search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242426"

    • பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
    • மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பள்ளிமடம் கிராமம். இந்த கிராமத்திற்கு வெளியே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் பள்ளி மடத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 49), பச்சேரியை சேர்ந்த முத்துகருப்பன் (45), நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரை சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    அதே கடையில் புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் பணிபுரிகின்றனர். திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திரு விழாக்கள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.

    நேற்றும் ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இரவில் பணி முடிந்ததும் கடை ஊழியர்கள் சென்று விட்ட நிலையில், விற்பனையாளர்கள் வசூல் பணத்தை எண்ணி வைத்து விட்டு கடையை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர்.

    முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், கடையில் உள்ள வசூல் பணத்தை தந்து விடுமாறு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், தங்களிடமிருந்த வாளால் விற்பனையாளர் பூமிநாதனை வெட்டினர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட மற்ற விற்பனையாளர்கள் கடையை மூட முயன்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    காயம் அடைந்த பூமிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் விசாரணையை துரிதப்படுத்த உத்தர விட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன. அதில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

    இருந்தபோதிலும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே திருச்சுழி தாலுகாவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் காவலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்க டேஸ்வரன். வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையே அனிஷா வின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு விசாரணை செய்து வருகிறார்.

    • எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடையில் பணம் கொள்ளை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.

    புகார்

    இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
    • மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடி அரசம்பாளையம் பாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். மில் அதிபரான இவரது வீட்டிற்குள் கடந்த 9-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த பிரகாஷின் பெற்றோரை கட்டி போட்டுவிட்டு ரூ.2 லட்சம் பணம், 20 பவுன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரடி விசாரணை நடத்தினார். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களின் தேடுதல் வேட்டையில் வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

    இதனால் தலைமறைவாக உள்ள அவரை பிடித்தால் தான் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
    • கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் பகுதியில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கல்லூரிக்கு அய்ய ந்தோப்பு பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரும், அம்மணம்பாக்கம் ஏழுமலை என்பவரும் காவலாளியாக இருந்து ள்ளனர்.

    இந்நிலையில் கணினி அறிவியல் துறை துணைத்தலைவர் பிரசன்னா, விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கணினி அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த கணினி பொருட்கள் மற்றும் இரண்டு சிஸ்டம் பேட்டரி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோசணை காவல்து றையினர் அரசு கல்லூரி அறையின் பூட்டை உடைத்து கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
    • வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி (வயது 56).

    இவர் தற்பொழுது குலசேகரபட்டினம் கோவி லுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். நேற்று மாலை வீட்டிலிருந்து சாந்தி பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்டுவதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி அவரது மகன் முகேஷ் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேல் கூரை வழியாக ஏறி குதித்து தப்பி ஓடினார்.

    இதையடுத்து அவரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவை உடைத்து அதிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்று இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீ சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது .

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன்,மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியுள்ளனர்.
    • கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம்பகுதியில் 5 மாதங்களாக வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலை ஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவரை குறிவைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை நடைபெற்றது.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்பி. முருகவேல், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை எஸ்ஐ. வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் வேட்டை க்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொ ண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில்முன்னுக்கு பின் பேசி உள்ளனர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரித்ததில் வேதாரண்யம் பகுதிவங்கிகளில் பணம் எடுத்து வந்தவர்களிடம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.மேலும் வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குண்டு கார்த்திக் (வயது 33), அவரது மனைவி காயத்திரி(32), கார்த்திக் மாமனார்கணேசன்(60) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து்நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டனர்.

    காயத்திரி திருவாரூரில் மகளிர் சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • கடையின் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த அரிசி மற்றும் பணத்ைத கொள்ளையடித்து சென்றார்.
    • அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ரஜேஷ் (வயத 36). இவர் அந்த பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார்.

    அப்போது கடையில் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த 5 கிலோ அரிசி மூட்டை 6, 1 கிலோ அரிசி மூட்டை 7 என ரூ.2,345 மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஜெபஸ்டின் ராஜேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.  

    ×