என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைகளுக்கு அபராதம்"
- 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
- எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது
ஆம்பூர்:
ஆம்பூரில் சாலையோர கடைகள் மற்றும் சில ஓட்டல்களில் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக உணவு துறை அதிகாரிக ளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் ஆம்பூர் நகராட்சி பகுதியில் உள்ள உமர் ரோட்டில் பானிபூரி கடை, போண்டா கடை மற்றும் தள்ளுவண்டிசிக்கன், மட்டன் சூப் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 3 தள்ளு வண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற எச்சரித்து நோட்டீஸ் வழங் கப்பட்டது.
மேலும் 2 கடைகளில் தமிழக அரசு தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு தள்ளு வண்டி கடையில் ஒருமுறை பயன்படுத்திய எண் ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சுமார் 3 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
தள்ளுவண்டி கடைக்காரர்கள் உணவுப் பொருளில் வண் ணம் சேர்க்காமல், வாழை இலையை பயன்படுத்துவது, சில் வர் பிளேட்டில் உணவு தருவது, பஜ்ஜி போன்றவற்றை கண் ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
ஊட்டி,
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேருராட்சியில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள், வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார அலுவலர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5500 அபராதம் விதிக்கபட்டது.
- பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
கோபால்பட்டியில் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்தல், ஊசி செலுத்துதல் போன்றவை கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமல் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
- உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.
கடலூர்:
சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி:-
சிதம்பரம் நகரில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் நானும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருண்மொழி , ரவிச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் உணவு நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.அப்போது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.
- திடீரென ஆய்வு செய்தனர்
- ரூ.5 ஆயிரம் வசூல்
வேலூர்:
காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் இன்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்