search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டரி திருட்டு"

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமம் அண்ணாநக ரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), லாரி உரிமையாளர். இவர் கடந்த 26-ந் தேதி 2 லாரிகளை கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது லாரிகளில் இருந்த பெரிய பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தணிகை வேல் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சேத்துப்பட்டு தாலுகா, மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (30), சிவா (29) ஆகியோர் பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பேட்டரிகள் திருடுவதற்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் தனியார் நிறுவன ஏ.டி.எம். 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி யூனியன் அலுவலகம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். நேற்று இரவு இருண்டு கிடந்தது. இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறமுள்ள கதவை திறக்க முடியவில்லை. அதில் ஏற்கனவே இருந்த பூட்டிற்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    அந்த அறையில் இருந்த இன்வெட்டர், பேட்டரி போன்ற மின் சாதனப் பொருட்களை காணவில்லை. இதனால் மின் விநியோகம் தடைபடும் போது ஏ.டி.எம்.ல் இருள் சூழ்ந்து பணிசெய்யாமல் போனதை கண்டறிந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். கொள்ளை யர்களின் கைவரிசையா? அல்லது பேட்டரி திருடர்கள் இதனை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் கேசவன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சம்பவத்தன்று கோச்சடை மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் லாரியில் இருந்த 2 பேட்டரிகளை திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் எஸ் .எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆரப்பாளையம் பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் மரியராஜ், பாலமுருகன் ஆகிய 2 பேர் பேட்டரி திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • 11 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஏடி.எம் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார்
    • ஏடி.எம் அறை உடைக்கப்பட்டு, அதில் உள்ள நான்கு பேட்டரி திருட்டு போய் இருந்தது.

    குனியமுத்தூர்,

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது36). இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஏடி.எம் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் .சம்பவத்தன்று சுந்தராபுரம் வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள தனியார் வங்கி ஏடி.எம்.மில் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இவரது உதவியாளர் வந்து பார்த்தபோது ஏடி.எம் அறை உடைக்கப்பட்டு, அதில் உள்ள நான்கு பேட்டரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ராஜ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ராஜ்குமார் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பேட்டரி திருடிய நபர்களை தேடி வருகின்றனர். 

    • காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர்.
    • பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டு க்கூடலூரை சேர்ந்தவர் முருகவேல். விவசாயி. நேற்று இவரது வீட்டில் நிறுத்தப் பட்டிந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர். இதை பார்த்த முருகவேல் மற்றும் கிராம மக்கள் பேட்டரி திருடர்களை மடக்கிபிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராஜாராம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வடலூர் அடுத்த ராஜாகுப்பம் வடக்கு தெரு தட்சணா மூர்த்தி (வயது 22), கருங்குழி மாரியம்மன் கோவில் தெரு விஜயராகவன் (22) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்து பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 பேரிடம் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

    செம்மஞ்சேரி:

    சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார்க்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழிங்கநல்லூர் கே.கே.சாலை வழியாக சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் கைப்பையுடன் சுற்றித்திரிந்ததை கண்டு அவர்கள் வைத்திருந்த கைபையை சோதனை செய்தனர். அதில் வாகனங்களின் பேட்டரிகள் இருந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சோழிங்கநல்லூரை சேர்ந்த லோகேஷ் (வயது 20), காரப்பாக்கத்தையை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய இருவரும் இரவு நேரங்களில் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

    பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
    • பொதுமக்கள் பேட்டரி திருடியவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் நால்ரோட்டில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று பயணிகள் ஆட்டோவில் 3 ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), திருப்பூர் சத்யாநகரை சேர்ந்த ஹக்கீம் (34), மங்கலம் சாலையை சேர்ந்த முகமது யூசுப் (31) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பேட்டரிகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்–த–னர்.

    ×