search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல் விளக்கம்"

    • குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ், பூதனஅள்ளி கிராமத்தில் கால்நடைகளில் குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து டாக்டர் பொற்செழியன் மற்றும் உதவி கால்நடை மருத்துவரால் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.மேலும் அவர் இளம் கன்றுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு பிறந்த 6 மாதத்திற்கு பிறகு, 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.கால்நடைகள் வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் ஆகிய நடைமுறைகளை எடுத்துரைத்தார்.

    கால்நடைகளில் உண்ணி, பேன், தள்ளு பூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகள் நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    செயல் விளக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு லிவர் டானிக், வைட்டமின் சி டானிக், பூச்சி மருந்துகள் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

    ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    செயல்விளக்கத்திற்கு அட்மா திட்ட பேரிடர் தொழில்நுட்ப அலுவலர் சிவசங்கரி முன்னேற்பாடுகள் செய்திருந்தார்.

    இதில் பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் ஊராட்சியில், மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மாணவி கே.பரிமளா விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பற்றியும், அதன் பயன்பாடு மற்றும் செயல்முறை பற்றியும் விளக்கம் அளித்தார். இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.
    • கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் விநியோகஸ்தர் செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். செல்வி கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.

    எரிவாயுவை கவனமாக கையாளுவது, எரிவாயு பாதுகாப்பு சிக்கனம் குறித்து செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் அய்யப்பன் விளக்கி பேசினார். தொடர்ந்து கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த கேள்விகளுக்கு சரியான முறையில் விடை அளித்த மாணவிகளுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேல் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். இந்த முகாமானது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர்(எல்.பி.ஜி.) பிரகாஷ் மீனா மற்றும் துணை மேலாளர் (எல்.பி.ஜி) அபிஜித் பி. விஜய் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.

    • செயல் விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
    • நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேளாண் மாணவர்கள் நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இந்தசெயல்விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    மேலும் இக்கூட்டத்தில் நிலக்கடலை ரிச் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலக்கடலை ரிச் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ என்னும் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். இதனை நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும். இதனை தெளிப்பதன் மூலம் பயிர்களில் பூ உதிர்தலை கட்டுப்படுத்தலாம். மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேளாண் வணிக வளர்ச்சி இயக்குநர் சிவசுப்ரமணியன்,வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிர் பாதுகாப்பு வல்லுநர் ஜானகி ராணி ஆகியோரின் முன்னிலையில் வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு கன்றுகளை தேர்வு செய்தல் குறித்தும், ஈட்டி இலைக்கன்றுகளின் முக்கியத்துவம், பயன்கள், கன்றுகளை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினர். கன்றுகளை நேர்த்தி செய்யும் பொழுது நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாடல் நோய் தாக்கத்தைக் குறைக்கவும் உரிய கட்டுப்பாட்டு முறைகளில் பெசிலியோமைசிஸ் லிலாசினஸ் என்னும் பூஞ்சையை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் நேந்திரன் ரக வாழையை அதிகம் தாக்கும் தண்டு கூன் வண்டுகளை கட்டுபடுத்தவும் உகந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்தும், வாழை மட்டைகளை பயன்படுத்தி பொறி அமைத்து தண்டு கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    • பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.
    • ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஏ. செட்டிபள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கொர குருக்கி கிராமத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.

    இந்த எந்திரம் ராகி, உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

    மேற்படி விவசாயிகள் வாடகை தொகையினை உழவன் செயலி மூலமாகவோ, அல்லது ஒசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் நேரிடையாகவோ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செய்வதால் தானியங்கள் முழுமையாகவும், சேதாரம் இல்லாமல் அறுவடை செய்யப்படுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே, ஒசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் வட்டார விவசாயிகள் ராகி மற்றும் உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக, வேளாண்மை பொறியியல் துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதுகுறித்த செயல் விளக்கத்தில் சேலம் மண்டல கண்காணிப்பு பொறியாளர் மாது மற்றும் செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சங்கீதா, சூளகிரி துணை வேளாண் அலுவலர் ரவி கிஷோர், துணை தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.
    • பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகளின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் வெங்காயத்தில் வேர் அழுகல் நோயை கட்டுப்படு த்துவதற்காக விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.

    இதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்திருந்த அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், அண்ணா மடுவு, சங்கரா பாளையம், பர்கூர் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து திருந்த விவசாயிகள் மாணவிகள் கூறும் செயல்விளக்கத்தை கேட்டுஅதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    இதில் கல்லூரி மாணவிகள் ராகவி, ராய்ஸ் டெல்பின் ராணி, ரேணுகா, ரியானா பேகம், சந்தியா, சங்கவி, சசிகலா, சாலினி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் கார்த்திகேயன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்
    • கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் 2022-23 ஆண்டில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு(அரிசி) செயல் விளக்கத்திடல் ஆனது திருந்திய நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்தல் பற்றியும், உயிர் உரங்கள் நுண்ணூட்டம் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலையின் பச்சைய தன்மை பொறுத்து யூரியா உரத்தினை பயன்படுத்துவதால் அதிகளவு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது. நுண்ணூட்டக் கலவை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி சீராக்கப்பட்டு தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிய முறையில் எடுத்துச் செல்லவும் வழி வகை செய்கின்றன என உணவு மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகர் சர்புதீன் விவசாயிகள் மத்தியில் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்டக் கலவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மத்தியில் கூறினார்கள். விராலிமலை வேளாண்மை விரிவாக்கம் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.


    • வேளாண் துறை சார்பில் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராமத்தில் நெல் பயிரில் பச்சை வண்ண இலை அட்டை குறித்த செயல் விளக்கத்தை, வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை பூச்சி குறித்த பயன்பாடு செயல் விளக்கம் அளித்தனர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர் நக்கீரன் வழிகாட்டுதல் படியும், கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குனர் அன்பரசன், மற்றும் வேளாண் உதவி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையிலும், விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை உபயோகிக்கும் முறையை பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடியின் முக்கியத்தை பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


    • நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
    • மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி வட்டாரத்திற்கு உட்பட்ட அதகபாடி மற்றும் பழைய தருமபுரி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்க ப்பட்டது.

    இந்த செயல் விளக்கம் குறித்து கோரமண்டல் பிரை வேட் லிமிடெட் கம்பெனியை சேர்ந்த ஸ்ரீகாந்த் நேனோ யூரியாவை பயிர்களுக்கு எந்த விகிதத்தில் தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்னையில் எந்திரங்களின் அவசியம் அதன் பயன்பாடுகள் மற்றும் தென்னை வளர்ச்சி திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
    • தென்னையில் தற்போது நிலவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் பற்றி செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது தென்னை ஆராய்ச்சி நிலையம். இங்கு உலக தென்னை நாளை முன்னிட்டு நேரடி பயிற்சி நடைபெற்றது.

    விழாவினை முனைவர் அருண்குமார், உதவி பேராசிரியர் (தோட்ட க்கலை) வரவேற்று வளர்ச்சி தாங்கி வளர கூடிய தென்னை நெட்டை ரகங்கள், அதனின் தொடர் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோ சனைகள் மற்றும் தென்னை சார்ந்த மதிப்பு கூட்டுதல், உற்பத்தி பெருக்கம் மற்றும் தென்னை ஒருங்கிணைந்த பண்ணையும் எந்திரமாக்கல், மதிப்பு கூட்டுதல் மற்றும் உலக தென்னை நாள் விழா கொண்டாடுவது நோக்கம் மற்றும் அவசியம் குறித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருமதி மாலதி வேளாண்மையை உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை மற்றும் திருமதி அப்சரா வேளாண் அலுவலர் பட்டுக்கோட்டை சிறப்புரையாற்றினார்கள். உரையில் தென்னையில் இயந்திரங்களின் அவசியம் அதன் பயன்பாடுகள் மற்றும் தென்னை வளர்ச்சி திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

    ராமராஸ் ஊராட்சி மன்ற தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் செயல் விளக்கங்கள் முக்கியமாக கோடையில் தென்னையில் தீவிரமாக பரவும் தஞ்சாவூர் வாடல் நோய் காரணியை கட்டுப்படுத்த வேர் மூலம் ஹெக்சகோனசோல் பூஞ்சான கொல்லியை செலுத்துதல் வட்ட பாத்தியில் ஒரு சத போட்டோ கலவை தயாரித்து மண்ணில் ஊற்றுதல், பேசில்லஸ் எதிர் உயிர் கலவையை தொழு உரத்துடன் இடுதல் மழைக்காலத்தில் பரவும் குருத்தளழுகள் நோய் காரணியை கட்டுப்படுத்த 0.3 சதாம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை குருத்தில் ஊற்றுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

    தென்னை விவசாயி களின் கேள்வி பதில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞா னிகள் கருத்து பரிமாற்றம் போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 40 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியினை திரு வள்ளிநாயகம் (இளநிலை ஆராய்ச்சியாளர்) ஏற்பாடு களை செய்து ஒருங்கிணைத்து செயல்பட்டார்.

    • கள்ளக்குறிச்சி அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

     கள்ளக்குறிச்சி:

    உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்(த.க) அன்பழகன் பயிர் சாகுபடியில் அதிகப்படியான இராசயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து,தேவையான அளவு பயிர்களுக்கு உரமிட்டு மண்வளத்தை பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.இப்போ உர நிறுவன பிரதிநிதி அப்துல்ரகுமான் கூறுகையில் விவசாயிகள் தழைச்சத்து உரமான குருணை யூரியாவுக்கு மாற்றாக அனைத்து பயிர்களுக்கும் மேலுரமாக இப்கோ நானோ யூரியாவை ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் உரச்செலவை மிச்சப்படுத்திடவும் மண்வளத்தை பாதுகாக்கலாம் என கூறினார்.

    மேலும் நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயிகள் இரசாயன உரங்களை இடுவதை குறைத்து தக்கைப்பூண்டு, சணப்பை, கொளஞ்சி போன்ற பசுந்தாள் பயிர்களை விதைத்து பூக்கும் பருவத்தில் வயலில் மடக்கி உழுவதுடன், நன்கு மக்கிய தொழுவுரம் மற்றும் புண்ணாக்கு வகைகளையும் உரங்களாக பயன்படுத்தும்போது பயிர்களுக்கு பூச்சிநோய் தாக்குதல் இன்றி அதிக மகசூல் பெற்றிடவும்,நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திடவும் விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அப்போது கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×