search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • நவீன தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது.
    • புதிய வாய்ப்புகள், புதிய திறன் சூழல்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் கருத்தரங்கில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவைத் திறன் மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:  தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது. கல்வி முதல் சுகாதாரம் வரை, வேளாண்மை முதல் நிதி வரை, ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தால் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளும், புதிய திறன் சூழல்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும்.

    அவர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்களின் திறன்களை கட்டமைப்பது அவசியம். அடுத்த தலைமுறை பணியாளர்களை உருவாக்குவதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். பயிற்சி நிறுவனங்கள், திறன் சூழலியலை வலுப்படுத்த எதிர்கால உத்தியுடன் தங்களை மறுவடிவமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்தியா முழு திறனை எட்டுவதற்கு போதை பொருள் தடையாக உள்ளது.
    • அதிகமானோர் போதையின் பிடியில் உள்ளனர்.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

    உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று. அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இணைய முடியவில்லை.

    அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளனர். இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம். அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டும்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டும். தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும்.

    ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர், போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
    • தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது.

    கலிஃபோர்னியா:

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது கடைசி நிகழ்ச்சியாக தெற்கு கலிஃபோர்னியா நகரின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதார வரிசையில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தால், 2047-ல் இந்தியா 35 முதல் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

    இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது இந்தியா விரைவில் வளர்ந்த நாடாகும். இந்தியா இன்று வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது. 


    மக்கள் தொகையின் பங்கும், ஆர்வமுள்ள இளைஞர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பை வழங்கும் கூடுதல் ஆதாயமாக உள்ளன. தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது. 2030-க்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய நாங்கள் விரும்புகிறோம்.

    உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தால், கோடிக்கணக்கான இந்திய கைவினை கலைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார, ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா விருப்பம்.
    • இந்தியா வளர்ந்த நாடாக, நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    லாஸ் ஏஞ்செல்ஸ்:

    அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற் கொண்டுள்ள மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவும், அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

    குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து இந்தியா செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா கலந்து கொண்டது. விநியோக சங்கிலி வரி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய நான்கு துறை வெளிப்பாடுகளில் திருப்தி தெரிவித்து இந்தியா அவற்றில் இணைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
    • தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும்.

    மேலக்கோட்டையூர்: 

    செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி  நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, எனவே பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 


    மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும்.அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.

    சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம்.

    2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

    2028 ஆண்டு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும்.

    2014-2015 ஆண்டில் 42,000 என்ற எண்ணிக்கையில் இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேச முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும்.
    • இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்.

    விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 


    அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். 2047-இல் நூற்றாண்டு சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.

    தற்சார்பு இந்தியாவிற்காக முதலில் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சொந்தக் கப்பலை நிறுவியவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார். அவரது பாதையைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் அண்மையில் கப்பற்படை பணியில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப் பூசிகளும் தற்சார்பு இந்தியா முன் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மக்கள் எளிதில் அணுகும் வகையில் சுகாதார சேவைகளை வழங்க வேண்டும்.
    • நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்த முயற்சி.

    சில்சார்:

    அசாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மையத்தை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் சுகாதாரத் திட்ட சேவைகளை மக்கள் எளிதில் பெறுவதற்கும், ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2014-ல், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கை 25-ஆக இருந்த நிலையில் தற்போது 75-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் எளிதில் அணுகக் கூடிய தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் மத்திய அரசின் உறுதியுடன் உள்ளது.

    மருத்துவ சேவைகளை மேம்படுத்த, நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியின் கீழ் 16 புதிய மையங்கள் அமைக்கப் படுகின்றன. அதில் சில்சார் மையமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரத் திட்ட சேவைகளின் பயன்களை மக்கள் பெறுவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை.
    • சுயசார்பு தொழில் முனைவோராக பெண்கள மாறுவதற்கு வாய்ப்பு.

    ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:

    கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளது. பெண்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளது.   


    மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எனது அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புடனும் அவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
    • ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழில் மேம்பாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய மத்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற தொழில்மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்தியமந்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி, செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் தீப்தி சுப்பிரமணியம் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதியும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில் சிறந்த ஏற்றுமதி நகரம் என்ற விருதினையும் பெற்றுள்ளது. திருப்பூருக்கு மேலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால் வாழ்வாதார நன்மைகள் கிடைக்கும்.

    அதன்படி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறு சுழற்சி மூலம் மீண்டும் சுத்திகரிப்பு செய்து திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில் எடுத்து கொண்டு, குறைந்த கட்டணத்தை வசூல் செய்து மறுசுழற்சி முறையை செயல்படுத்தினால் இங்குள்ள தொழில் துறையினருக்கு உற்பத்தி செலவினங்கள் குறையும். மேலும் கடைசி நிலை கழிவுநீரை கடலில் சேர்க்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினால் திருப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். குழாய் மூலம் எரிவாயு திட்டத்தை திருப்பூரில் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். திருப்பூரில் பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தனி பாதுகாப்பு குடியிருப்பு வசதியை மத்திய அரசு மேம்படுத்தி தர வேண்டும். திருப்பூர் ரெயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பயணிகளுக்கு அதிநவீன வசதிகளை உருவாக்கித்தந்தால், வெளிமாநில வர்த்தகர்களின் வருகை அதிகரிக்கும். அதேபோல் சரக்கு பெட்டக வசதியையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    அத்தியாவசிய பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்கு போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும். முறைகேடாக பஞ்சு நூலை பதுக்கி வைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு மின்சார கட்டண மானிய சலுகை வழங்க வேண்டும். திருப்பூருக்கு வரும் வௌிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சரக்குகளை நகர பகுதியில் இருந்து துறைமுகங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல புதிய ரிங் ரோடுகள் திருப்பூரில் அமைக்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு மாநிலங்கள் கூட்டுத் தீர்வு காண வேண்டும்.
    • ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும்.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து , தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி. நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 


    தென்னிந்தியா மீது பிரதமர் மோடிக்கு சிறப்பு அக்கரை உள்ளது, அதனால்தான் முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென் மண்டல கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும். பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

    நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.  அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சி வருகிறது.

    ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்கு. இதற்காக தென் மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளின் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசு திட்டங்களின் பலன்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும். கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது.
    • மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

    டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்.

    இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.

    இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்.

    முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலகளவில் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.
    • மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

    பாலி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பருவநிலை மாற்றத்திற்கான மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார். நிறைவு நாளில் அவர் பேசியதாவது:

    பருவநிலை மாற்றத்தை தடுக்க, உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். நிலையான மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

    பருவ நிலை மாற்றம் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறிப்பாக, வளரும் நாடுகளில் உள்ள மக்களை பாதிக்கிறது. இயற்கை வளங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பு செய்தவர்கள் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×