என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 251063"
- தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
- ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் என்கிற ரெட் (வயது 23). இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23) விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்ராஜ் (28) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாக விரிஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ராம்குமார், ரகுவரன், சரண்ராஜ் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார்,இவர் வீட்டுக்கு திரும்பும்போது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்..
- 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்..
கள்ளக்குறிச்சி:
நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் தோட்டபாடி வனகாப்பு சாலையில் செல்லும் பொழுது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் 4 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்
. அப்பொது நயினார்பாளையம் செல்லும் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் ,பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம், அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார் (வயது 21), சின்னசேலம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா (வயது 20), சூளாங்குறிச்சி காந்திநகர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்பெல்லா (வயது 19) என்பதும் தெரியவந்தது. பின்னர் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற மற்றொரு இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வழிப்பறியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
- திரு.பட்டினம் பட்டினச்சேரி ரயில் பாதை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திரு. பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
- அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்ததுஇ.தற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆறுமுகம் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு ஆடு ேதாட்டத்தை விட்டு வழி தவறி வெளியே சென்றது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற 3 வாலிபர்கள் ஆட்டை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆட்டை திருடிய ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த மதன் பிரகாஷ் (19), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அஜய்குமார் (19), காளிங்கராயர் நகரை சேர்ந்த ரமணி (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ஆட்டை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ரோந்து பணியின்போது சிக்கினர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி களில் சட்ட விரோத செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தடுக்கும் பணியில் அரக்கோ ணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர் கள் நேற்று மோசூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செய்யூர் கல்குவாரி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசா ரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 23), செய்யூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது. தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
அதேபோன்று தக்கோலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தக்கோலம், அனந்தாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அனந்தாபுரம் ஆற்று பாலம் அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (22) என்பதும்.
கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் சேரம்பாடி அடுத்த செப்பந்தோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் எருமாடு பஜார் பகுதியை சேர்ந்த முகமது நிசார் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சேரம்பாடி எலியாஸ் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த முருகேசன் (35), எருமாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்ணாத்தி வயல் பகுதியை சேர்ந்த பிரேம நாதன் (32) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
- ஜெயந்தி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்
- போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கோவை,
கோவை கணபதி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி ஜெயந்தி (வயது41). இவர் ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஜெயந்தி நிறுவன வரவேற்பு அறையில் தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பின் வந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெயந்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் செல்போனை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார்(23), வால்பாறையை சேர்ந்த வினோத் (27), ராஜஸ்தானை சேர்ந்த சந்த்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (45). கட்டிட கான்டிராக்டர்.
இந்நிலையில் மகேந்திரன் பூசாரி தோட்டத்தில் அவர் வேலை செய்யும் புதிய கட்டிடத்திற்கு அருகில் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான டிரிலிங் மிஷின், மர கட்டிங் மிஷின், இரும்பு கட்டிங் மிஷின், கிரேன் மிஷின் ஆகியவை வைத்திருந்தார்.
சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து மகேந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த யுவராஜ் (22), பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்த பாஸ்கர் (25), மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த வசந்த் (26) ஆகியோர் திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
- 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.
கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் உள்ள சுங்க சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
ரூ.96 ஆயிரம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்திவந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து வேலூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
- கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
- இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) , சாமுண்டி (27) மற்றும் கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய 3 பேர் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தால் பிரபலமாகி விடலாம் என்று அரசுக்கு அவப்பெயரையும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள திட்டமிட்டதாக தெரியவந்தது
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- 1000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் பறித்து சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார்.
- 3 பேரை கைது செய்து விசாரணை செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
தருமபுரி,
அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக சேலத்தில் இருந்து ஈச்சர் வண்டியில் பார்சல் எடுத்து வந்த வாகன ஓட்டுநர் முனியப்பன் மகன் வேலு(வயது 42) என்பவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.
அப்போது அங்கே மறைந்திருந்த மூன்று நபர்கள் வேலுவை மிரட்டி சுமார் 1000 ரூபாய் பணத்தையும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார். வேலுவின் புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை சி.சி.டி.வி. காட்சி மூலம் கண்டறிந்து தருமபுரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சார்ந்த சக்திகுமார்(19) , ஜெயசூர்யா(24), சையத் மன்சூர்(22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்