என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆய்வுக்கூட்டம்"
- பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.
- தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் அனைத்தையும் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை மின்வாரியத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அயல் தாவரங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற 4 யானைகள் இறப்பு விபத்து போன்ற விபத்துகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வெடி விபத்துகள், பட்டாசு கிடங்கு விபத்துகள், கல்குவாரி விபத்துகள் போன்றவை நடைபெறாத வண்ணம் உரிமம் வழங்குதல், உரிமம் மறுபதிவு செய்தல், ஆய்வு நடவடிக்கைகள், போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அலுவலர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும், உரிய பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதற்குமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடை காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, 251 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அந்தந்த பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை தகுதியான விவாசயிகளுக்கு கால தாமதமின்றி வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், தருமபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சாந்தி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- துறையூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்
- ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
துறையூர்:
தமிழக காவல்துறையில் சம்பந்தப்பட்ட காவல் துறை சரகத் துணைத் தலைவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வட்ட காவல் நிலையத்தை ஆய்வு செய்வது வழக்கம். இதனை ஒட்டி திருச்சி சரக துணை தலைவர் சரவண சுந்தர் துறையூர் வட்ட காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதியறை, கணினி அறை, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், துறையூர் வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரகாந்த், முத்துசாமி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.
- மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
- பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலையொட்டி பெறப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2023ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023ம் தேதியினை தகுதி நாளாகக்கொண்டு நவம்பர் 9-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை 1880 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடந்தது.
இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் குறித்து மொத்தம் 75,824 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.
- கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் காஞ்சி கூட்ரோடு ஆஷா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கே ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்டத் தலைவர் கே.ஆர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன் , திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கிய 10 திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர்சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விதைச்சான்றுதுறை, விதை ஆய்வுத்துறை, கால்நடை பராமரிப்புதுறை, பட்டுவளர்ச்சித் துறை மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களின் இலக்கு சாதனை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தினை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முறையாக செயல்படுத்திட வேண்டும். இத்திட்டதினை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதால் இதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் போதுமான விதை மற்றும் உரம் இருப்பு வைத்திடவும், வடகிழக்கு பருவ மழையினால் பயிர் சேதம் ஆகாமல் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை அறிவுறுத்திடவும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இலக்கு சாதனை அடைந்திடும் வகையில் பணியாற்றிடவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
- சிவகங்கையில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை குறித்து மாதந்தோறும் சம்பந்தப்பட்ட துறைகள் முதன்மை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.
இதில் ஆக்கி ரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், 64 கோவில்கள் பட்டியலினை சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி நிரந்தர தீர்வு காணவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்க ளின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்ளிட்ட மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும், பதிய ப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அலுவலர்ளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா, (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இந்த ஆய்வின் போது தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன், மின்வாரியம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவது குறித்து சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி, திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் அறிவுரையின்படி சின்ன தொண்டியில் இருந்து தொண்டி கடற்கரைக்கு விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன், மின்வாரியம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
- கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசிய போது :-
அனைத்து கிராமங்களிலும் கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஊக்குநர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் அகிலா, ஒன்றிய ஒருங்கிணப்பாளர் மணிவேல், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். இதே போல ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- வேளாண்துறை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது
கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பேசியபோது, சம்மந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலக்கை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைவர். அந்த வகையில் அலுவலர்களின் பணி இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. வேளாண் பொறியியல் துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டப் பணிகள்
மற்றும் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் ஆகியவைகள் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் 2021-22-ம் கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகை விவரங்கள், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் குறித்த திட்டங்கள், சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், தமிழக அரசு சிறுபான்மையின சமூக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பின்னர் பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.
முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கங்களின் பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து பயனாளிகளிடம் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் சிறுபான்மையின நலத்திட்டங்களால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த விவரத்தை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேல் உட்பட மாவட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க கவுரவச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்