வீட்டில் இருந்த குத்துவிளக்கையும் எடுத்துச்சென்று விட்டனர்.

    குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பேக்கில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை பார்த்து சரவணமுருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சரவண முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 3 பேர் சரவண முருகன் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் மன்சூர் அலிகான் பணியாற்றி வருகிறார்.
    • கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலிகான் (வயது 45). இவர் தென்காசியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

    நகை-பணம் கொள்ளை

    இதனால் அவ்வப்போது மட்டும் முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார். சமீபகாலமாக வாரத்தில் ஒருநாள் முதலியார்பட்டிக்கு வந்து நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு அவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.7 லட்சம் பணம் மற்றும் 28 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    விசாரணை

    இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாய் சிறிது தூரம் அங்கும் இங்குமாக ஓடியது. அப்பகுதியில் உள்ள 2 தெருக்களில் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    சி.சி.டி.வி. ஆய்வு

    இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இப்பகுதியில் ஆட்டோ பேட்டரி, செல்போன் திருட்டு என சுமார் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
    • தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற காமாக்காள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • திருட்டு தொடர்பாக காமாக்காள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி காமாக்காள்(வயது 60). இவர்களது மருமகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    6 பவுன் திருட்டு

    இதனால் அவரை ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 7-ந்தேதி காமாக்காள் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக காமாக்காள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • விக்னேஷ் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
    • பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது40). இவர் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    பணம் மாயம்

    நேற்று வழக்கம் போல விக்கேஷ் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில இரவில் வியாபாரம் முடிந்து கணக்குகளை சரிபார்த்தனர்.

    அப்போது ரூ. 2¼ லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    துணிகர கொள்ளை

    அப்போது கடையில் பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    இது தொடர்பாக விக்னேஷ் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஊழியர்கள் இருக்கும் போதே வாலிபர் கல்லாவை திறந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலையை சேர்ந்தவர் முரளிகண்ணன் (35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 1.95 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.

    இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

    இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்தனர். இதற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்திக் அலி. இவரது வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்து தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ‘சிகரெட்‘ கேட்ட 2 பேர் கைவரிசை - மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சரக்கல்விளை, வலியாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் வேதக்கண். இவரது மனைவி சரசம் (வயது 67) இவர்கள் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சரசம் மட்டும் கடையில் இருந்த போது 2 மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சிகரெட் கேட்டார்கள். சரசம் சிகரெட் எடுத்து திரும்பும் போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அந்த வாலிபர்கள் பறித்தனர். அதனை எதிர்பாராத சரசம் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் பறித்த செயினில் இருந்த டாலர் கீழே விழுந்தது. இதனை அவசரத்தில் விட்டு சென்று விட்டார்கள். நகையின் மதிப்பு ரூ 1 லட்சம் 30 ஆயிரம் ஆகும். சரசத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.

    அவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். உடனே இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சரசம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.

    • 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    முட்டம் தூய குழந்தைஏசு தெருவைச் சேர்ந்தவர் ஆண்றோ சகாயராஜ்.

    இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வந்தார். வீட்டில் பவுலின் மேரியும் அவரது தாயார் திரேசம்மாளும் வசித்து வந்தனர்.

    கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மங்கி குல்லா மற்றும் முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதன் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வட மாநில வாலிபர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

    குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் வழக்கு கிடப்பில் கிடக்கிறது.கொலை நடந்து 14 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×