search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
    • போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

    நெல்லை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பஸ்சில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது.

    அதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.

    பஸ் புறப்பட்டு சென்ற போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை அவதூறாக பேசி பறை இசை கருவிக்கு பஸ்சில் இடமில்லை எனக்கூறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக நெல்லை போக்குவரத்து கழக மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெல்லை போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

    • சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.
    • பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.

    இவர் ஏற்கனவே சேலம் மாநகரில் சார்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் பிரேமா வருகிற 30-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். குறிப்பாக அவர் பணியாற்றி வரும் இந்த துறை பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல், உணவுப் பொருட்களின் விலையை மேலாண்மை செய்தல், அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் போதுமான அளவு உணவுப் பொருட்கள் வழங்குதல், எளிதில் மக்கள் அணுகிப் பெறக்கூடிய வகையில் நியாயவிலைக் கடைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தி சார்பதிவாளர் பிரேமா மீது வணிக பொருளாதார குற்ற புலனாய்வுதுறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரேமா இன்னும் 5 நாளில் ஓய்வு பெறும் நிலையில், அவரை கூட்டுறவுத்துறை பதிவாளர் ரவிக்குமார், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பாலசுப்பிரமணி மற்றும் திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளாவை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பெற்றோர்களை அழைத்து பள்ளியில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். 

    • நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
    • போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் 'வீடு ஒத்திக்கு விடப்படும்' என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை.

    எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா குத்தகை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    • ஸ்ரீரெங்கநாததுரை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீரெங்கநாததுரை. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவினுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் நெல்லை ஆவினில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் ஸ்ரீரெங்கநாததுரையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
    • பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசாரே ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கணக்கர் தெருவில் ஒட்டல் உள்ளது. இங்கு இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் 5 போலீசார் பணி முடிந்து சாப்பிட சென்றனர்.

    அப்போது அவர்கள் பரோட்டாவுக்கு "பாயா" கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த ஊழியர்களை அவர்கள் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    மேலும் ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை வழி விட மறுத்து தாக்கினர். அப்போது போலீசார் அனைவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    போலீசார் ஓட்டலில் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏட்டு கோட்ட முத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசாரே ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • கூடுதல் கலெக்டர் உத்தரவு
    • வீடுகள் கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டமடவு ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள திடீரென சென்றார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டதும் சில வீடுகளுக்கு கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கட்டமடுவு ஊராட்சி செயலாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வாசு உள்ளிட்டவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து பணிமனையில் சம்பவத்தன்று போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.

    அவர்கள் சண்டை யிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மோதலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகி யுவராஜ், ஓட்டுனர் ராஜா உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். 

    • குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அசோக். இவர் கடந்த வாரம் போலீஸ்காரர்க்ள வல்லரசு, மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் பாடிய நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த கும்பல் அரிய வகையான உராங்குட்டான் குரங்கை வெளிநாட்டுக்கு கடத்த சென்னை விமான நிலையம் நோக்கி செல்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பலுடன் நடத்திய பேச்சுவார்தையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட போலீசார் 4 பேரும் கடத்தல் கும்பலை அரிய வகை குரங்குடன் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாகன சோதனையின் போது உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை பெற்று கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட 4 போலீசாரும் அவர்களை அங்கிருந்து தப்பி செல்ல அனுமதித்து இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து குரங்கு கடத்தல் கும்பலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு,மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
    • ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது .

    குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×