search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238902"

    • சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே சிவ ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது.

    இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிவ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை-அன்னதானம் செய்தனர்.
    • பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டியும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டியும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில் இந்த வழிபாடு நடந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    இதில் வேலாணூரணி ஊராட்சி மன்றத்தலைவர் அங்காள ஈஸ்வரி மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை செயலாளர்கள், அணி செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

    பெரியகுளம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய வீரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சி பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் குமரகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம் ஆகியோர் ஏற்பாட் டில் வழக்க றுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஏற்பாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணி வண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், பகுதி செயலாளர் என். பி. ஸ்டாலின், பாலாஜி, கோல்ட் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநல்லி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அம்மனுக்கு மலர் அலங்காரம்
    • ஏராளமானோர் தரிசனம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவி லில் தமிழ் புத்தாண்டை முன் னிட்டு நேற்று சிறப்பு பூஜை கள் நடந்தது.

    காலையில் அம்மனுக்கு நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற் றினர்.

    இரவு அம்மன் மலர்க ளால் அலங்காரம் செய்யப் பட்டு வீதியுலா வந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைத்து செல்வ
    • பூஜை அறையில் காய், கனிகள் ,தானியங்கள், புத்தாடைகள், பூக்களை கொண்டு அலங்கரித்து வழிபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    மலையாள வருட பிறப்பான விசு பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், சனிக்கிழமை நடைபெற்றன.

    மலையாள வருடப் பிறப்பை விசு பண்டியாக உலகம் எங்கும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரியில் வாழும் மலையாளிகள், தங்கள் வீடுகளில், பூஜை அறையில் காய், கனிகள் ,தானியங்கள், புத்தாடைகள், கொற்றைப் பூக்களை கொண்டு அலங்கரித்து சுவாமியை வழிபட்டனர். சிறுவர்கள், பெரியவர்களை வணங்கி வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றனர்.

    • அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    • ஜெபதவக்கோளத்தில் ரிஷி வந்தர் கா சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
    • அனைத்து காரியங்களும் வெற்றி பெற சிறப்பு மகா சங்கல்பம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நலம் பெற தருமபுரி அறநிலையத்துறையின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகர பகுதியில் கோட்டை வர மகாலட்சுமி பரவாசுதேவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயர் சாமிக்கு தமிழ் வருட பிறப்பை ஒட்டி 14-ந்தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அர்ச்சகர் வெங்கட கிருஷ்ண பட்டாச்சாரியார் நடத்தும் நன்மை தரும் ராம நாமம் ஜெபதவக்கோளத்தில் ரிஷி வந்தர் கா சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து நவகிரகங்கள் தோஷம் நீங்கவும், கல்வியில் சிறந்து தேர்வில் வெற்றி பெறவும், சகல விதமான தடைகளும் நீங்கவும், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும், நாம் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் பெறவும், கார்ய வெற்றி போன்ற பதினாறு செல்வங்களும் கிடைக்க ஆஞ்சநேயரின் 1008 நாமங்களை வாழ்வில் வசந்தம் தரும் வாசனை புஷ்பங்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது.

    அது சமயம் பக்த கோடிகள் சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொண்டு பிறக்க இருக்கும் இந்த தமிழ் வருட முதல் நாளில் செய்யவிருக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற சிறப்பு மகா சங்கல்பம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நலம் பெற தருமபுரி அறநிலையத்துறையின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • கல்யாண முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பூஜையில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.

    • ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பூஜையில் விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    ×