என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம்"
- 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
- ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜபெருமானின் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 26-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவா லங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 33க்கு மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடைபெறும்.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.
பின்னர் 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 28-ந் தேதி காலை, 9 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், செயல் அலுவலர் ரமணி, மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
- சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
- அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.
இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.
பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்.
- கார்த்திகை மாத கடைசி ஞாயிறு பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
திருமலை:
திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் 7-வது மைல் அருகில் அலிபிரி நடைபாதை ஓரம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று காலை சுவாதி நட்சத்திரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலமூர்த்திக்கு காலை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.
அதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
காங்கயம்:
முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் தாமோதர பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தாமோதர பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.
விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
- திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடந்தது
வந்தவாசி:-
வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 3 தின பவித்ரோத்சவம் தொடங்கியது. திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.
மேலும் அங்குரார்ப்பணம், முதற்கால யாக பூஜை, கந்த பவித்ரஸமர்பணம், பூர்ணாஹூதி நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வாய்ந்த பூஜையை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் உள்ளது
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஹரித்ரா விநாய கருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வழிபட்டால் கடன் தொல்லை களை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள் .
- கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் நடந்தது.
- கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திர வியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் உள்ளிட்ட 7 வகையான அருட்பிர சாதங்கள் வழங்கப்பட்டன.
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
- 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வ தவர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்கு மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் பர்வதவர்த்தினி அம்மனு க்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சா மிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடி யார்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல், எள்ளு, உளுந்து, பஞ்சா மிர்தம், சாம்பார்சாதம் உள்ளிட்ட 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்